tag:blogger.com,1999:blog-26660185269604954782024-03-16T06:43:19.931+05:30கவிதை நேரம்சும்மா ஒரு முயற்சி..சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comBlogger182125tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-38197667982253835612024-02-27T21:51:00.001+05:302024-02-27T21:51:58.288+05:30நல்லாச்சி - 51
அவ்வைக்கிழவி நம் கிழவி

அருமை மிகுந்த பழங்கிழவி’

குரலெடுத்துப்பாடிக்கொண்டிருக்கிறாள் பேத்தி

வாய்க்காலில் அளைந்து விளையாடியவாறு

நல்லாச்சியோ

கொழுக்கட்டை மாவிலொரு கண்ணும்

பிடுங்கக்காத்திருக்கும் குரங்கின்மீதொரு கண்ணுமாக

சுள்ளி சேகரித்துக்கொண்டிருக்கிறாள்

அடுப்பெரிக்க

பச்சரிசி மாவும் தேங்காயும் வெல்லமுமாய்

பிணைந்து பிணைந்து பிசைந்துருட்டி

அடுப்பில் வேகும் கூழ்க்கொழுக்கட்டைகள்

வனாந்திரத்தையே நாவூறச்செய்ய

கருவறையில் காத்திருக்கிறாள்

ஓளவையாரம்மன்

அமுதம் பருக

கொழுக்கட்டை வாசனை தீண்டிச்செல்ல

பேத்தியின்

சின்ன மூளைக்குள்ளொரு சந்தேக மொட்டு விரிகிறது

ஓடோடி வருகிறாள்

குடைந்த கேள்விகளை

எடுத்து வீசுகிறாள் நல்லாச்சியிடம்

“அதியன் கொடுத்த நெல்லிக்கனி இவளுக்குத்தானே?

சுடாத பழம் போடென்று குமரனிடம் கேட்டவள் இவள்தானே?”

ஆமோதிக்கிறாள் நல்லாச்சி

‘எனில்

சுட்ட கொழுக்கட்டையா? சுடாத கொழுக்கட்டையா?

இச்சமயம் அவள் வேண்டுவது யாதென

எங்ஙனம் நாம் அறியக்கூடும்?

பல்லில்லாப் பாட்டிக்குப் பதமானது ஏது?’

விழிமலர்த்தி வினவும் பேத்திக்கு

பதிலுரைக்கா நல்லாச்சி

ஒளவையாரம்மன் என்ன சொல்வாளோவென

அமர்ந்திருக்கிறாள்

‘அவ்வைக்கிழவி நம் கிழவி

அருமை மிகுந்த பழங்கிழவி’

பாடியவாறே அடுப்புத்தள்ளுகிறாள் பேத்தி.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-44172552387731469832023-05-29T11:34:00.000+05:302023-05-29T11:34:50.663+05:30யானைப்பூச்சி

இத்தனை விகாரமாய்ப் படைத்திருக்க வேண்டாம்

நொந்து கொண்டபடி

ஆலமரத்தினடியில் சயனித்திருந்தது

மந்தையிலிருந்து பிரிந்து வந்துவிட்ட

புத்திளம் யானைக்கன்று

எதற்கென்றே தெரியாமல்

இரு பெரும் காதுகள்

இப்பிறவியில் மெலிய வாய்ப்பில்லா

மஹாகனம் கொண்ட பேருடல்

இடையிடையே இடையூறாய்

வந்து நெளியும் நீள்மூக்கு

தெண்ணீரில் தன்னுருவென

தான் கண்டதையெண்ணி

இன்னும் மனம் கலங்கிற்று

தாவும் மான் தொடங்கி தோகை மயில் ஈறாக

அதன்

அழுத கண்ணீர் துடைத்தன

ஆறுதல் தோற்று நின்றன

தூக்கத்தைத் துக்கம் வென்றெடுக்க

துக்கத்தைக் கொடும்பசி தோற்கடிக்க

அலமுறையிட்டு அழுதது யானைக்கன்று

அழுகையின் வீரியம் கூடுந்தோறும்

படபடத்த காதுகள்

அடித்துக்கொண்டு வானேகின உச்சநொடியில்

இப்போதெல்லாம்

அந்த யானைக்கன்று கலங்குவதில்லை

மலருக்கு மலர் தாவிக்கொண்டிருக்கிறது

தும்பிக்கையால் தேனுறிஞ்சியபடி.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-522533648259307342023-05-09T21:42:00.004+05:302023-05-09T21:45:42.553+05:30பூனையும் வினையும்..

நல்ல பூனைகளுக்கு இங்கே இடமுண்டா
வினவிக்கொண்டு வாசலில் நின்றதொரு பூனை

முகத்திலும்

பளிங்காங்குண்டுக்கண்களிலும்

சொட்டிய அப்பாவித்தனம் தவிர

இன்னொரு நற்சான்றிதழ் தேவையா என்ன

அதை உள்ளே அழைப்பதற்கு

வந்த நாள் முதலாய்

சிறு சோகமொளித்த அதன் சிரிப்பும்

ஏகாந்த வேளைகளில் எங்கோ வெறித்த

அதன் பெருமூச்சுகளும்

சமநிலை இழக்க வைத்தன என்னை

அறியும் ஆவலை ஊதிப்பெருக்கின

பற்றியெரிந்த ஓர் நாளில் வினவினேன் அதனிடம்

சுமந்தால் பாரம்

பகிர்ந்தால் தீரும்

என்னதான் உன் வேதனை என்றேன்

பழைய நண்பனைப் பிரிந்த வேதனை

சிந்தையைத் திருப்ப முயல்கிறேன் என்றது அது

ஆதிகாலம் முதலாய்

எம்முன்னோர் சொல்லிச்சென்ற வழிமுறைகளில்

ஒன்றிரண்டை

நானும் அதற்கு எடுத்துரைத்தேன்

முதற்கட்டமாய்

களையெடுத்துத் தோட்டம் திருத்தியது

வன்னமாய்ப்பூத்தன வண்ண மலர்கள்

அல்லியும் தாமரையும் மண்டின குளத்தில்

பின் வந்த நாட்களிலோ

அல்லிக்குளத்தின் வண்ணமீன்கள்

தடயமில்லாமல் மறையத்தொடங்கின

ஒன்றும் நினைக்கவில்லை நான்

முற்றத்துச்சுவர் தாங்கிய செயற்கை வீடுகளில்

குஞ்சுகளைப்பறி கொடுத்த குருவிகள்

கதறிப்பதறின

சின்னாட்களில் குருவிகள் இல்லாத என் வீடு

நிசப்த பூமியானது

பூனையின் முகம் தெளிந்திருந்தது இப்போது

சுவரிலிருந்த ஓவிய மீன்கள்

எலும்புக்கூடுகளாய் மிஞ்சிய ஓர் நாளில்

விசாரித்தேன் பூனையை

எல்லாம் உனக்காகத்தான் என்றது அது

குளத்தின் அழகைக்கெடுத்த மீன்கள்

எச்சமிட்டும் சத்தமிட்டும்

வீட்டை அழுக்காக்கிய குருவிகள்

அத்தனையும் அகன்ற பின்

சுந்தரச்சோலையாயிருக்கிறது பார் உன் வீடு என்றது

அகற்றப்பட்டவை என்னானதோவென

விசாரப்பட்டபோது

பாழாய்ப்போவதெல்லாம் பூனை வயிற்றிலே

என்றபடி மீசையை நீவிக்கொண்டது

அமைதியும் அழகும் கொண்டதோர் இல்லம்

அமைத்திருக்கிறேன்

எனக்கென்ன பரிசு எனக்கேட்டபோது

வாசலை நோக்கி விரல் சுட்டி விரட்டினேன்

நல்ல பூனைகளுக்கு

இங்கே இடமுண்டாவென வினவியபடி

உங்கள் வாசலிலும்

ஒரு பூனை தென்படக்கூடும்

தோற்றப்பிழையால் ஏமாறுவதும்

கும்பிடு போட்டு அனுப்பி வைப்பதும்

அவரவர் வினைப்பயன்.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-91749091928771258832023-03-27T11:33:00.001+05:302023-03-27T11:33:40.255+05:30குருவியும் சரக்கொன்றையும்

முதற் சரக்கொன்றை பூத்து விட்டது

அக்காக்குருவிகளைத்தான் காணவில்லை.

அலகு ஓய்ந்ததோ

அன்றி

களைத்து இளைத்ததோ

அக்காக்களைக் கண்ணுக்குள்ளேயே

வைத்திருக்கும் தங்கைகள்

தேடித்தட்டழிகிறார்கள்

இந்த மரத்தில் பூத்திருப்பது

சென்ற வருடம் கூவிய

அக்காக்குருவியின்

கீதமாக இருக்கலாம்

தங்கைகளின் ஏக்கமாக வழிவது

ஏதோ ஒரு வருடத்தின்

பூக்குவியலாகவும் இருக்கலாம்

சுள்ளிக்குவியலாய் இருக்கும்

மரத்தின்

பூவின் தனிமையும்

வனம் முழுக்க அக்கக்கோவென

தேடும் தங்கையின் தனிமையும்

ஒன்றென்றால் ஒன்றுதான்

வெவ்வேறென்றால் வேறு வேறுதான்

சொட்டும் குரலும் மகரந்தமும்

பரவும்

மண் மட்டும் என்றும் ஒன்றே போல்.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-32050547030968225012023-03-13T10:34:00.001+05:302023-03-13T10:34:22.518+05:30தேடல்

விழித்திருக்கும்

கைக்குழந்தைக்குத் துணையாய்

கொட்டக்கொட்ட

தானும் விழித்திருக்கிறார்

நோய்மை கிழித்துப்போட்ட ஒருவர்

புறப்புலன் மங்கி

அகப்புலன் தெளிவின்றி

சுய கட்டுப்பாடுமற்ற உடலர் இருவரில்

வந்த பாதை நினைவில்லை ஒருவருக்கு

போகும் பாதையோ

தெரியவில்லை இன்னொருவருக்கு

அகமும் புலனுமற்ற ஏதோவொரு

மாயவெளியில்

அளவளாவும் இரு ஆன்மாக்களும்

தத்தம் ரேகைகளை

அங்கே பரிமாறிக்கொண்டு பிரிகின்றன

ரேகையைப் பத்திரப்படுத்தும் பொருட்டு

கால் கட்டைவிரலை

வாயில் வைத்துக்கொள்கிறது குழந்தை

கையை இறுக்கிக்கொள்கிறார் வயதானவர்

ஒருவரையொருவர் அர்த்தத்துடன் நோக்கி

பொக்கைச்சிரிப்பைச் சிந்துகின்றனர் இருவரும்

அப்பிக்கிடக்கும் காரிருளில்

விரல்களைத்தேடுகின்றன ரேகைகள்.

கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-35951088785914690672023-03-07T13:03:00.004+05:302023-03-07T13:03:23.261+05:30வலி
ஒவ்வொரு முறையும்
ஒரு குளிர் அலையைப்போல்
வலி வந்து மூடும்போது

விதிர்விதிர்த்துத் துடித்தடங்கும் உடம்பில்

எங்கோதான் இருக்கிறது

உடல்நடுக்க மையம்

மெல்லெனக்கிளம்பி திடீர்க்கணத்தில்

பின்னந்தலையில் சொடுக்கும்

குரூர வலியிடம் இறைஞ்சுவதற்கு யாதுளது

கர்மாவோ கடனோ

அனுபவித்துக்கழிப்பதொன்றே செய்யக்கூடியது

ததும்பும் பேரன்புடன் வலி சொன்னது

நீ

எனக்கு அடிமையாயிரு

என்னை ஆராதி

தியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்

முடிந்தால்

புண்பட்ட உடலோ மனதோ

இன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்

வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்

உனக்கும் பொழுது போகும்

சிரங்குற்ற குரங்கின் கதையை

கேள்வியுற்றிருப்பாய்தானே நீ

ஆயுதங்களைப்போட்டு விட்டு

சரணடைந்து விடு

எதிரிகள் இல்லாவிடத்தில்

நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான்

இருப்பையுணர்த்தும் அவசியம் எனக்கு

உண்மையில்

உன்னை நானென்ன செய்ய வேண்டுமென்று

நீதான் தீர்மானிக்க வேண்டும்

கங்கையாய்த் தாங்குவாயா

அல்லது

முயலகனாய் அடக்கி வைப்பாயா

சட்டெனச்சொல்

காலம் சொட்டிக்கொண்டிருக்கிறது விரைவாக

யுகம் கழிந்தும் பதிலில்லாததால்

வலி

உடல்நடுக்கப்புள்ளியில் மையம் கொண்டது

ஒரு

கருக்குழந்தையாய்.

டிஸ்கி: திண்ணையில் வெளியானது. திண்ணையில் வரிகள் நான் அனுப்பியது போல் இல்லாமல் கொஞ்சம் முன்னே பின்னே பிரசுரமாகியிருக்கிறது.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-1009390606781810712023-03-01T23:45:00.003+05:302023-03-01T23:45:50.931+05:30எல்லாத்துறையிலும் ஒரே கடல்..

எந்தக்குளத்தில் பூத்தாலென்ன

எல்லாத்தாமரைக்கும்

ஒரே மணம்

எந்த உலையில் வெந்தாலென்ன

எல்லா அரிசியிலும்

ஒன்று போல்தான் பசி தீர்கிறது

எல்லாத்தாய்களும் ஒருவளே

குழந்தையின் பசி உணர்வதில்

எந்தத்துறையில் முங்கினாலென்ன

எல்லாத்துறையிலும் ஒரே கடல்

எல்லாச்சாளரங்களின் வழியும்

நுழைகிறது காற்று

உன் என் வியர்வையை ஆற்ற

எல்லாமும் சேருமிடம்

ஒரு புள்ளியில்

பரந்து பிரிவதும் அங்கிருந்தே

பலவற்றிலிருந்து ஒடுங்கியிணைந்தவையெலாம்

சிதறிப்பறக்கின்றன

ஒன்றுதான் ஒன்றுதான் என்றபடி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-27223735500109682112023-02-24T22:23:00.002+05:302023-02-24T22:23:43.131+05:30நல்லாச்சி - 50

அன்னையின் செல்வமா

நீ தந்தையின் செல்லமா

அம்மையா அப்பனா

உன் விருப்பம் யாரோ

பல்லாண்டுகளாய் குழவிகளிடம்

வைக்கப்படும் கடுவினா

பேத்தியின் முன்னும்

வைக்கப்பட்டது அன்றைய தினம்

சேவை செய்தே பொழுது கழித்து

உளம் களிக்கும்

நானே அவள் தேர்வு

என்கிறாள் அன்னை

விரும்புவனவெல்லாம் காலடியில் கொட்டும்

பெரும்பக்தன் என்னையே

தேர்வாள் என் தெய்வம்

என்கிறான் அப்பன்

திருவுளச்சீட்டு தேர்ந்த முடிவை

எதிர்நோக்குவதுபோல்

பேத்தியின் திருவாய்மொழிக்காய்

ஆவலுடன் ஊரார் காத்திருக்க

நல்லாச்சியைச் சுட்டுகிறாள் அவள்

அன்னையும் அப்பனும்

பேசும் தெய்வங்கள்

அணைத்தலும் இலைமறைகாயாய் சினத்தலும்

அவ்வியல்பே சிறுகோடாய் இடைநிற்பதும்

தேர்வுக்குத் தடை நிற்கிறதாம்

நல்லாசிரியையாய் பக்தையாய்

அடைக்கலம் தரும் மடியாய்

மனம் திறக்கும் சாவியாய்

யாவரிலும் மேலான களித்தோழியாய்

ஏதும் எதிர்பாரா பெருவுள்ளத்தாளாய்

அன்னையிலும் மேலான பேரன்னை

அவளே என் தேர்வு என்கிறாள் பேத்தி

நெக்குருகி நிற்கிறாள் மூதன்னை.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-57735112386422066152023-01-28T17:31:00.004+05:302023-01-28T17:31:33.445+05:30நல்லாச்சி - 49

தொழுவம் நிறைந்த மாடு கன்றுகளும்

தோட்டம் நிறைந்த செடிகொடிகளுமாய்

செழித்துப் பொங்கியிருக்கிறது நல்லாச்சி வீடு

தோட்டத்தில் பூத்தவை போக

முல்லை மல்லி செண்பகம் ரஞ்சிதமென

தொழுவத்திலும் பூத்து கன்றுடன் நிற்பவற்றில்

கருப்பில் வெள்ளை தெளித்த

பிச்சிவெள்ளை மட்டும் பேத்தியின் பெருவிருப்பம்

மந்தையிலிருந்து வீடுபுகுந்ததும்

பேத்தியின் வாசம் தேடுவது அதற்கு வாடிக்கை

துணியோ சோப்போ

வாயிலகப்பட்டதைக் சவைத்துத் துப்புவதும்

ஹமாமை மட்டும் மென்று விழுங்குவதும் கூட

அதற்கு வாடிக்கையே

மூவந்தி மயங்கியும் வீடு சேராத பிச்சிவெள்ளைக்காய்

வாசல் நெடுக நடந்து தேய்கிறாள் நல்லாச்சி

முன்னங்கால் வீங்கி வந்து சேர்கிறது பிச்சிவெள்ளை

பயிர்பச்சை நாடிப் படுவப் பத்திலிறங்கிய பசுவை

பக்குவமாய் மீட்ட கதை சொல்கின்றனர் மீட்பர்

கனத்த மனதுடன் வைது கொண்டே

பண்டுவம் பார்க்கிறாள் நல்லாச்சி

செங்கரும்புத் தோகை மென்முள் அப்பிய கையை

முதுகின் பின்னொளித்துத் திருதிருக்கிறாள்

தன் முறை வரக் காத்திருக்கும் பேத்தி.

சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-47862222130912597692023-01-20T13:56:00.006+05:302023-01-20T13:56:50.097+05:30நல்லாச்சி - 48

கழுத்து கொள்ளா சம்பங்கி மாலைகளோடு

அவளுக்குப்பிடித்த மல்லிகை ஆரங்களும்

தாள் தோயும் ரோஜாமாலையுமாக

இறுதிப்பயணம் கிளம்பிவிட்டாள் பெரியாச்சி

அன்னையின் கை தொட்டு கால் தொட்டு

முகம் வருடி தலை கோதி

முன்னுச்சியிலோர் முத்தமும் பதித்தபின்

தன்னுயிரை ஊட்டி வளர்த்தவளை

ஆறா உள்ளத்துடன் வழியனுப்புகிறாள் நல்லாச்சி

தூரா ஊற்றென விழிநீர் கொப்பளிக்க

பாசத்தில் வழுக்கி நினைவுகளில் தோய்ந்து

கிடக்கிறாள் ஒரு மூலையில்

அன்னையின் பழம்புடவையுடன் பிதற்றியபடி

சகலமும் மங்கி

மெல்லடி வைத்து வரும் பேத்தி

மடியேந்திக்கொள்கிறாள் நல்லாச்சியை

'பூட்டியாச்சி கடவுளின் வனத்தில்

பூக்கொய்யச் சென்றிருக்கிறாள்

நற்பூ கொண்டு அவள் வரும்வேளை

கூம்பியிருத்தலாகுமா உன் முகமலர்'

சொற்பூ கொண்டு ஒத்தடமிட்டு

ஒரு வாய்ச்சோறூட்டும் பேத்தியிடம்

அடைக்கலமாகிறாள் நல்லாச்சி

'என்னப் பெத்தாரு

எங்க அம்மையில்லா'

இனியாங்கே

உதிராது கண்ணீர்ப்பூக்கள்

பற்றிக்கொள்ளவோர் சுண்டுவிரல்

வாய்த்து விட்டது நல்லாச்சிக்கு.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-43756623802616109852023-01-20T13:43:00.003+05:302023-01-20T13:43:57.646+05:30நல்லாச்சி - 47

வேப்பிலைப்பொடியும் மாவிலைப்பொடியும்

கலந்தெடுத்துத்

தூபம் போடுகிறாள்

வேப்பெண்ணெய் நிறைந்த சிற்றகல்களை

ஒவ்வோர் அறையிலும் ஏற்றுகிறாள்

அண்டைஅயலார் உரைத்தபடியெலாம்

உபாயங்கள் கைக்கொண்டு

எதற்கும் இருக்கட்டுமென

துளிச்சொட்டு மருந்தையும்

பேத்தியின் ஆடையோரம் தெளித்து

வீட்டையே அதகளப்படுத்துகிறாள்

பேத்தியின் கன்னத்தில்

சிறு தடிப்பு கண்ட நல்லாச்சி

அத்தனைக்கும் தப்பி

காதோரம் ரீங்கரித்துப்பாடும் கொசுவை

ஏதும் செய்யமாட்டாமல் குமையும்

நல்லாச்சியிடம்

கூட்டாக எசலுகின்றனர் தாத்தாவும் பேத்தியும்

இந்தக் கொசுத்தொல்லை தாங்கவில்லையென.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-79340015720600051162023-01-20T13:03:00.003+05:302023-01-20T13:03:52.320+05:30நல்லாச்சி - 46

பச்சரிசிப் பொங்கலும் பல காய்க் குழம்புமாக

முதல்நாள் கொண்டாடியாயிற்று

தவுனுக்கு வாயூறிய பேத்தியின் மனதை

சுட்ட பனங்கிழங்கு கொண்டு

ஆற்றுகிறாள் நல்லாச்சி

துள்ளும் செல்லக்கன்றின்

கழுத்தணைத்துக் கொஞ்சி

அடக்கிவிட்டதாய் ஆர்ப்பரிக்கும்

பேத்திக்குப் பரிசாய் விரலில் விழுகிறது

ஆச்சியின் நெளிமோதிரம் இரண்டாம் நாளில்

கடவம் நிறைந்த கரும்புச்சக்கைகளை

அடுப்பெரிக்க ஆகுமென்று

வெயில் நனைக்கும் முற்றத்தில்

பரப்பும் நல்லாச்சியிடம்

காதல்மணம் கொண்டதால் ஆகாதவர்களான

மாமனையும் அத்தையையும் கண்டால்தான்

காணும்பொங்கலும் நிறைவுறுமென

சொல்ல வந்தவை திக்கி

நிலைகொள்ளாமல் நிற்கிறாள் பேத்தி

அறியாத நல்லாச்சி

உடைத்து நீட்டுகிறாள் இன்னொரு கரும்புத்துண்டை

வழக்கம்போல் இவ்வருடமும்

காணாமலேயே கழியப்போகிறது

காணும் பொங்கல்
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-23898934743275532612023-01-07T00:56:00.005+05:302023-01-07T00:56:43.242+05:30நல்லாச்சி - 45முத்துப்பந்தலின் கீழ்
ஒரு வைரமென

நட்சத்திர விதானத்தின் கீழ்

சயனித்திருக்கிறாள் பேத்தி

நல்லாச்சியின் மேல் கால் போட்டுக்கொண்டு

முல்லை வாசனை சுமந்து வரும்

மந்தமாருதத் துணையுடன்

சின்னவளைத்தூங்க வைக்க

எடுத்து விடும் கதைகளெல்லாம்

ஒவ்வொன்றாய்த் தோல்வியுற

உம் கொட்டியபடி சின்னவளும்

கொட்டாவியை மென்றபடி பெரியவளும்

மேலும் பல கதைகளைக் களமிறக்குகின்றனர்

தானும் சொல்லப்போவதாக

அறிவித்த பேத்தி

இடைவெளியில்லாக் கதைகளை

இஷ்டத்துக்கு அளந்து விடுகின்றாள்

சொல்லடுக்கி அடுக்கி அவள் சமைத்த கதைகளில்

கற்பனா ரசம் பொங்கியோட

வானம் வரை பெரிய ஆப்பிள் காய்க்கும் மாமரமொன்று

தம் தோட்டத்திலிருப்பதை

ரகசியமாய் அவள் சொன்ன சமயம்

விழிகள் விரியக் கேட்டுக்கொண்டிருந்தது நிலவு.

நல்லாச்சியும் தென்றலும் உறங்கி

இரு ஜாமங்களானபடியால்

அவ்விருவரும் அதை அறியக்கூடவில்லை

ரகசியங்களை

ஒரு செல்லப்பூனையைப்போல் பராமரித்து வரும்

குழந்தைகளே

அவற்றைப் பிறரிடம் காட்டிப் பெருமையும் கொள்வர்

ஆகவே

நீங்களும் சொல்லி விடாதீர்கள்.

சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-58513200304056498982023-01-07T00:12:00.007+05:302023-01-07T00:12:54.304+05:30நல்லாச்சி - 44
"ஓரி உலகெலாம்.... உலகெலாம் சூரியன்"

நல்லாச்சி கற்றுத்தந்த பாடலை

மனனம் செய்தபடி

ஏழாங்கல் விளையாட முயல்கிறாள் பேத்தி

பாடல் வரிகள் வசப்படும்போது

கற்கள் நழுவுவதும்

கற்களை அள்ளும்போது

பாடல் மறப்பதுமாக

கவனப்பிசகில் தவிப்பவளிடம்

கவனக்குவிப்பிற்கு

விளையாட்டுமொரு பயிற்சியே என அறிவுறுத்துகிறாள் நல்லாச்சி

பயிற்சி வகுப்புகளின்றி

ஆயிரக்கணக்கில் கட்டணமுமின்றி

ஆங்கோர் முன்னேர்

பின்னத்தி ஏரைத் தயார் செய்கிறது

கடமையில் கருத்தாய்.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-43970394787298635562023-01-07T00:11:00.005+05:302023-01-07T00:11:40.018+05:30நல்லாச்சி - 43
வெண்டையை நுனி ஒடிக்காமல்

புடலை சுரைகளை நகத்தால் அழுத்தாமல்

காளையைக்கூட சாட்டையின்றி

தட்டிக்கொடுத்து

பக்குவமாய்க் கையாளும் தாத்தா

வீட்டு மனிதர்களிடம் மட்டும்

வன்முகத்தைக் காட்டுவது

ஏனெனக் குமைகிறாள் பேத்தி

பேச்சற்று தாத்தா நழுவி விட

பதிலற்று நல்லாச்சி ஊட்டிய பால்கஞ்சி

அன்று

சற்றே உப்புக்கரித்தது.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-39480672666687956692023-01-07T00:10:00.003+05:302023-01-07T00:10:28.076+05:30நல்லாச்சி - 42
தர்க்கம் விழாமல்

பசுவும் நிறைகுழியுமாக

முத்துக்களை அள்ளும் நல்லாச்சியை

அதிசயித்துப் பார்க்கிறாள்

பல்லாங்குழியை முன்பின் கண்டிராத பேத்தி

ஆட்டம் துவங்கிய சில நொடிகளிலேயே

எதிராளியை

வெறும் குழிகளுடன் நிற்கச்செய்த

நல்லாச்சியின் சாமர்த்தியத்தை

வியக்கும் பேத்தியிடம்

ஆச்சி ஒருநாளும் சொன்னதேயில்லை

வியாபார காந்தங்களாக

மாற நினைத்த மகன்களிடமிருந்து

பெரும்பான்மை சொத்தைக்

காப்பாற்றவியலா

தன்னுடைய கையறுநிலையை.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-40625710123950001262023-01-06T19:47:00.000+05:302023-01-06T19:47:17.494+05:30நல்லாச்சி - 41

நல்லாச்சியின் முந்தானை பிடித்து

தோட்டந்துரவெங்கும் சுற்றிவருகிறாள் பேத்தி

ஒவ்வொன்றையும் ரசிப்பதோடு

இதென்ன அதென்ன

எங்கிருந்து வந்தவை இவையென்ற

கேள்விகள் வேறு அவளிடம்

ஒவ்வொன்றின் பிறவி வரலாற்றையும்

அலுக்காமல் கேட்கும் பேத்திக்கு

சலிக்காமல் பதிலிறுக்கிறாள் நல்லாச்சி

விதையிலிருந்து முளைப்பவை

கொப்பிலிருந்து தளிர்ப்பவை

என்பவற்றோடு

ஈன்று பெருகுபவை குறித்தும் விளக்கிய நல்லாச்சி

இப்போது

சோதிக்கிறாள் பேத்தியை

கீரை விதையும் முருங்கம் போத்தும்

எளிதில் இனங்கண்ட பேத்தி

தக்காளி கத்தரி நாற்றுகளை

சற்றே குழம்பி கண்டறிகிறாள்

இவையென்ன என்ற

ஆச்சியின் கேள்வியைத் தொடர்ந்த பேத்தி

கண்கொட்டாமல் பார்த்தபடி சொல்கிறாள்

'கோழிவிதைகள்' என

பொரிந்து வெளிவர ஆரம்பித்திருந்த குஞ்சுகள்

கீச்சுக்கீச்சென்று ஆமோதிக்கின்றன.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-90589140064687330362022-12-22T16:43:00.000+05:302022-12-22T16:43:04.991+05:30நல்லாச்சி - 40

வெற்றிலையுடன்

வம்பையும் சேர்த்து மெல்லும்

செல்லாச்சி வருகிறாள் தடியூன்றி தெருவில்

ஈ காக்காயெல்லாம்

இதோ பரதேசம் போகிறேனென

ஓடியொளிய

அப்பாவி நல்லாச்சி அகப்பட்டாள்

அன்றைய ஆட்டுக்குட்டியாய்

வட்டச்சம்மணமிட்டமர்ந்து

நல்லாவிடம் பேச்சு வளர்க்கிறாள் செல்லா

நாவில் சொல் வைத்து

நன்றாய்த்தான் வீசுகிறாள் தூண்டிலை

பேச்சால் வலை விரித்து

மான் சிக்கக் காத்திருக்கிறாள்

எண்ணிச் சொல்லெடுத்த நல்லாச்சி

கண்ணாடிப்பாத்திரம் கையாளும் லாவகத்துடன்

ஆய்ந்தாய்ந்து அனுப்புகிறாள் வாய்ச்சொல்லை

நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது எல்லாம்

குறும்பு செய்த பேத்தியை

அம்மா கண்டிக்கும் வரை

தன்னிலை மறந்த நல்லாச்சி

செல்லப்பேத்திக்காய் பரிந்து பேச

அவல் கிடைத்த திருப்தியுடன்

கிளம்புகிறாள் செல்லாச்சி

'ஐயோ போச்சே' என

தலை பற்றி அமர்கிறாள் நல்லாச்சி

குழந்தைக்குறும்பு

மாமி மருகள் தகராறாய் உருப்பெருகிப் பரவுமேயென

மருகுகிறாள் நல்லாச்சி

அலங்கமலங்க விழிக்கின்றனர் அம்மையும் மகளும்.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-33604913511518563792022-11-24T13:01:00.000+05:302022-11-24T13:01:38.468+05:30 நல்லாச்சி - 39

பூக்கவுமில்லாம காய்க்கவும் செய்யாம

மரம் மாதிரி எதுக்கு நிக்கே?

சூடு சொரணை இருக்கா ஒனக்கு?

திட்டியபடி முருங்கை மரத்தை

துடைப்பத்தால் சாத்துகிறாள் நல்லாச்சி

பாவம் மரமெனப் பதறுகிறாள் பேத்தி

ஒண்ணுமில்ல மக்கா

பலன் கொடுக்காத தாவரத்துக்கு

செய்யற சாங்கியந்தான் இதுவென

சமாதானப்படுத்தியபடி

ஒற்றைச்செருப்பைக் கட்டித்தொங்கவிட்டு

கட்டிப்பெருங்காயத்தைப் புதைத்து

தேமோர் கரைசலையும் தெளித்து விட்டு

பெருமூச்சுடன் நகர்கிறாள் நல்லாச்சி

சின்னாளிலேயே

கொள்ளாத காய்களுடன் நிறைந்த மரம் கண்டு

சரஞ்சரமா சடை பிடிச்சுக்காய்ச்சிருக்கு

பறிச்சு முடியலை என

சந்தோஷமாய் அலுத்துக்கொள்ளும் நல்லாச்சியிடம்

மூச்சு விடவில்லை பேத்தி

காலையும் மாலையும் அவள்

காம்ப்ளான் ஊற்றி வளர்த்த உண்மையை

அத்தனையையும் கவனித்த

மூணாம் வீட்டு செல்லம்மாச்சி

வாரிசுக்காக நாளும்பொழுதும் மருமகளை

வதைப்பதை விட்டு

ஆஸ்பத்திரிக்கு முடுக்குகிறாள்

மருமகளையும் மகனையும்.

சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-16138672696420790402022-11-24T12:25:00.001+05:302022-11-24T12:25:24.748+05:30 நல்லாச்சி - 38

வெள்ளரளியும் செவ்வரளியும்

கலந்தொரு மாலை கண்டத்தில்

வெண்டாமரை மொட்டுகள் கோர்த்தவொன்று

நெஞ்சிலாடுகிறது

முற்பிறப்பின் பயனாய் வெள்ளைரோஜாக்கள்

வயிற்றைத் தரிசிக்க

போதாதென சம்பங்கி மாலையொன்று

இடைதழுவ

முழந்தாளைத்தொடுகிறது

பன்னீர்ப்பூ ஆரம்

இத்தனையுமிருந்தும்

தாள்தோயும்

முல்லை மல்லிகை நிலமாலை எங்கேயென

சந்நதம் வந்தாற்போல் சீறுகிறான்

தெய்வகுற்றமெனக் குழைகிறானொருவன்

சேலையைப் பற்றியிழுத்துக்

குறிப்புணர்த்தும் பேத்திக்கு

விளக்குகிறாள் நல்லாச்சி

பக்தரின் முன்கோபம் தணிவிக்க

நடக்கும் நேர்ச்சை இதுவென

இத்தனை வெண்மலர்களிலும் தணியாததையா

ஒரு நிலமாலையில் தணிவித்து விடும் தெய்வம்?

எனப் பரிகசிக்கும் பேத்தியின் வாயை

சர்க்கரைப்பொங்கலால் அடைத்து

அப்பால் இட்டுச்செல்கிறாள் நல்லாச்சி

மலர்களின் நறுமணத்தில்

கிறங்கி நிற்கிறது தெய்வம்

வேண்டுதல் இன்னவென்று கிரகிக்காமல்.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-23985102487131146382022-10-12T19:53:00.004+05:302022-10-12T19:53:27.644+05:30நல்லாச்சி - 37

பன்னிரு கரம் விரித்து

உக்கிரமாய் ஆடிவருகிறாள் கருங்காளி

இட்ட அடிக்கும் எடுத்த அடிக்கும்

தோளில் புரளும் மாலை மலர்தூவ

செந்நாக்கு துருத்தி

சீறும் கண்களையுருட்டி

விண்ணிலுயர்ந்த பாதம் கலீரென

வீதிவலம் வரும் அவளைக் காண்பித்து

பேத்திக்குச்சோறூட்டுகிறாள் நல்லாச்சி

அவளிடம் பிடித்துக் கொடுத்து விடுவதாக

பயமுறுத்தி

அருகி வந்ததும் கண்ணுற்ற காளி

செந்நாவை அகற்றிவிட்டுக்

குசலம் விசாரிக்கிறாள் நல்லாச்சியிடம்

பிஸ்கட் வாங்கித்தருவதாக

கைப்பிடித்துச் செல்லும் காளியுடன்

குதித்து நடக்கிறாள் பேத்தி

காளியை விட உக்கிரமாய்

முறைக்கிறாள் நல்லாச்சி.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-16880591877023890132022-10-12T19:45:00.000+05:302022-10-12T19:45:32.605+05:30நல்லாச்சி - 36

பக்கத்து ஊரில் ஒரு திருமணம். அன்றைக்கென்று முக்கியமான ஒரு வேலை வந்துவிட்டதால் தாத்தா "பேத்திப்பொண்ணும் நீயும் மட்டும் போய்ட்டு வாங்க" என நல்லாச்சியிடம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். சும்மா வீட்டிலிருக்கும் பொழுதுகளிலேயே பேத்தியை அலங்கரித்து அழகு பார்க்கும் நல்லாச்சி, கல்யாண வீட்டுக்குப் போவதென்றால் வாய்ப்பை விடுவாரா என்ன?

பட்டுப்பாவாடை, அதற்குப் பொருத்தமான சட்டை, ஜொலிக்கும் நகைகள், நெத்திச்சுட்டி, கலீர்கலீரெனச் சிணுங்கும் காெலுசுகள், மணக்கும் மல்லிகைப்பூ என தன் கைவண்ணத்தையெல்லாம் காட்டி பேத்தியை அழகுபடுத்தினார். "ஆச்சி, போறும்.." எனச் சிணுங்கிய பேத்தியை "சும்மாரு புள்ள.." என அடக்கியவர் பட்டும்படாமலும் ஒரு திருஷ்டிப்பொட்டையும் வைத்துவிட்டு பேத்தியை அழைத்துக்கொண்டு கிளம்பினார்.

செல்லும் வழியில் "ஆச்சியும் பேத்தியும் எங்க சோடி போட்டுக்கிட்டுக் கிளம்பியிருக்கியோ?" என விசாரித்தவர்கள் பேத்தியின் அலங்காரத்தையும் அழகையும் அணுவணுவாய் உற்றுப்பார்த்ததைக் கவனிக்கத் தவறவில்லை ஆச்சி. கல்யாண வீட்டிலும் கிட்டே வந்து உள்ளன்போடு விசாரித்தவர்களைத் தவிர ஒரு சிலர், "பட்டுப்பாவட உடுத்துனாதாம் பொம்பளப்புள்ள லெச்சணமா இருக்கு. இந்த நெக்லசு எத்தன பவுனு? மவன் வெளிநாட்டுலேர்ந்து கொண்டாந்தானா?" எனக் கேட்டபடி கையிலெடுத்துப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் நகர்ந்ததையும் மனதில் வைத்துக்கொண்டாள்.

மணமக்களை வாழ்த்திவிட்டு, விருந்துண்டு வீட்டுக்கு வந்தவள், வீட்டு முற்றத்தில் பேத்தியை கிழக்கு நோக்கி நிற்க வைத்துவிட்டு, "இன்னா வாரேன்" எனச் சென்றவள் ஒரு பொட்டலத்துடன் திரும்பினாள்.

உப்பும் மிளகும்

கடுகும் காய்ந்த மிளகாயும்

அள்ளியெடுத்த முச்சந்தி மண்ணும்

கூட்டிப்பொதிந்து

கண்ணேறு கழிக்கிறாள் நல்லாச்சி

அங்கமெலாம் பையத் தடவி

வயிற்றில் சற்றே அழுத்தித் தடவி

ஏதோ கேட்க முற்படும் பேத்தியை

கண்ணால் அடக்கி

இடவலமாகவும் எதிர்ச்சுற்றாகவும்

ஏற்றியிறக்கி

விரித்த பொட்டலத்தில்

மென்மையாய் மும்முறை துப்ப

சைகை காட்டி

காத்து கருப்பு அண்டாதிருக்கட்டும்

என்றபடி போடுகிறாள் கனலில்

பொட்டலத்துக்குப் போட்டியாய்ப்பொரிகிறாள்

காற்றடைத்த பலூனென

காத்துக்கும் கருப்புக்கும் விளக்கம் வேண்டி

அதுகாறும் குதித்த பேத்தி

'பொறாமை கொண்டோரின்

பெருமூச்சுதான் காற்று

கெடுமதியாளரின் நிழல் இங்கே கருப்பு

இவ்விரண்டும் அண்டாமல்

நல்லோர் சூழ வாழிநீ'

என வழுத்துகிறாள் நல்லாச்சி

தெளிந்து குளிர்கிறாள் பேத்தி.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-54468530485008141892022-08-29T17:00:00.001+05:302022-08-29T17:08:20.664+05:30நல்லாச்சி - 35

"இரவும் பகலும்

எப்படி வருகிறது ஆச்சி"

நல்லாச்சி மடியில் மல்லாக்கப்படுத்துக்கொண்டு

கேட்கிறாள் பேத்தி

"கடவுள் ஊட்ல

சுச்சு போட்டா பகலு

அமுத்துனா ராவு அவ்வளவுதான்"

பதிலுறுத்தாள் நல்லாச்சி

இருள்பிரியாது நீண்ட

குளிர்கால இரவொன்றில்

பொறுமையிழந்த பேத்தி சொல்கிறாள்

"கடவுள் வீட்லயும்

பீசுகட்டய புடுங்கிட்டாவோ போலுக்கு

பில்லு கட்டலயோ"

ஞேயென விழிக்கிறாள் நல்லாச்சி

வெளிச்சம் வரக் காத்திருக்கிறாள் பேத்தி.
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-29594545601189940262022-08-28T16:50:00.001+05:302022-08-29T17:01:59.006+05:30நல்லாச்சி - 34

"ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை

அழிக்கறவனுக்கு ஒரு நிமுசந்தான்"

சொலவம் சொல்லியவாறு

வெற்றிலை போடத்துவங்குகிறாள் நல்லாச்சி

பாக்கு இடிபடுகிறது உரலில்

செத்தோல இழுவுகிறாள் சுண்ணாம்பை

காம்பும் நுனியுமற்ற வெற்றிலையின் முதுகில்

மூன்றையும் வாய்க்குள் அடக்கிய

ஒரு நிமிடத்தில்

சிவக்கிறது வாய்

நிறைவுறுகிறது நெஞ்சம்

கண்கொட்டாமல் கவனித்திருந்த பேத்தி

ஆமாமென ஆமோதிக்கிறாள் ஆச்சியின் கூற்றை

வெற்றிலை விளைய எத்தனை நாளோ

கமுகு பழுக்க எத்தனைக் காலமோ

சுண்ணாம்பு பக்குவப்பட எத்தனைப் பொழுதோ

அத்தனையையும் ஒரு நிமிடத்தில் மென்றுவிட்டாயே

வாய்க்குழம்பு சிதறாதிருக்க அடக்கிய சிரிப்பால்

புரையேறுகிறது ஆச்சிக்கு

நமுட்டுச்சிரிப்புடன் அகல்கிறாள் பேத்தி
சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2666018526960495478.post-40600448828377888682022-08-18T16:38:00.002+05:302022-08-18T16:38:40.716+05:30கேட்டதும் கிடைத்ததும்..

முந்நூறு கிராம் சர்க்கரைப்பொங்கலும்

மூன்று முழம் பூவும் படைத்து

வேண்டிநிற்கிறான் பக்தன்

மூன்றுலட்ச ரூபாய் லோன் பாசாக

தொகையைக்கேட்டு திகைத்த தெய்வம்

காணிக்கையை யோசிக்கவாரம்பித்தது

சுற்றுப்பட்டு நகரத்துசாமிகள் தம் பெருமையாய்

உருள்பெருந்தேரும்

பூப்பல்லக்கும் சப்பரமும் கொண்டிருக்க

பின்னிருக்கும் காட்டுச்சுனையில்

தானோர் தெப்பஉலாவேனும் காண வேண்டாமா?

தெய்வத்தின் பட்டியல் நீண்டுசென்ற பொழுதில்

இடைமறித்தது பக்தையின் குரல்

"லோனு பாசானாத்தான்

புள்ளைக்கி மால பூக்கும்

கருணை காட்டப்பா"

ஆசையும் பரிவும்

துலாக்கோலில் நின்றாட

சட்டென பரிவின் கனத்தைக் கூட்டியது தெய்வம்

"பெண்ணடி பாவத்தைக் கையேந்தி

இன்னும் தும்பம்படவா இந்தக் காட்டுக்குள்ள?

பல்லக்கும் தெப்பமும்

பசையுள்ள பக்தனைச் செய்ய வைப்போம்"

சிரசில் சூட்டிய மலரை வீழ்த்தி

நற்சகுனம் காட்டிய தெய்வத்திடம்

காணிக்கையாய்

கூரை போட்டுத் தருவதாய் வாக்களித்த பக்தனை

வாஞ்சையுடன் நோக்குகிறது

பழம்பட்டைப் போர்த்தி கூதலில்

நடுங்கியமர்ந்திருக்கும் தெய்வம்.

சாந்தி மாரியப்பன்http://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com0