புதினத்தையும்விட
சுவாரஸ்யமாகவேயிருக்கிறது;
ஜன்னல்களினூடே விரியும்
யாருமற்ற ஏகாந்தவெளியில்,
ஒன்றையொன்று துரத்தும்
ஜோடி மைனாக்களின்
கொஞ்சல்களுடன் கூடிய சிறகடிப்பும்,..
காற்றில் வழிந்துவரும்
ஒரு
புல்லாங்குழலென
மழலையின் நகைப்பும்...
வானுக்கும் பூமிக்குமான நீர்ப்பந்தலில்
உற்சாகப்பூங்கொத்துடன்
மகிழ்வானதோர் உலகத்தை அறிமுகம் செய்து,
சில்லென்று குளிர்வித்துப்
போகிறபோக்கில்
வானவில்லில்
இன்னொரு நிறத்தையும் செருகி
மற்றொரு அற்புதத்தையும்
தெளித்துப்போகிறது மழை...

நல்லா இருக்கு
ReplyDeleteஜன்னலுக்கு வெளியிலே மழை - மானிட்டர்லே உங்க கவிதை...:-)
ReplyDeleteநல்லாருக்கு..கவிதை தொகுப்பு எப்போ?
ரசிச்சேன்
ReplyDeleteரொம்ப அருமையா இருக்கு சாரல் :)
ReplyDelete//எந்தவொரு
புதினத்தையும்விட
சுவாரஸ்யமாகவேயிருக்கிறது //
அட்டகாசம்.. ரொம்ப ரசிச்சேன் :)
//போகிறபோக்கில்
ReplyDeleteவானவில்லில்
இன்னொரு நிறத்தையும் செருகி
மற்றொரு அற்புதத்தையும்
தெளித்துப்போகிறது மழை...//
இதமான சாரலாய் கவிதை. மிக அருமை.
எங்கே பார்த்தாலும் மழை தான் பெய்யுது .. நால்லாயிருக்கு
ReplyDeleteகவிதை உங்கள் பெயர்போலக் குளிர்ச்சியாய் !
ReplyDeleteவாங்க எல்.கே,
ReplyDeleteவரவுக்கு நன்றி.
வாங்க முல்லை,
ReplyDeleteஅதுக்கு நான் இன்னும் ரொம்பதூரம் போகவேண்டி இருக்குதுங்கோ :-))))
நன்றி.
வாங்க தென்றல்,
ReplyDeleteநன்றிங்க.
வாங்க பாலாஜிசரவணா,
ReplyDeleteரொம்ப நன்றிங்க :-)
வாங்க ராமலஷ்மி,
ReplyDeleteநன்றிங்க..
கவிதைசாரலால் கனமழைபொழியுது.
ReplyDeleteசூப்பர்..
வாங்க வெறும்பய,
ReplyDeleteநன்றி..
வாங்க ஹேமா,
ReplyDeleteநன்றி..
வாங்க மலிக்கா,
ReplyDeleteநன்றி..
உற்சாகமான கவிதை.
ReplyDeleteமழையில் சில்லென்று நனைந்தது
போல இருக்கிறது.
வாங்க ஸ்ரவாணி,
ReplyDeleteவந்து வாசிச்சதுக்கு நன்றிங்க :-)