Pages

Monday, January 24, 2011

கைவரப்பெறாமல்..


எதையாவது எழுத நினைத்து
எதையாவது
கிறுக்கிவைக்கிறேன்..
கண்ணாடித்திரைக்கப்பால்
கண்சிமிட்டும்
கோஹினூரென
கைவரப்பெறாமலே,
சுற்றிச்சுழன்றடிக்கும்
கனவுமண்டலத்தின் பெருவெளியில்
சுதந்திரப்பறவையாய்...
நீந்திச்செல்கிறது ஒரு கவிதை..
சலனமற்றிருந்த மனக்குளத்தில்
அலையெழுப்பிய கல்லால்
வரிசையற்றலையும் எழுத்தெறும்புகள்
கலைந்தோடுவதை
வேடிக்கை பார்த்தபடி..

டிஸ்கி: இந்த கவிதையை வெளியிட்ட கீற்று இணைய இதழுக்கு நன்றி.

12 comments:

  1. \\ Leave your comment

    கவிதை சொன்னவர்கள்.//

    ஹை
    கமெண்ட் கவிதை
    சுதந்திரமாய் ஒரு பறவை
    எழுதுது தன் கவிதை.

    ReplyDelete
  2. சாரல் வழக்கம் போல் அருமை.

    ReplyDelete
  3. வாங்க முத்துலெட்சுமி,

    கமெண்ட் கவிதைக்கு நன்றி :-))

    ReplyDelete
  4. வாங்க ஆசியா,

    நன்றிப்பா..

    ReplyDelete
  5. கிறுக்கினாலும் அழகுக் கவிதை சாரல் !

    ReplyDelete
  6. ரொம்ப அருமையா இருந்துச்சு...

    ரொம்ப ரசிச்சேன்

    ReplyDelete
  7. ஆஹா கைவரப்பெறாமல் கைவந்த கவிதை ..
    எறும்பாய் ஊறும் வார்த்தைகள் சேர்ந்து தேன் கவிதையில் மூழ்குகிறது

    congrats for keetru

    ReplyDelete
  8. வாங்க ஹேமா,

    அழகான உங்க பின்னூட்டத்துக்காகவே நெறைய கிறுக்கலாம் போலிருக்கு :-)))

    ReplyDelete
  9. வாங்க ஆமினா,

    ரசிச்சதுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  10. வாங்க பத்மா,

    ரொம்ப நன்றிங்க :-)

    ReplyDelete
  11. கவிதை கைவராத பொழுதுகள் கூட கவிதையாகி விட்டது.. வார்த்தைகளின் கோர்வை ஈர்க்கிறது.

    ReplyDelete
  12. வாங்க பாரத் பாரதி,

    வாசித்தமைக்கு நன்றி.

    ReplyDelete

கவிதை சொன்னவர்கள்.