விட்டுவிட்டு வந்தபின்னும்
வாசலில்
வந்து நிற்கும்
நாய்க்குட்டியாய்;
சென்று நிற்கிறான்
வாழ்ந்துகெட்டவன்,
தனதாய் இருந்த வீட்டில்;
தினம்,
கனவில்.
*************************
தொடங்கிய புள்ளியிலேயே
நிற்கிறது காலம்:
அழித்தழித்து
எழுதியபின்னும்
சரியாகவே தெரிகின்றன
தப்பாய்ப்போன மனக்கணக்குகள்;
இருளிலும், ஒளியிலும்
பறந்து திரிந்த விடைகளை
இனம்கண்டு சேமித்தபின்;
களைப்பு
சொட்டும்போதுதான்
தெரிகிறது:
தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்.
28 comments:
ஆகா... கவிதைகள்...கவிதாயினி சாரல் அவ்ர்களே...
இரண்டுமே மிக அருமை.
//தனதாய் இருந்த வீட்டில்;
தினம்,
கனவில்//
//களைப்பு
சொட்டும்போதுதான்
தெரிகிறது:
தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்//
’வலி’மையான வரிகள்.
//அழித்தழித்து
எழுதியபின்னும்
சரியாகவே தெரிகின்றன
தப்பாய்ப்போன மனக்கணக்குகள்;
///
nice lines
//அழித்தழித்து
எழுதியபின்னும்
சரியாகவே தெரிகின்றன
தப்பாய்ப்போன மனக்கணக்குகள்;//
பிடிவாதத்தின் மற்றொரு முகம் :)
அனைத்தும் நல்லா இருக்கு அமைதிச் சாரல்
இரண்டும் அருமை
வாழ்த்துக்கள்
விஜய்
//களைப்பு
சொட்டும்போதுதான்
தெரிகிறது:
தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்//
அருமையான வரிகள்.
ரசித்தேன். ,,சாரல்.
"தொடங்கியபுள்ளியிலேயே
நிற்கிறது காலம்."
சரி தான் ..நல்லா இருக்கு பா உங்க கவிதை
அருமையான கவிதைகள்
இரண்டு கவிதைகளும் ரொம்ப பிடிச்சிருக்கு.
ரெண்டுமே நல்லாருக்கு முதல்கவிதை மிகவும் அருமை வறுமையில் வீடிழந்தவனின் வலியை சொல்கிறது...
வாழ்வை வரைந்திருக்கிறீர்கள் சாரல் !
வாங்க கண்ணகி,
கவி+தா+இனி ன்னு கேட்டுட்டீங்க. தந்துட்டாப்போச்சு :-)).படிக்க நீங்க ரெடிதானே...
நன்றி.
வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க.
வாங்க எல்.கே,
நன்றி.
வாங்க பாலாஜி,
அதேதான்.. பிடிவாதம்+ என்ன செஞ்சாலும் தப்பாப்போகுதேன்னு ஒரு நிலை :-))
நன்றி.
வாங்க விஜய்,
நன்றி.
வாங்க அம்பிகா,
நன்றிங்க.
வாங்க முத்துலெட்சுமி,
ரசிச்சதுக்கு நன்றி.
வாங்க சந்தியா,
நன்றி.
வாங்க வேலுஜி,
நன்றிங்க.
வாங்க பாரா. அண்ணா,
ரொம்ப நன்றி.
வாங்க வசந்த்,
நன்றிப்பா.
வாங்க தமிழுலகம்,
பார்த்துட்டா போச்சு...
நன்றி.
வாங்க ஹேமா,
முயற்சி செஞ்சுருக்கேன் :-)))
நன்றி.
விட்டுவிட்டு வந்தபின்னும்
வாசலில்
வந்து நிற்கும்
நாய்க்குட்டியாய்;
சென்று நிற்கிறான்
வாழ்ந்துகெட்டவன்,
தனதாய் இருந்த வீட்டில்;
தினம்,
கனவில்//
beautiful!!
வாங்க சுனீல் க்ருஷ்ணன்,
மிகவும் நன்றி..
சாரல்கள் இரண்டுமே அருமை :)
Post a Comment