Pages

Thursday, February 25, 2010

நாற்றங்கால் பந்தம்

வேரோடும் ,
வேரடி மண்ணோடும்,
பிடுங்கிய பின்
செடிக்கில்லை ,
நாற்றங்கால் பந்தம்.

அடுத்த நொடியே
மறந்துபோக
எப்படித்தான் முடிகிறதோ!!!!
இன்னொரு தோட்டம் சென்றுவிட்டால்
வேரடிமண் காய்ந்துவிடுமா என்ன!!!!

புது மண்ணில்
துவளுது குழையுது,
வேர் பிடிக்க
சில காலமாச்சுது.
புதுப்பூரிப்போட இளங்குருத்தும்
பூவும் பிஞ்சும் இருந்தாலும்,
வாழ்வென்னவோ
சூரியன் முகம் பார்த்துத்தான்.

நீர் தேடிச்செல்லும் வேர்கள்
கொஞ்சம்
நினைவுகளும் தேடிச்செல்லுமா???

விடைகிடைத்தது
கடைசியில்...
சருகாகிப்போனபின்பும்
வேர் நுனியில் இருந்தது,
நாற்றங்கால் , மண் வாசனை....
பெண்ணும்,பயிரும் ஒன்றுதானோ
இந்த மண்ணில்!!!....






4 comments:

ஹுஸைனம்மா said...

அட, அழகான கவிதையாக்கிட்டீங்களே!!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

நன்றிங்க.

pudugaithendral said...

அழகு.

செடி புது இடத்தில் தழைய ஆரம்பித்தால் தான் நல்லது. பழைய மண்னையே நினைத்துக்கொண்டிருந்தால் தோபி கா குத்தா ந கர்கா ந காட்கா தன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

சரியா சொன்னீங்க.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.