திட்டமிடப்படாமலும்
எல்லாம்
நடக்கிறதெனினும்;
தற்செயலாகவும்
மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை..
எவருக்காகவும்
எப்பொழுதும்
காத்துக்கொண்டிருக்காத.. காலம்.
இலையுதிர்காலத்து மரமென
வாய்ப்புகளை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
சேமிக்கப்பட்ட கனவுகள் ஒவ்வொன்றும்,
நெஞ்சக்கனலின் தணியாவெப்பத்தில்
வளர்சிதையுமுன்
பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்க..
காற்று நகர்த்திச்சென்று சேர்க்கிறது
ஒவ்வொரு இலையாக..
சருகாகவிட்டு சோம்பிக்கிடக்கின்றன
தலைவிதியென்றும்
தலையெழுத்தென்றும்
தன்னைத்தானே நொந்துகொண்ட
கிணற்றுத்தவளைகள்..
கனவுகள் காலாவதியாகுமுன்
உதறியெறிந்த வாய்ப்புகளை
மீண்டும் கண்டடையத்தெரிந்தவை மட்டுமே
மீண்டு கரைசேர்கின்றன..
ஆசைக்கும் அறிவுக்குமான போட்டிக்களத்தில்
வாய்ப்புகள் ஜெயித்துவிட
விருப்பங்கள் இல்லாமலேயே
மாற்றி நடப்பட்டாலும்..
பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.
டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..

22 comments:
மிக அருமை.நீந்தக் கற்றுக்கொண்ட மீன்களும்
தன் சுகஸ் ஸ்தானத்தைவிட்டு வெளியேறக்
கற்றுக்கொள்ளுகிற மீன்களும்தான்
இன்றைய கால கட்டத்தில் ஜீவிக்க இயலும்
சமீப காலங்களில் இதுபோன்ற தரமான படைப்புகள்
படிக்க கிடைப்பது கூட கடினமாக உள்ளது
தொடர வாழ்த்துக்கள்
//பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.//
மிக மிகப் பிடித்தது சாரல். வாழ்த்துக்கள். அருமையான கவிதை.
survival of the fittest....
அருமையா இருக்கு....
வாங்க ரமணி,
உற்சாகமூட்டும் உங்க பின்னூட்டத்துக்கு நன்றி :-))
வாங்க ராமலஷ்மி,
ரொம்ப நன்றிங்க ரசிச்சதுக்கு :-))
வாங்க கலாநேசன்,
அதேதான்.. கிடைக்கிற வாய்ப்புகளை சரியா பயன்படுத்தறவங்கதான் முன்னேறுறாங்க இல்லியா.
வாங்க மனோ,
ரொம்ப நன்றி சகோ..
நீந்தக் கற்றுக்கொண்ட மீன்கள்...மிகச் சிறந்த உவமானம் கொண்ட கவிதை.வாழ்த்துகள் சாரல் !
//பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.//
.....முற்றிலும் உண்மைங்க.. :-)
நீந்தக் கற்ற மீனின் சாம்ராஜ்யம் அழகு..:)
வாங்க ஹேமா,
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க ஆனந்தி,
நீந்த கற்றுக்கொள்ள தேவையேயில்லாத மீன்களாயினும் நீந்திக்கொண்டேயிருந்தாத்தான் உயிர் பிழைக்கவும் முடியும், இது அதன் உடற்கூறு விதியும்கூட :-))
வாங்க தேனம்மை,
ரொம்ப நன்றி..
/கனவுகள் காலாவதியாகுமுன்
உதறியெறிந்த வாய்ப்புகளை
மீண்டும் கண்டடையத்தெரிந்தவை மட்டுமே
மீண்டு கரைசேர்கின்றன..//
உண்மையான உண்மை சாரல்.
நீந்தக் கற்றுக்கொண்ட மீன்கள்
முதல் தரம்!
அருமை,வாழ்த்துக்கள்!
//பெருங்கடலாயினும், குடுவையாயினும்
தனக்கென்றோர் சாம்ராஜ்யத்தில் பரிமளிக்கின்றன..
நீந்தக்கற்றுக்கொண்ட மீன்கள்.//
உண்மைதான். மிக அருமை.
திண்ணையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.
வாங்க சுந்தரா,
நன்றிங்க..
வாங்க ரவிக்குமார்,
வாழ்த்துகளுக்கு நன்றி.
வாங்க அம்பிகா,
வாழ்த்துகளுக்கு நன்றி.
ஆமாம்.நீந்த கற்றுக்கொண்ட மீன் குட்டிகள்...
நீரின் வேகத்தைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
வாங்க புலியாரே,
வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.
Post a Comment