ஒவ்வொரு தினமும்
புது நம்பிக்கையொன்றை
தன்னுடனேயே சுமந்து வரும்
ஒவ்வொரு விடியலும்!.
உதயமாகியிருப்பது
புது விடியலா;
புது தினமா;
இல்லை,.. புது வாழ்வா??
என்ற மயக்கங்களுடன்
தயக்கங்களையும் கட்டறுத்து;
தன்னைத்தானே செதுக்கிக்கொண்டிருக்கும்
அந்தக்கல்லினுள்ளே..
இருப்பது மூர்த்தமா, வேறொன்றாவென்று
அறியும் ஆவலில்,
நின்று கவனித்துப்போகின்றன;
நம்பிக்கையும் விடியலும்.
கவிந்த துயரமேகங்களை
விரட்டிச்சிரிக்கும்
புன்னகைச்சூரியனின் வெதுவெதுப்பில்,..
ரோஜாக்களாய் மலர்ந்த முட்களின் வாசத்தில்
கிறங்கிவிழுகிறது
ஒரு பனித்துளி..

26 comments:
//ஒவ்வொரு தினமும்
புது நம்பிக்கையொன்றை
தன்னுடனேயே சுமந்து வரும்
ஒவ்வொரு விடியலும்!//
உண்மைதான்.
அழகான கவிதை உள்ளங்கையில் விழுந்த நம்பிக்கையெனும் பனித்துளியாய்..
நன்று சாரல்.
நன்று .
நம்பிக்கை கவிதை நன்றாக உள்ளது
அருமை
நம்பிக்கை கவிதை..
அருமை
ஒவ்வொரு இரவின்போதும் விடியும் பொழுது எங்களுக்காகவே என்பதுதான் வாழ்வின் நம்பிக்கை சாரல்.அழகான நம்பிக்கையான வரிகள் !
//உதயமாகியிருப்பது
புது விடியலா;
புது தினமா;
இல்லை,.. புது வாழ்வா??
என்ற மயக்கங்களுடன்
தயக்கங்களையும் கட்டறுத்து;//
அழகான வரிகள்
highly optimistic ..
ரொம்ப பிடிச்சுருக்கு
வாங்க ராமலஷ்மி,
நன்றி..
வாங்க நண்டு,
நன்றி..
வாங்க எல்.கே,
நன்றிங்க..
வாங்க வேலு,
நன்றிங்க..
வாங்க கல்பனா,
நன்றி..
வாங்க ஹேமா,
உண்மைதான்.. இன்றைய பொழுது நல்லதாக இருக்கட்டும்ன்னு நினைச்சுத்தானே நாளை துவங்குகிறோம்..
நன்றி.
வாங்க ஆமினா,
நன்றி..
வாங்க பத்மா,
ரொம்ப நன்றி..
இன்றுதான் உங்கள் தளம் வந்தேன் அனைத்தும் அருமை....
வாழ்த்துக்கள்
வாங்க பிரஷா,
முதல்வருகைக்கு நன்றி.. அடிக்கடி வாங்க :-))
நல்ல கவிதை
//கவிந்த துயரமேகங்களை
விரட்டிச்சிரிக்கும்
புன்னகைச்சூரியனின் வெதுவெதுப்பில்,..
ரோஜாக்களாய் மலர்ந்த முட்களின் வாசத்தில்
கிறங்கிவிழுகிறது
ஒரு பனித்துளி..//
//கவிந்த துயரமேகங்களை
விரட்டிச்சிரிக்கும்
புன்னகைச்சூரியனின் வெதுவெதுப்பில்,..
ரோஜாக்களாய் மலர்ந்த முட்களின் வாசத்தில்
கிறங்கிவிழுகிறது
ஒரு பனித்துளி..//
பாராட்டுகள் நல்ல ஆக்கம் .
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com
வாங்க தமிழ்க்காதலன்,
வருகைக்கு நன்றி.
வாங்க polurdhayanithi,
வரவுக்கு நன்றி.
வாங்க வைகறை,
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
வாங்க தமிழ்த்தோட்டம்,
வரவுக்கு நன்றி.
Post a Comment