மழலைப்புன்னகையென
சிதறிக்கிடக்கும் சிப்பிகளினூடே,
கண்ணாமூச்சியாடும் குழந்தைகளாய்
ஓடிச்சென்று மறைகின்றன
கொழுத்த நண்டுகள்..
ஆதரவான தகப்பனைப்போல்
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;
கொண்டு வந்து சேர்க்கிறது
கடலின் வாசத்தை..
இன்னொரு நாளை
முடித்த நிறைவில்
நாள் முழுதும் உழைத்த களைப்பில்;
மறைந்த ஆதவன்,
உதிக்கிறான் ஒரு குழந்தையின் கையில்
பலூனாய்..
வீடு வந்து சேர்ந்தபின்னும்
அலையடித்துக்கொண்டிருக்கிறது
கடல்,
உடையிலிருந்து உதிரும்
குறுமணலுடன்..
கால் நனைக்கவென்று மட்டுமல்லாமல்
எல்லாவற்றுக்குமான விருப்பமாய்...
இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி...
20 comments:
திண்ணை நல்லா இருந்தா சரிதான்
இயற்கையை ரசித்த அழகான கவிதை சாரல்.திண்ணையில் வாசித்தேன் !
நசர்....!
நாசர், திண்ணை ஒன்னும் ஆகிறது தம்பி..
திண்ணையில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்
//ஆதரவான தகப்பனைப்போல்
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;// மிகவும் ரசித்தேன் அமைதிச்சாரல்.வாழ்த்துக்கள்!
ரொம்ப அழகு கவிதை :)
//ஆதரவான தகப்பனைப்போல்
கேசம் கலைத்துச்செல்லும் காற்று;//
இதமான வரிகளுடன் அழகானதொரு கவிதை, அலைகளின் சங்கீதம் பின்னணியில் ஒலிக்க..!
திண்ணையில் வந்தமைக்கு வாழ்த்துக்கள் சாரல்.
வாங்க நசரேயன்,
திண்ணைக்கு ஒண்ணும் ஆகலை, திடகாத்திரமா இருக்கு :-))
கும்மியை ஆரம்பிச்சதுக்கு நன்றி :-)
வாங்க ஹேமா,
நன்றிங்க..
பிரிக்கமுடியாதது என்னவோன்னு கேட்டா நசரும் கும்மியும்ன்னு தயங்காம சொல்லலாம் :-)))))))
வாங்க எல்.கே,
வரவுக்கு நன்றி.
வாங்க ஸாதிகா,
ரசித்ததுக்கு நன்றிங்க..
வாங்க பாலாஜி,
நன்றிங்க..
வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க..
அருமையான கவிதை..
வீடு வந்து சேர்ந்தபின்னும்
அலையடித்துக்கொண்டிருக்கிறது
கடல்//
அழகான கவிதை.
வாங்க வெறும்பய,
நன்றிங்க..
வாங்க ரிஷபன்,
நன்றி சகோ..
ரசித்து எழுதி இருக்கீங்க அமைதிச்சாரல்.வாழ்த்துக்கள்!
வாங்க ஸாதிகா,
எவ்வளவு ரசிச்சாலும் தீரமாட்டேங்குதே :-))
நன்றி.
அழகான உணர்வுகள்
அருமையான கவிதை.
வாங்க கல்பனா,
வருகைக்கு நன்றி..
Post a Comment