(படத்துக்கு நன்றி - இணையம்).
வெங்கோடையின் பின்னிரவில்மழை வரம் வேண்டி
மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு
பன்னீர்த் துளிகளை
தட்சிணையாய்த் தெளிக்கின்றன,
மலை முகட்டில்
சற்று இளைப்பாறி விட்டு,
நீர்க்கர்ப்பம் தாங்கிப் பறக்கும்
மடி கனத்த மஞ்சுகள்..
தவளைகளின்
நாராச 'கொர்கொர்' சத்தத்திலும்,
சில்வண்டுகளின் ரீங்காரத்திலும்,
உணர்கிறான் விவசாயி..
அவன் மட்டுமே அறிந்து மயங்கும்
தெய்வீக சங்கீதத்தை..
மற்றோருக்கெல்லாம் அவதியையும்
சேர்த்துத் தரும் மழை..
பயிர்களையும் உயிர்களையும்,
எப்படியும் காப்பாற்றி விடலாமென்ற
நிம்மதியையும், நம்பிக்கையையும்
மட்டுமே தருகிறது
ஏர் பூட்டும் உழவனுக்கு..
டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

மண்டூகங்கள் நடத்தும் தாளக் கச்சேரிக்கு
பன்னீர்த் துளிகளை
தட்சிணையாய்த் தெளிக்கின்றன,
மலை முகட்டில்
சற்று இளைப்பாறி விட்டு,
நீர்க்கர்ப்பம் தாங்கிப் பறக்கும்
மடி கனத்த மஞ்சுகள்..
தவளைகளின்
நாராச 'கொர்கொர்' சத்தத்திலும்,
சில்வண்டுகளின் ரீங்காரத்திலும்,
உணர்கிறான் விவசாயி..
அவன் மட்டுமே அறிந்து மயங்கும்
தெய்வீக சங்கீதத்தை..
மற்றோருக்கெல்லாம் அவதியையும்
சேர்த்துத் தரும் மழை..
பயிர்களையும் உயிர்களையும்,
எப்படியும் காப்பாற்றி விடலாமென்ற
நிம்மதியையும், நம்பிக்கையையும்
மட்டுமே தருகிறது
ஏர் பூட்டும் உழவனுக்கு..
டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

24 comments:
தெய்வீக ராகத்தில் அமையும்
அந்த அற்புதக் கச்சேரியை
வரிவடிவத்தில் உணரக் கொடுத்து
அசத்திவிடீர்கள்
படமும் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
அருமையான கவிதை வாழ்த்துக்கள்...!!!
//பயிர்க்ளையும் உயிர்களையும்,
எப்படியும் காப்பாற்றி விடலாமென்ற
நிம்மதியையும், நம்பிக்கையையும்
மட்டுமே தருகிறது
ஏர் பூட்டும் உழவனுக்கு..//
மிக அருமை. பொருத்தமான படம்.
விவசாயி மயங்கும் தெய்வீக சங்கீதம்.. அருமை கவிதை
தவளை சத்தத்தை விவசாயி காதில் தெய்வீக ராகமாக்கி மனதின் நிம்மதியை படம் பிடித்து காட்டிய உங்கள் கவிதை ஒரு அழகான புதுமை.
தவளை சத்தத்தை விவசாயி காதில் தெய்வீக ராகமாக்கி மனதின் நிம்மதியை படம் பிடித்து காட்டிய தங்கள் கவிதை ஒரு அழகான புதுமை.
''....தட்சிணையாய்த் தெளிக்கின்றன,
மலை முகட்டில்
சற்று இளைப்பாறி விட்டு,
நீர்க்கர்ப்பம் தாங்கிப் பறக்கும்
மடி கனத்த மஞ்சுகள்..''
அருமை வரிகள் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
வாங்க ரமணி,
இந்த மழைக்காலம் ஆரம்பிக்கிறதுக்கு சரியா முதல் நாள், செம கச்சேரி. அப்பாடா, இனி மழை ஆரம்பிச்சுடும்ன்னு எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். நமக்கே அப்டின்னா அவங்களுக்கு ?????????
வாங்க மனோ,
வாசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க ராமலஷ்மி,
அவனுக்கிருப்பதும் அந்த ஒரே நம்பிக்கைதானே :-)
வாங்க மாய உலகம்,
வாசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க கோதை,
அவனுக்கு சங்கீதமா ருசிப்பதும் அந்த சப்தம்தானே :-)
வாங்க வேதா,
வாசிச்சதுக்கு நன்றிங்க :-)
முதல்லவரேன்ன்னு நினைக்கிறேன் இங்க.....மனவயலில் நற்பயிராக நிற்கும் இக்கவிதை வாழ்த்துகள் அமைதிச்சாரல்!
"வெங்கோடையின் பின்னிரவில்
மழை வரம் வேண்டி...."
ஆழகான ஆரம்பம்.
வரிகள் இதமாக...
''..மற்றோருக்கெல்லாம் அவதியையும்
சேர்த்துத் தரும் மழை..
பயிர்களையும் உயிர்களையும்,
எப்படியும் காப்பாற்றி விடலாமென்ற
நிம்மதியையும், நம்பிக்கையையும்
மட்டுமே தருகிறது
ஏர் பூட்டும் உழவனுக்கு..''
நல்ல வரிகள் .வந்தேன் மறுபடியும் வாசித்தேன். வாழ்த்துகள்.என்வலைக்கும் வரலாமே. மிக்க மிக்க நல்வரவு கூறுகிறேன்.
வேதா. இலங்காதிலகம்.
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........
அருமையான கவிதை.
வாங்க ஷைலஜா மேடம்,
முதல் வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றிங்க..
உங்களுக்கு கவிதை பிடிச்சிருக்குங்கறது எனக்கும் சந்தோஷமே..
வாங்க டாக்டர்,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..
வாங்க வேதா,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..
இதோ வரேன் உங்க தளத்துக்கு.
வாங்க அம்பாளடியாள்,
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்..
வாங்க சாகம்பரி,
ரொம்ப நன்றிங்க..
ஹாய் ரொம்ப நல்லா இருக்குங்க.. விவசாயியின் ஏக்கம் நிறைந்த படமும், வரிகளும்.. அருமை!
வல்லமையிலும் உங்கள் கவிதை இடம் பெற்றதற்கு.. வாழ்த்துக்கள்.
தொடருங்கள்..!! :)
Post a Comment