Pages

Thursday, September 22, 2011

அரைகுறையாய்ப் போன கனவுகள்..

மேகத்தில் சற்று தலைதுவட்டிக்கொள்ளும்
ஆவல் கொண்டு,
ஆயிரம் மூங்கில் கால்களூன்றி
ஆஹாவென்றெழுந்த
அலங்கார மாளிகைகள்,
விதிகளை மீறிவிட்டதாய்
அவசரமாய் பிறப்பித்த அரசாங்க தடையுத்தரவால்,
அப்படியே நின்றன அரைகுறையாய்..

செங்கற்தோல் போர்த்தாத
இரும்பு எலும்புக்கூடும்,
முகப்பூச்சு காணாத கற்சுவரும்,
பரிதாபமாய்ப்பொலிவிழந்து,
பல்லிளித்துக்கொண்டு நிற்கின்றன.. மௌனமாய்,
ஆயிரமாயிரம் கதைகள் சொல்லிக்கொண்டு.

தோற்ற மாறுதல்களை உள்வாங்கிக்கொண்டு
காரை பெயர்ந்து நிற்கும் சுவர்கள்,
பாசிகளின் பலத்தில்
தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று தோற்று நிற்க,
சலனமில்லாமல் நிகழ்கின்றன
காட்டுச்செடிகளின் குடியேற்றங்கள்..

கனவு இல்லத்தை
கனவில் மட்டுமே கண்டுகொண்டிருக்கும்
எளியவனின்
ஏக்கப்பெருமூச்சில் படபடக்கின்றன,
தளங்களில் கொட்டப்பட்டு
கல்லாய் மணலாய் உருமாறி,
பளிங்குக்கற்களாய் உறைந்து கிடக்கும்,..
முதலீடு செய்த சலவை நோட்டுகள்..

டிஸ்கி: வல்லமைக்காக எழுதியதை இங்கியும் பகிர்ந்து கொள்கிறேன்.

23 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல் கவிதை....!!!

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க உங்க பதிவுக்கு உங்கள் தமிழ்மணம் ஓட்டு போடுறது கிடையாதா...???

அமைதிச்சாரல் said...

வாங்க மனோ,

வாசிச்சதுக்கு நன்றி,.. மும்பையில் இது மாதிரி அரைகுறைக் கட்டிடங்களையும், அது ஏன் அப்டி நிக்குதுன்னும் உங்களுக்கும் தெரியுமே :-))

என்னோட கள்ள ஓட்டை சில சமயங்கள்ல கடைசியாத்தான் போடுவேன் :-)

Ramani said...

எதிர்காலமற்று நிகழ்காலமும் நிச்சயமற்றதாய்
எலும்பு தெரியாமலும் அதே சமயம் சதை மூடாதும்
உயிரோடு இருக்கிறோமா இல்லையா என
அதற்குமே தெரியாது செத்துக் கொண்டே வாழுகிற
அரை குறை கட்டிங்களைக் கூட
அழகிய கவிதையாக்க முடியும் என அறிய
ஆச்சரியப் பட்டுப்போனேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

மதுரன் said...

அருமையான கவிதை
வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

படமும் கவிதையும் அருமை சாந்தி.

raji said...

நிதர்சனம் காட்டும் அருமை கவிதை.
பகிர்விற்கு நன்றி

ரிஷபன் said...

தளங்களில் கொட்டப்பட்டு
கல்லாய் மணலாய் உருமாறி,
பளிங்குக்கற்களாய் உறைந்து கிடக்கும்,..
முதலீடு செய்த சலவை நோட்டுகள்..

அருமை.. மனம் நோவதை அழகாய்க் காட்டி விட்டீர்கள்..

மாய உலகம் said...

அரைகுறையாய்ப் போன கனவுகள்...ஆறாத வடுவாய்

அன்புடன் மலிக்கா said...

கனவில்லம் நனவாகமல்
கனவோடு நிற்பது மனதை கனமாகுகிறது..
கவிதைyin கரு மிக அருமை,,,....

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

அதுங்களுக்கு மட்டும் பேசற சக்தி இருந்தா ஆயிரமாயிரம் காவியங்களையே படைச்சுடும்..

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மதுரன்,

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

நம்மூர்ப் பக்கங்கள்லயும் நீங்க கவனிச்சிருக்கலாம். சொத்துப் பிரச்சினை முடிவடையாம, சம்பந்தப்பட்ட வீடு பூட்டியே கிடந்து பாழடையும். கடைசியில சொத்தே இல்லாமப் போகும், ஆனா, பிரச்சினை மட்டும் நீண்டுக்கிட்டே போகும். இங்கியும் சில இடங்கள்ல அப்படித்தான்..

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ரிஷபன்,

அடுக்கு மாடிக்குடியிருப்புகள் நிறைஞ்ச இந்தூர்ல இப்டி ஒவ்வொரு கட்டிடத்தையும் பார்க்கறப்ப, கோடிக்கணக்கான ரூபாய்களால் ஆன கட்டிடமாத்தான் தெரியுது. பாவம் முதலீடு செஞ்சவங்க ..

அமைதிச்சாரல் said...

வாங்க மாய உலகம்,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க மலிக்கா,

ஆஹா!!.. கவியரசியே நல்லாருக்குன்னு சொன்னது ரொம்ப சந்தோஷமாருக்கு.

சாகம்பரி said...

என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (4/11/11 -வெள்ளிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

Dhanalakshmi said...

//கனவு இல்லத்தை
கனவில் மட்டுமே கண்டுகொண்டிருக்கும்
எளியவனின்
ஏக்கப்பெருமூச்சில்//

azhamana varigal...

நம்பிக்கைபாண்டியன் said...

அழகான கவிதை, மிகவும் ரசித்தேன்,

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

ஷைலஜா said...

/பாசிகளின் பலத்தில்
தங்களைக் காப்பாற்றிக்கொள்ள முயன்று தோற்று நிற்க,
சலனமில்லாமல் நிகழ்கின்றன
காட்டுச்செடிகளின் குடியேற்றங்கள்....


வரிகளின் இடையே கவிதையின் ஜீவன் தெரிகிறது ரசித்தேன் மிகவும்/

கூகிள்சிறி .கொம் said...

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு