சட்டென
ஏதோ ஒர் நிசப்தம்
புரிபடுகிறது...
காற்றுக்கு விடை கொடுத்த
இலைகள்,
மோனத்தவத்தில் ஆழ்ந்து விட்டன போலும்;
நீராவிப்பெருமூச்சுடன்
பெருகும் அருவி,
வாய்க்கால்தேடி பயணிக்கையில்;
சபிக்கப்படுகிறது வெங்கோடை...
பளீரெனச்சிரிக்கும்
மழலையென,
வானம் கண்சிமிட்டுகையில்,
பொக்கைவாய் புன்னகையென,
காற்று வந்து தழுவுகையில்;
எதிர்பாராமல்
மண்ணில் வந்துஇறங்குகிறது..
ஒரு துளி உயிர்.
18 comments:
/எதிர்பாராமல்
மண்ணில் வந்துஇறங்குகிறது..
ஒரு துளி உயிர்./ super.
வாங்க மதுரை சரவணன்,
பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி.
படமும், கவிதையும் அருமை.
வாங்க துபாய் ராஜா,
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
அருவியில் தண்ணீர் கொட்டும் முகப்பு படம் அருமை. அழகு. ரசனையான தேர்வு.வாழ்த்துக்கள்.
உயிர் இறங்குவது சூப்பர் அமைதிச்சாரல்
சாரல் போன்ற கவிதை..
நன்றி..
துபாய்ராஜா,
யானை,கடல், அருவி இதெல்லாம் பாக்கப்பாக்க சலிக்காதவை. உங்களுக்கும் அருவி பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றிப்பா.
வாங்க தேனம்மை,
தேன்போன்ற பாராட்டுக்கும் முதல்வரவுக்கும் நன்றி.
வாங்க பிரகாஷ்,
முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
நல்லாருக்கு. வாழ்த்துகள்.
வாங்க ஆடுமாடு,
நன்றிங்க. முதல்வரவுக்கும் வாழ்த்தினதுக்கும்.
மழை கவிதை அருமை !!! வாழ்த்துக்கள்!!!
தங்களை வலைப்பூ அழகாக இருக்கிறது!
//எதிர்பாராமல்
மண்ணில் வந்துஇறங்குகிறது..
ஒரு துளி உயிர்.//
அருமையான வரிகள் அமைதிச் சாரல்.
வாங்க கவிதன்,
ரசிப்புக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க ராமலஷ்மி,
ரசிப்புக்கு நன்றி.
ரசித்து படித்தேன்!
வாங்க ப்ரியா,
ரசனைக்கும் முதல்வரவுக்கும் நன்றி.
Post a Comment