Pages

Sunday, May 2, 2010

பெயர் தெரியா மரம்.


விருட்சங்களாய்
நிமிர்ந்து நின்றவை
விறகுகளாய் நிற்கின்றன.

இந்த இடத்தில்தானே இருந்தது
எனக்கு நிழல் கொடுத்த
அந்த
பெயர் தெரியா மரம்.

உபயோகமற்றுப் போய்விட்டால்
அல்லவா
உயிர் நீப்பதற்கு...

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கையில்
ஏனிந்த அவசரப்பாடை என்று
புலம்பும் மனதை
சூழ்ந்து கொள்கிறது
ஏதோ ஒரு வெறுமை.


எங்கோ ஒரிடத்தில்,
உயிர் வாழும் இச்சை
ஒட்டிக்கொண்டிருக்கிறது எச்சமாய்...
வெந்தவிந்த உடம்பில்.


டிஸ்கி: என்னுடைய இன்னொரு வலைப்பூவில் வெளிவந்த கவிதையின் மீள்பதிவு.



















6 comments:

ராமலக்ஷ்மி said...

இன்னொரு வலைப்பூவில் வாசித்திருக்கிறேன். மறுபடி வாசிக்கையிலும் சோகம் சூழ்கிறது. நல்ல கவிதை அமைதிச்சாரல்.

எல் கே said...

இது எப்ப இருந்து ..நல்ல இருக்கு
//வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கையில்
ஏனிந்த அவசரப்பாடை என்று
புலம்பும் மனதை
சூழ்ந்து கொள்கிறது
ஏதோ ஒரு வெறுமை//
அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

மதுரை சரவணன் said...

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நீங்க மரம் நடும் நாளுக்காக(தொடர்பதிவு)வெயிட்டிங்.விதை வீரியத்துடன் வளர்வதற்கும் கொஞ்சம் காத்திருப்பு அவசியம்தானே.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதுரை சரவணன்,

வரவுக்கு நன்றிங்க.