Pages

Friday, June 25, 2010

ஒரு சாகசப்பயணம்...


(நன்றி:கூகிள்)

அவசரமாய்ப்போட்ட ஒப்பனையை
ஆங்காரமாய் கலைத்துவிட்டு
ஒன்றுமறியாததுபோல்
சிரித்துக்கொண்டிருக்கிறது மழை;

வேஷம் கலைந்த கோபத்தை
கையாலாகாத்தனமாய் வெளிப்படுத்தி
இளித்துக்கொண்டிருக்கிறது சாலை;
தேங்கிப்போன நினைவுகளுடன்
அடுத்த ஒப்பனையை எதிர்நோக்கி...

சுமையை இறக்கிவைக்கும்
இலக்கு தேடி..
விரைந்துசெல்கின்றன
மடிகனத்த மேகங்கள்;
பெருமூச்சு விட்டுக்கொண்டு...

விழுந்து எழுந்து,
விழுப்புண் பெற்று,
பூகம்ப பயணத்தின் இலவச இணைப்பாய்
முதுகுவலி வாங்கி,
யமதர்மனின் நிமிட தரிசனம்பெற்று,
அடுத்த நாளுக்கான நீட்டிப்புக்கு
உத்தரவாதம் பெற்ற உயிருடன்
வந்து சேர்கிறோம் நாம், வீடு நோக்கி..




49 comments:

எல் கே said...

//யமதர்மனின் நிமிட தரிசனம்பெற்று,
அடுத்த நாளுக்கான நீட்டிப்புக்கு
உத்தரவாதம் பெற்ற உயிருடன்
வந்து சேர்கிறோம் நாம், வீடு நோக்கி.//


அருமை

Anonymous said...

கவிதை ரொம்ப அருமையா இருக்குப்பா ..
"விழுந்து எழுந்து,
விழுப்புண் பெற்று,
பூகம்ப பயணத்தின் இலவச இணைப்பாய்
முதுகுவலி வாங்கி,
யமதர்மனின் நிமிட தரிசனம்பெற்று,
அடுத்த நாளுக்கான நீட்டிப்புக்கு
உத்தரவாதம் பெற்ற உயிருடன்
வந்து சேர்கிறோம் நாம், வீடு நோக்கி.."
இந்த வரிகள் ரொம்ப ரசித்தேன் ...நன்றி

சந்தனமுல்லை said...

வித்தியாசமா இருந்தது ஃபைனல் டச்!
அங்கியும் மழை..இங்கியும் மழை...மழை வாஆஆஆரம்!! :-)

ஹேமா said...

உங்க கவிதை பார்த்து மழையே சந்தோஷப்படும்.அவ்வளவு அனுபவிச்சு எழுதியிருக்கீங்க சாரல்.

க.பாலாசி said...

அழகாவும், அருமையாவும் இருக்குங்க சாரல்....

அம்பிகா said...

மழையின் குளுமை உங்கள் கவிதையில்.
இங்கே வெயில் தகிக்கிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

செம்ம விளாசல் இது மழைக்கா ?சாலைக்கா ? இல்லை செஞ்ச தப்புக்கு மழையை காரணம் காட்டும் மனிதனுக்கானுத்தான் தெரியலை

VELU.G said...

யதார்த்தமான வர்ணனை

அருமை

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமை அருமை.. :)
மிக வித்தியாசமான வர்ணனை
ஆனா உண்மையான விசயங்கள் ..

அன்புடன் அருணா said...

அங்கே மழையா???கொஞ்சமா இங்கேயும் அனுப்பி வைங்கப்பா!

Starjan (ஸ்டார்ஜன்) said...

சமூக சிந்தனையுள்ள அருமையான கவிதை.. ரொம்ப நல்லா சொல்லிருக்கீங்க அக்கா..

அக்கறையில்லா மனிதனிடம்
சொன்னேன் அக்கறையுடன்
நடக்கபோகும் விபரீதத்தை
மீண்டும் சந்திக்கும்போது சொன்னான்
நீ சொன்னது உண்மையே !!!.
தலையில் கட்டுடன்..

நசரேயன் said...

//ஒன்றுமறியாததுபோல்
சிரித்துக்கொண்டிருக்கிறது மழை;//

ஊருக்குள்ளே மழை இல்லையேன்னு கவலையா இருக்கோம், உங்க இடுகைகள்ல மழை மழையாய் கொட்டுது

பத்மா said...

ரொம்ப கஷ்டம் தான் மும்பை வாசிகளுக்கு ..
இங்கே மழை கவிதைங்க :))

Katz said...

//தேங்கிப்போன நினைவுகளுடன்
அடுத்த ஒப்பனையை எதிர்நோக்கி...//

Nice

Matangi Mawley said...

பிரமாதமான கற்பனை!
very good...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

ரொம்ப நாளா ஆளையே காணோம்..நல்லாருக்கீங்களா!!

தினசரி இயல்பாகிடுச்சு இல்லியா :-))
ரசிச்சதுக்கு நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

'மழையுள்ளபோதே நனைந்துகொள்'ன்னு புதுமொழி உண்டாக்கலாமா :-))))))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாசி,

ரொம்ப நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அம்பிகா,

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

நிச்சயமா மழைக்கு இல்லை..

வருகைக்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

கற்பனை மிக அருமை..

விஜய் said...

முதல் வருகையிலேயே அசத்திவிட்டீர்கள் தங்கள் கவிதை மூலம்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மலிக்கா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விஜய்,

ரொம்ப நன்றி சகோதரரே..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

///

அவசரமாய்ப்போட்ட ஒப்பனையை
ஆங்காரமாய் கலைத்துவிட்டு
ஒன்றுமறியாததுபோல்
சிரித்துக்கொண்டிருக்கிறது மழை;///

அழகான வரிகள்... அருமையா எழுதி இருக்கீங்க..
வாழ்த்துக்கள்.. :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

நன்றிங்க.

தூயவனின் அடிமை said...

படித்தேன் ரசித்தேன் அருமை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இளம் தூயவன்,

முதல்வரவுக்கும் ரசித்ததுக்கும் நன்றி.

ரிஷபன் said...

நேற்று மழைதான் இங்கு.. முக்கால் மணி நேரம்.. கொண்டு போன குடையை அலுவலகத்திலேயே மறந்து வைத்து விட்டு வந்தாச்சு.
ஆனால் மழை இங்கு ஒரு வரப் பிரசாதம்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

மழைக்காலத்தில் தொலைக்கிற குடைகளுக்கு கணக்கே இல்லை :-))

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அன்புடன் நான் said...

கவிதை மிக யதார்த்தம்.... பாராட்டுக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கருணாகரசு,

பாராட்டுக்களுக்கு நன்றி.

Raja said...

வாழ்த்துக்கள் சகோதரி. ஒருமுறை உங்கள் செல்லமக்கா
கதை படித்தேன். அப்படியே ஊருக்கு போய் வந்தது போல் இருந்தது.
எங்க ஊரு மணவாளகுறிச்சி . இங்கும் ஒரு செல்லமக்கா உண்டு.
அது சரி. நீங்க என் நாஞ்சில் நாடு என போடாமல்
Maharastra, India என போடுறீங்க. ?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

கதையை படிச்சதுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.. எனக்கும் ஒரு கேள்வி இருக்கு.'அங்கே'போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கே ஏன் போட்டீங்க :-)))

ராஜாவே கேட்டப்புறம் பதில் சொல்லலைன்னா அரசகுத்தமாயிடும்.. அது வேறொண்ணுமில்லை. முதல்ல இந்தியான்னு மட்டும்தான் போட்டேன். அப்புறம் இப்ப இருக்கும் இடத்தையும் சேர்த்துக்கிட்டேன்.பெருசா காரணங்கள் ஒண்ணுமில்லை. அவ்வளவுதான்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேலு,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

டெல்லியிலும் இப்போ நல்ல மழை போலிருக்கு..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருணாமேடம்,

மழையை அனுப்பிவெச்சுட்டு பதில் சொல்லலாம்ன்னு இருந்துட்டேன்(சமாளி..சமாளி)

எஞ்சாய் த மழை :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

ஆஹா.. ஆஹா.. அசத்தலா தொடர்ந்தீங்கப்பா..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

இப்ப மழை ஆரம்பிச்சிருக்குமே..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பத்மா,

இங்கியும் சிலசமயம் கவிதைதாங்க..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வழிப்போக்கன்,

நம்ம வீட்டுப்பக்கமும் எட்டிப்பாத்ததுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வழிப்போக்கன்,

நம்ம வீட்டுப்பக்கமும் எட்டிப்பாத்ததுக்கு நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதங்கி,

நன்றி.

Raja said...

// கதையை படிச்சதுக்கு முதலில் நன்றி சொல்லிக்கிறேன்.. எனக்கும் ஒரு கேள்வி இருக்கு.'அங்கே'போட வேண்டிய பின்னூட்டத்தை இங்கே ஏன் போட்டீங்க :-))) //
செல்லமக்கா கதையை PDF வழியாக நேத்து தான் படிச்சேன் (Offline இல்). இன்னிக்கு
உங்க ப்ளாக் இல் அதை தேடினால் கிடைக்கவில்லை. அதுனாலதான்...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

ரொம்ப நன்றி. அது அந்த ப்ளாக்கிலேயேதான் இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

சுட்டி கொடுக்க விட்டுப்போச்சு..

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_12.html

cheena (சீனா) said...

சூப்பர் கவிதை - இயல்பான சொற்கள் - நடை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா