உன்னிடமிருந்து
கற்றதும் பெற்றதும் ஏராளமாயிருப்பினும்,
இழந்துமிருக்கிறோம்..
விலைமதிப்பற்ற பொழுதுகளை;
நீ,.. வேலை நிறுத்தம் செய்தால்தான்
சிலவீடுகளில்
அடுப்பே எரிகிறதென்றபோதிலும்;
என்னருமை தோழமையே!!
பல வயிறுகளுக்கு,
நீயே அட்சயபாத்திரமாவும் விளங்குகின்றாய்..
நட்பாய் நுழைந்து..
உறவாய் மாறி..
இன்று,
உரிமையாளனாய் உருவெடுத்தபோதிலும்;
கோலுக்கு வசப்பட்ட குரங்காய்
சபித்தும், சகித்தும்
வாழப்பழகினோமேயன்றி...
ஒற்றைச்சுட்டுவிரல்
நீட்டியதில்லை.. உனை நோக்கி!!
அறிவுரைகள் பல பகன்றாலும்
அபத்தங்களையும் சேர்த்தே..
நீ,.. சந்தைப்படுத்தும்போது..
ஆற்றாமைதாளாமல்,
என்னருமை தொலைக்காட்சியே!!
உனை நோக்கி
விரல் நீட்டுகிறேன்;
ரிமோட் சகிதம்...
உனை ஆற்றுப்படுத்த..
செங்கோலை
எங்களிடம் பறிகொடுத்தபின்னும்,
எப்பொழுதிலும்
கவிழ நேரும் கூட்டணியாட்சியாய்..
பரிபாலனம் செய்யும் இம்சையரசரே....
நீவிர்,
நல்லவரா!!!... கெட்டவரா!!!..
டிஸ்கி: இந்தக்கவிதை இந்தவார திண்ணையில் வெளிவந்துள்ளது.
அப்புறம், இது எனது 25-ஆவது கவிதை.
கற்றதும் பெற்றதும் ஏராளமாயிருப்பினும்,
இழந்துமிருக்கிறோம்..
விலைமதிப்பற்ற பொழுதுகளை;
நீ,.. வேலை நிறுத்தம் செய்தால்தான்
சிலவீடுகளில்
அடுப்பே எரிகிறதென்றபோதிலும்;
என்னருமை தோழமையே!!
பல வயிறுகளுக்கு,
நீயே அட்சயபாத்திரமாவும் விளங்குகின்றாய்..
நட்பாய் நுழைந்து..
உறவாய் மாறி..
இன்று,
உரிமையாளனாய் உருவெடுத்தபோதிலும்;
கோலுக்கு வசப்பட்ட குரங்காய்
சபித்தும், சகித்தும்
வாழப்பழகினோமேயன்றி...
ஒற்றைச்சுட்டுவிரல்
நீட்டியதில்லை.. உனை நோக்கி!!
அறிவுரைகள் பல பகன்றாலும்
அபத்தங்களையும் சேர்த்தே..
நீ,.. சந்தைப்படுத்தும்போது..
ஆற்றாமைதாளாமல்,
என்னருமை தொலைக்காட்சியே!!
உனை நோக்கி
விரல் நீட்டுகிறேன்;
ரிமோட் சகிதம்...
உனை ஆற்றுப்படுத்த..
செங்கோலை
எங்களிடம் பறிகொடுத்தபின்னும்,
எப்பொழுதிலும்
கவிழ நேரும் கூட்டணியாட்சியாய்..
பரிபாலனம் செய்யும் இம்சையரசரே....
நீவிர்,
நல்லவரா!!!... கெட்டவரா!!!..
டிஸ்கி: இந்தக்கவிதை இந்தவார திண்ணையில் வெளிவந்துள்ளது.
அப்புறம், இது எனது 25-ஆவது கவிதை.
15 comments:
திண்ணையிலும் படித்தேன். வாழ்த்துக்கள். நல்லாத்தான் இருக்கு இம்சை அரசர்
அருமை நண்பரே.. புத்தகத்தில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.. ஓட்டுப்போட்டாச்சு
வாழ்த்துகள்! தொடர்ந்து இதுபோல பல கவிதைகள் எழுதி மகிழ்விப்பீர்களாக!
சாரல்...திண்ணையில் படிக்கும்போதே சந்தோஷமாயிருந்தது !
வாங்க எல்.கே,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க கவிதை காதலன்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க சேட்டைக்காரன்,
உங்க ஊக்கத்துக்கு நன்றி :-))
வாங்க ஹேமா,
உங்க கவிதையையும் பார்த்தேன்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
வாங்க வெறும்பய,
நன்றிங்க..
நல்லவரும்தான். கெட்டவரும்தான்.நாம் கையால்வதைபொறுத்து.
பூங்கொத்து!
வாங்க விமலன்,
சரியா சொன்னீங்க.. ரிமோட் நம்ம கையில்தானே இருக்கு :-))
வருகைக்கு நன்றி..
வாங்க அருணா மேடம்,
பூங்கொத்துக்கு நன்றி..
பார்க்க விட்டுட்டேன் போலயே. அருமை.
//நீவிர்,
நல்லவரா!!!... கெட்டவரா!!!../
‘தெரியல’ என்பாரோ நாயகன் பாணியில்:)? நமக்கும் தெரியல :(!
Post a Comment