Pages

Tuesday, May 3, 2011

சன்னமாய் ஒரு குரல்...மரணத்தின் வாசம் நிரம்பிய
சிதறிக்கிடக்கும் துளிகளினூடே..
வீதியெங்கும் என் விருட்சங்கள்
இழுத்துச்செல்லப்படும்போதும்
பரபரத்துப்பதறி
பற்றிட நினைக்கும்
என் கைகள் வெட்டப்படும்போதும்
நானெழுப்பும் கூக்குரல்
ஏனோ..
உங்கள் காதுகளை வந்தடைவதில்லை.

கருவறையே கல்லறையாவது
பெண்களுக்கு மட்டுமான
தலைவிதியென்றாலும்,
பெண் விரல்களாலும்
அது எழுதப்படுகிறது,
சில கையறுநிலைகளில்..

துளிர்த்துத்தழைக்கும்
குருத்துகளை
வேருடன் நசுக்கியெறிந்துவிட்டு;
மலர்களைத்தேடும் வீணர்களே...
மிஞ்சியிருக்கும் முட்களில்
வாசனையைத்தேடாதீர்..

உணவென்று நம்பி,,
பசிபோக்கிய பால்
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே,..
உறக்கம் கொண்டுவிட்டோம்
கள்ளித்தாய்மடியிலேயே........
பெற்றவளின் முகம்கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி;
என் முகம் அவள் பார்த்த,  தருணமென்றொன்று ....இருந்திருக்குமா?????

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

24 comments:

சாகம்பரி said...

// என் முகம் அவள் பார்த்த, தருணமென்றொன்று ....இருந்திருக்குமா????? //
பார்த்திருந்தால் பாவி வயிறு பதைத்திருக்காதா?

போளூர் தயாநிதி said...

//கருவறையே கல்லறையாவது
பெண்களுக்கு மட்டுமான
தலைவிதியென்றாலும்,
பெண் விரல்களாலும்
அது எழுதப்படுகிறது,
சில கையறுநிலைகளில்..//

எல் கே said...

வலி தெரிகிறது கவிதையில்

பாச மலர் / Paasa Malar said...

புகைப்படம் பார்த்ததும் வயிற்றைப் பிசைகிறது....வலியின் வலியான வெளிப்பாடு இக்கவிதையில்...
வலிக்க வைக்கிறது...

அமைதிச்சாரல் said...

வாங்க சாகம்பரி,

ஒருவர் முகத்தை ஒருவர் பாராமலேயே பிரிக்கப்படும் தாய்-பெண்சிசுக்கள் ஏராளம்தானே :-(

அமைதிச்சாரல் said...

வாங்க போளூர் தயாநிதி,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க எல் கே,

வரவர ஆண் பெண் விகிதம் ரொம்ப குறைஞ்சுக்கிட்டே வருதேப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க பாசமலர்,

உலகைப்பார்த்தும், பார்க்காமலும் உசிரைவிடும் பெண்சிசுக்கள் எத்தனையோ..

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி.

Ramani said...

சன்னமாய் ஒரு குரல் எனத் தலைப்பிட்டு
ஊழிக்காற்றையே உள்ளடக்கியது போன்ற
படைப்பை வழங்கியிருக்கிறீர்கள்
வார்த்தைப் பிரயோகங்கள்
உணர்வுகளை அதிர வைத்துப் போகின்றன
தரமான பதிவு
தொடர்வதில் பெருமை கொள்கிறேன்

அப்பாவி தங்கமணி said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_05.html

அமைதிச்சாரல் said...

வாங்க ரமணி,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

அறிமுகப்படுத்தி கலக்கியதுக்கு நன்றிப்பா :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//பெற்றவளின் முகம்கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி;
என் முகம் அவள் பார்த்த, தருணமென்றொன்று ....இருந்திருக்குமா?????//

...மனதைத் தொடும் வரிகள்.. உணர்ச்சிப் பூர்வமான கவிதை. நன்றிங்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//பெற்றவளின் முகம்கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி;
என் முகம் அவள் பார்த்த, தருணமென்றொன்று ....இருந்திருக்குமா????//

....எவ்ளோ கொடுமை இல்லங்க.. :(

புலவர் சா இராமாநுசம் said...

பச்சிளங் குழைந்தைக்கு
கள்ளிப் பாலே-இதைப்
படிப்போரின் நெஞ்சத்தில்
பாயும் வேலே
உள்ளத்தை உருக்கும் கவிதை

புலவர் சா இராமாநுசம்

அம்பாளடியாள் said...

என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....

Priya said...

நல்ல வரிகள், கவிதை நன்றாக இருக்கிறது!

அமைதிச்சாரல் said...

வாங்க ஆனந்தி,

தாமதமா பதில் சொல்றதுக்கு மன்னிக்கணும்..

பெண்விகிதம் குறைஞ்சுக்கிட்டே வர்றது எதுல போய் முடியும்ன்னு தெரியலை :-(

அமைதிச்சாரல் said...

வாங்க புலவர் ஐயா,

தாமதமா பதில் சொல்றதுக்கு மன்னிக்கணும்..

படிச்சவங்களும் சிலசமயங்கள்ல இதுக்கு தலைசாய்ச்சுடறதுதான் வேதனை :-(

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பாளடியாள்,

முதல்வருகைக்கு நன்றி,

எல்லோருடைய மனவலியையும் குணப்படுத்தற ஒரே மருந்து காலம் ஒண்ணுதான்..

அமைதிச்சாரல் said...

வாங்க பிரியா,

கருத்துக்கு ரொம்ப நன்றிங்க..

மாய உலகம் said...

//துளிர்த்துத்தழைக்கும்
குருத்துகளை
வேருடன் நசுக்கியெறிந்துவிட்டு;
மலர்களைத்தேடும் வீணர்களே...
மிஞ்சியிருக்கும் முட்களில்
வாசனையைத்தேடாதீர்..//

விரக்தியின் முக்தி... கவிதைகளாய் பிரதிபலிக்கிறது...

//படிச்சவங்களும் சிலசமயங்கள்ல இதுக்கு தலைசாய்ச்சுடறதுதான் வேதனை ://

ஏட்டினைப்படித்தாலும் மனம் இல்லாதவன் இறைவனிடத்திலே முட்டாளே..... ஆதங்க கவிதை அருமை

அமைதிச்சாரல் said...

வாங்க மாய உலகம்,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க மாய உலகம்,

வருகைக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..