Pages

Friday, July 15, 2011

தாளஸ்வரங்கள்..

(படத்துக்கு நன்றி இணையமே)
காலிவயிற்றின் உறுமல்களை
எதிரொலித்த வாத்தியங்களும்
தன்னிலை மறந்து
தாளமிட்ட கால்களும்
ஓய்வெடுக்கும்
சிலஇடைக்காலத்துளிகளில்,
மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன
தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;
ஸ்வரம் தப்பாமல்
இறைஞ்சும் குரலுடன் இழைந்து..



டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணை மற்றும் வல்லமை இதழ்களுக்கு நன்றி :-)

16 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
காலி வயிற்றின் உறுமல்கள்
தன்னிலை மறந்த கால்களும்..
அவர்களது நிலைகுலைந்த வாழ்வை என்னுள்
ஆழமாய் விதைத்துப்போகிறது
படமும் பதிவும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

/ஓய்வெடுக்கும்
சிலஇடைக்காலத்துளிகளில்,
மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன
தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;
/

ஆம் மெல்லியதாகவே.. தாரளமாக வந்து விழுவதில்லை:(

நல்ல கவிதை சாரல்.

Jaishree Iyer said...

மிக அழமான கருத்துக்கள்...மிகவும் அருமை!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வருமையின் உச்சம்..

அற்புதமான கவி படைப்பு...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

என்னவெல்லாம் பாடுபட வேண்டியிருக்கு அவங்க :-(

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

சரியா சொன்னீங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெயஸ்ரீ,

முதல்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

ரொம்ப நன்றிங்க..

மாய உலகம் said...

//மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன
தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;//

இந்த கவிதை படித்த பிறகாவது இனி சத்தமாய் முனகிக்கொண்டு தட்டு நிறையட்டும் வட்ட நாணயங்கள்... அவர்களின் வாழ்க்கை மாறி... இசையில் ஆரோகனம் ஆகட்டும்... மனதை இரங்க கொள்ளும் கவிதை..வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

உங்க வாழ்த்து பலிக்கட்டும்.. அப்படியே அந்தக்குழந்தைகள் தட்டெடுத்து வாழாமல், (b)புக்கெடுத்து வாழட்டும்ன்னும் வாழ்த்திருங்களேன் :-)

ரிஷபன் said...

ஸ்வரம் தப்பாமல்
இறைஞ்சும் குரலுடன் இழைந்து..

அப்படியே அந்த காட்சி கண்ணில் விரிகிறது..

vetha (kovaikkavi) said...

''..தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;
ஸ்வரம் தப்பாமல்
இறைஞ்சும் குரலுடன் இழைந்து....''
ஓ!..நல்ல உவமை இது...பிடித்துள்ளது...

வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

கவிதையை சிலாகிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேதா,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேதா,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! உங்களது கவிதை வரிகளை எனது வலைப் பதிவு கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளேன். ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் தெரியப் படுத்தவும். நன்றி!