அமாவாசையன்றும் பட்டுத்தெறிக்கின்றன
பௌர்ணமிச்சிதறல்கள்..
ஜன்னலில் பூத்த
மழலையின் மிழற்றல்களில்..
சோறூட்டவென்று
துணைக்கழைக்கப்பட்ட நிலா...
இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை, தானே ஒப்பு நோக்கி
வெட்கித் தலைகுனிகிறது..
சாட்சிக்கழைக்கப்பட்ட
நட்சத்திரங்களோ,.. சிதறியோடி
மண்ணில் ஒளிந்துகொள்கின்றன,
ஒருவாய்ச்சோற்றுருண்டையிலிருந்து..
தீர்ப்பு சொல்லவந்து
தோற்றுச்சரணடைகின்றன
இசைக்கருவிகள்,
தென்றலெனத் தழுவும்,....
'அம்மா' என்ற மழலைச்சொல்லின் முன்...
டிஸ்கி: இந்தக் கவிதை வல்லமையில் வெளியானது.
