ஆயிரம் முறை சொல்லியனுப்பியும்
இனிப்புடன் வரமறந்த
தந்தையின் மீதான நேற்றைய கோபத்தை
ஒரு கண்ணிலும்; ..
உடன் விளையாட வரமறுத்த
அன்னையின் மீதான இன்றைய கோபத்தை
இன்னொரு கண்ணிலும்
சுமந்துகொண்டு;
கட்டிலிலேறி கவிழ்ந்துகொள்கிறாய்..
என்னுடைய எல்லா
சமாதானமுயற்சிகளையும் புறந்தள்ளிவிடுகிறது….
உன்னுடைய செல்லக்கோப
கன்னஉப்பல்…
அம்மாசித்தாத்தாவின் பஞ்சுமிட்டாய்வண்டி
தூதனுப்பிய மணியோசையும்கூட
உனது பொய்த்தூக்கத்தை
கலைக்கமுடியாமல் வெட்கி;
முகம் மறைத்தோடுகிறது இருளில்..
தாயின் குரலும்
தந்தையின் சீண்டலும் பலனளியாமல்..
ஊர்ந்துவந்த நண்டும் நரியும்கூட
விரல்விட்டு இறங்கியோடிவிடுகின்றன..
இனிப்புப்பெட்டியின் கலகலச்சத்தம் ஏற்படுத்திய
இமைகளுக்குள்ளின் மெல்லிய நடமாட்டத்தை,
அவசரமாய் தலையணையில் முகம்புதைத்து
கைதுசெய்கிறாய்..
கொஞ்சலும் கெஞ்சலும் பயனற்றபொழுதில்;
மிட்டாய்ப்பெட்டி திரும்பக்கொடுக்கப்பட்டுவிடுமென்ற
செல்லமிரட்டலுக்கு உடனே பலனிருக்கிறது!!..
‘தூங்கும் பிள்ளைக்கு காலாடுமே’யென்ற
பல்லாண்டு பழைய அங்கலாய்ப்புக்கு
உடனே பதில்சொல்கிறாய் ‘தற்செயலாய்’ விரலசைத்து..
பொய்த்தூக்கமேயெனினும்
அவ்வழகும் ரசிக்கக்கூடியதேயன்றோ!!!!!..
இதற்காகவென்றேனும், அடிக்கடி ,
அறிதுயில் கொள்ளடா..
என்,
அனந்த பத்மநாபனே………
டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி. ஏற்கனவே அமைதிச்சாரல் தளத்தில் பகிர்ந்திருந்தாலும் ஒரு கணக்குக்காக இங்கேயும்.
டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி. ஏற்கனவே அமைதிச்சாரல் தளத்தில் பகிர்ந்திருந்தாலும் ஒரு கணக்குக்காக இங்கேயும்.
13 comments:
supper kavithai..
vaalththukkal..
சூப்பர்ப் சாரல் கவிதை...!!!
ஒவ்வொரு வரியும் நச்
அருமையான கவிதை
//செல்லக்கோப கன்ன உப்பல்//அப்படியே காட்சியாய் விரிகிறது மனதில்.அருமை.
அருமை பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
கவிதை சூப்பர்ப்...வாழ்த்துக்கள்...தின்னையில் பிரசரம் ஆனதருக்கு டபுள் வாழ்த்துக்கள்
வாங்க விடிவெள்ளி,
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க மனோ,
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க ஆமினா,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க elan,
ரொம்ப நன்றிங்க ரசிச்சு வாசிச்சதுக்கு.
வாங்க தமிழ்த்தோட்டம்,
வாசிச்சதுக்கு நன்றி.
//செல்லக்கோப
கன்னஉப்பல்…//
nice lines :)
குழந்தைமொழி வெகு அழகு. அது கொள்ளும் அறிதுயிலையும் அழகிய கவியாக்கியது அருமை.
Post a Comment