கூண்டுக்கு வெளியே
பெருங்காடொன்று இருக்கும்
என்றெண்ணி,
சுதந்திரமாய் வாழும் கனவில்
தப்பி வந்தது வரிக்குதிரையொன்று..
காடாய்க்கிடந்த
நிலமெல்லாம்
மக்கள் முளைத்துக்கிடப்பதையும்,
மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு
தலைசுற்றியமர்ந்த வரிக்குதிரையிடம்,
தும்பிக்'கையை' நீட்டியது யானையொன்று..
பழக்கதோஷத்தில்...
யானையே
பூனையாய் அடங்கிய இடத்தில்,
அடையாளங்களை இழந்து
கழுதையாய் குதிரையாய் வாழவிழையாமல்,
சுதந்திரமற்ற அடிமைவாழ்வெனினும்
சுயமாய் வாழ்வதே மேலென்றெண்ணி,
கூண்டுக்குள் ஓடி
இறுகத்தாழிட்டுக்கொண்டது வரிக்குதிரை..
சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..
டிஸ்கி: இந்தக்கவிதை வல்லமையின் சுதந்திர தின சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது.
பெருங்காடொன்று இருக்கும்
என்றெண்ணி,
சுதந்திரமாய் வாழும் கனவில்
தப்பி வந்தது வரிக்குதிரையொன்று..
காடாய்க்கிடந்த
நிலமெல்லாம்
மக்கள் முளைத்துக்கிடப்பதையும்,
மாக்களாய் நடந்துகொள்வதையும் கண்டு
தலைசுற்றியமர்ந்த வரிக்குதிரையிடம்,
தும்பிக்'கையை' நீட்டியது யானையொன்று..
பழக்கதோஷத்தில்...
யானையே
பூனையாய் அடங்கிய இடத்தில்,
அடையாளங்களை இழந்து
கழுதையாய் குதிரையாய் வாழவிழையாமல்,
சுதந்திரமற்ற அடிமைவாழ்வெனினும்
சுயமாய் வாழ்வதே மேலென்றெண்ணி,
கூண்டுக்குள் ஓடி
இறுகத்தாழிட்டுக்கொண்டது வரிக்குதிரை..
சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..
டிஸ்கி: இந்தக்கவிதை வல்லமையின் சுதந்திர தின சிறப்பிதழில் வெளியாகியிருக்கிறது.
20 comments:
மக்கள் மாக்களாக நடந்துகொள்ளும் விதத்தை கவிதையில் சுட்டிக்காண்பித்திருப்பது கலக்கல்
நல்லா இருக்கு வல்லமை ஆசிரியரே
சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..
மனம் கவர்ந்த வரிகள்
அருமை அரும
தொடர வாழ்த்துக்கள்
வாங்க மாய உலகம்,
சிலசமயம் அப்படித்தானே இருக்கு :-(
வாசிச்சதுக்கு நன்றி.
வாங்க அதீதம் ஆசிரியரே,
வாசிச்சதுக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க ரமணி,
தொடர்ந்து கொடுத்துவரும் உற்சாக வரிகளுக்கு ரொம்ப நன்றி :-)
அசத்தல் கவிதை சாரல்!
வாழ்த்துக்கள்!
//சுதந்திரமற்ற அடிமைவாழ்வெனினும்
சுயமாய் வாழ்வதே மேலென்றெண்ணி,
கூண்டுக்குள் ஓடி
இறுகத்தாழிட்டுக்கொண்டது வரிக்குதிரை..//
அருமை அருமை
thamilmanam 2
//சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..//
இந்த வரிகளில் பொதிந்திருக்கிறது முழுக்கவிதையின் கருவும். வரிக்குதிரையின் இடத்தில் வாழ்க்கைச்சிறையில் அகப்பட்ட பெண்களை நினைத்துக்கொண்டேன். வரிக்கு வரி மிகப் பொருந்திப் போகிறது அவர்களது இல்(லா)வாழ்க்கை!!
கூண்டுக்குள் ஓடி
இறுகத்தாழிட்டுக்கொண்டது வரிக்குதிரை..
சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..அருமை அருமை
வாங்க சுந்தரா,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க//
வாங்க ஆமிணா,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.
வாங்க மாய உலகம்,
இரண்டாவது நன்றி :-)
வாங்க கீதா,
க.க.க. போங்கள் ;-)
வாசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க மலதி,
வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.
சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன../
நல்லாயிருக்குங்க...
வாழ்த்துக்கள்..
வலியின் தடங்கள் வரிக் குதிரையின் முதுகில்.. நல்ல கவிதை.. வல்லமையில் வாசித்தேன்
''...சுதந்திரமில்லாத சுயமும்
சுயமில்லாத சுதந்திரமும்
கெக்கலி கொட்டிச்சிரித்துக்கொண்டிருந்தன..'''
நல்ல வரிகள் வாழ்த்துகள் சகோதரா! பணி தொமரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
<> நல்ல கவிதை, இந்த வரிகளும் அரருமை
Post a Comment