அமாவாசையன்றும் பட்டுத்தெறிக்கின்றன
பௌர்ணமிச்சிதறல்கள்..
ஜன்னலில் பூத்த
மழலையின் மிழற்றல்களில்..
சோறூட்டவென்று
துணைக்கழைக்கப்பட்ட நிலா...
இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை, தானே ஒப்பு நோக்கி
வெட்கித் தலைகுனிகிறது..
சாட்சிக்கழைக்கப்பட்ட
நட்சத்திரங்களோ,.. சிதறியோடி
மண்ணில் ஒளிந்துகொள்கின்றன,
ஒருவாய்ச்சோற்றுருண்டையிலிருந்து..
தீர்ப்பு சொல்லவந்து
தோற்றுச்சரணடைகின்றன
இசைக்கருவிகள்,
தென்றலெனத் தழுவும்,....
'அம்மா' என்ற மழலைச்சொல்லின் முன்...
டிஸ்கி: இந்தக் கவிதை வல்லமையில் வெளியானது.
16 comments:
கற்பனையும் கவிதையும் அருமை
கவிதை என்முன்னே காட்சியாய்
விரிந்து களிப்பூட்டுகிறது
சுருக்கமாகவும் அதே சமயம்
மனதுக்கு மிகவும் நெருக்கமாகவும்
இருக்க படைக்கப் பட்ட இக்கவிதை
அருமையிலும் அருமை
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
மழலை நிலவை இரசித்தேன்.
நண்பர் சௌந்தர் கூட இன்று
இதே பொருளில் தான் கவிதை தீட்டியுள்ளார்..
http://kavithaiveedhi.blogspot.com/2011/08/blog-post_29.html
பார்த்தீர்களா..
இறைவா... இது போல எழுத எனக்கு வல்லமை தாராயோ? :-)
கவிதை கலக்கல் கலக்குங்க வாழ்த்துக்கள்
ஒவ்வொரு வரியிலும் வெளிப்படும் மழலைப் பிம்பம் கண்டு வெட்கிப்போகின்றன என்னிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளும். மிகப் பிரமாதம். பாராட்டுகள்.
மிக அழகான கவிதை சாரல்!
கவிதை அழகா, அந்த மழலை அழகா என்ற கேள்வி எழுகிறது :)
pazham unarvukale puthumaik konatthil mika azhakaka velippattulladhu;thangal thamilum kaikodutthulladhu.
''..தீர்ப்பு சொல்லவந்து
தோற்றுச்சரணடைகின்றன
இசைக்கருவிகள்,
தென்றலெனத் தழுவும்,....
'அம்மா' என்ற மழலைச்சொல்லின் முன்...''
அருமையான கவிதை. மழலையும் நிலாவும் மனிதன் உள்ளவரை மறையாத சிந்தனையன்றோ! பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
தென்றலெனத் தழுவும்,....
'அம்மா' என்ற மழலைச்சொல்லின் முன்
வள்ளுவன் குறளை
வழி மொழிகிறது
அருமை!
புலவர் சா இராமாநுசம்
/தீர்ப்பு சொல்லவந்து
தோற்றுச்சரணடைகின்றன
இசைக்கருவிகள்,
தென்றலெனத் தழுவும்,....
'அம்மா' என்ற மழலைச்சொல்லின் முன்...//
குழலினிது யாழினிது என்பர்... இதைக்கேட்கும் இல்லை படிக்கும் போது எல்லாம் தோற்றுப் போகிறது. அருமை..
மிக அருமையான வரிகள் ..மீண்டும் வாசிக்கவும் இனிமையாக உள்ளது.
வேதா. இலங்காதிலகம்.
சோறூட்டவென்று
துணைக்கழைக்கப்பட்ட நிலா...
இடுப்பிலிருக்கும் தன் பிம்பத்தை, தானே ஒப்பு நோக்கி
வெட்கித் தலைகுனிகிறது..
அடடா.. என்ன அழகான வரி..
தீர்ப்பு சொல்லவந்து
தோற்றுச்சரணடைகின்றன
இசைக்கருவிகள்,
தென்றலெனத் தழுவும்,....
'அம்மா' என்ற மழலைச்சொல்லின் முன்...
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி பகிர்வுக்கு .
Post a Comment