படம் கொடுத்து உதவிய இணையமே உனக்கு நன்றி..
தொடர்ந்த வாசிப்பினால்
ஓரம் கிழிந்த புத்தகங்கள்
மேலும் கிழிக்கப்பட்டன
பொட்டலம் கட்டப்படவென..
இதயத்தின் அருகிலோ அல்லது
ஏதோ ஓர் மூலையிலோ,
மாறுபடவும் கூடும்,
அதன் முக்கியத்துவமும் இருப்பிடமும்
உள்ளடக்கத்தினைப் பொறுத்து..
கடலையோ வைரமோ
அல்லது
சுமக்க நேரிட்ட எண்ணக் குவியல்களோ;
ஏதோவொன்றின்
உபயோகம் தீர்ந்த பின்
கசக்கி வீசப்பட்டாலும்
மேலும்
உபயோகப் படவெனக் காத்திருக்கின்றன,
கோணியும் பசியும்
சுமந்தலையும்
இருகால் மற்றும் நாற்கால் உயிர்களுக்காய்,
குப்பையென அவதாரமெடுத்து..
டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..
6 comments:
அருமையான கவிதை.
/மாறுபடவும் கூடும்,
அதன் முக்கியத்துவமும் இருப்பிடமும்
உள்ளடக்கத்தினைப் பொறுத்து..//
உண்மைதான். முடித்த விதமும் சிறப்பு.
தேவை தீர்ந்த பின்னும் அடுத்த அவதாரம் எடுத்துவிடுகிறது
நல்ல வரிகள்
வாழ்த்துக்கள்
சாரல்...ஒன்றிலிருந்து வேறொன்றாய் மாறுபடுவதுதானே இயல்பு.அருமை !
நல்ல கவிதை,நல்ல சிந்தனை,நிறய எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
மறுசுழற்சியெனும் மறுபிறவியின்றி மண்ணோடு மண்ணாக மக்கியபின்னும் மறு அவதாரமெடுக்கக் கூடும் மண் கிளைத்த மரமாய்.... மரத்தின் உயிராதாரமாய்... உரமாய்!
அழகான கவிதை அமைதிச்சாரல். பாராட்டுகள்.
அமைதியாக அழகாகச் சொல்லப்பட்ட கருத்துகள்..வாழ்த்துகள் சாரல்
Post a Comment