Pages

Wednesday, November 23, 2011

எவரேனும்..


விருந்தினர் வரவைக்
கரைந்தறிவிக்கும் காக்கை
தானே ஒரு
விருந்தினரானது;
அப்பாவின் திதியன்று.. 
அவரே வந்ததாய் எண்ணி
பரிமாறிக் கொண்டிருக்கிறாள் அம்மா,
அப்பாவுக்குப் பிடித்ததையெல்லாம்..
தலை சாய்த்து உண்ணும்
காகத்தின் பார்வை
மின்னலாய்ச் சொடுக்கிப் போகிறது
மின்கம்பத்தில் முன் தினம்
கருகி வீழ்ந்த காகத்தின் நினைவையும்
கருகாத கேள்வியொன்றையும்.. 
பகிர்ந்துண்ணவும் பாசம் கொள்ளவும் மட்டுமன்றி,
பிண்டமிடவும் பித்ருவாய் வரவும்
அவற்றின் உலகிலும்
எவரேனும் இருக்கக் கூடுமோ?

டிஸ்கி: வல்லமையில் எழுதியதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)


7 comments:

ஷைலஜா said...

கவிதை ரொம்ப அருமை

ஹேமா said...

சாரல்...கேள்வி மனதில் கேள்வியாகவே கரைகிறது !

ராமலக்ஷ்மி said...

அருமை சாந்தி.

பால கணேஷ் said...

வித்தியாசமான கோணத்தில் சிந்தனை, அருமையான நடையில் நல்ல கவிதை. படித்ததில் நிறைவு. இனி தொடரும் என் வரவு. நன்றி...

Asiya Omar said...

அருமை.தொடர்ந்து கவிதை எழுதுங்க.நிகழ்வுகள் தான் மனதை தொடும் பொழுது கவிதையாக உருபெறுகிற்து.

கீதமஞ்சரி said...

காக்கையின் வாழ்க்கையில் கரிசனம் கொண்ட மனம் எழுப்பும் கேள்வி எனக்குள்ளும் ஏராள சிந்தனைகளைத் தூண்டுகிறது. நல்ல கவிதை அமைதிச்சாரல்.

அம்பாளடியாள் said...

கவிதை அருமை வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ....