Pages

Thursday, December 15, 2011

வீடென்பது...


(படம் பிடிச்ச என்னோட காமிராவுக்கு நன்றி :-))
அவனும் அவளுமான சிற்றோடைகள்
கை கோர்த்து நடந்த
பாதச் சுவடுகள் பற்றி நடந்த சிறு நதிகள்
சங்கமமாயின வீடெனும் கடலில்..
வீடெனும் சொல்
திறந்து விட்டு விட்ட
நினைவுப் பேழையினுள் அமிழ்ந்து கிடந்த
ஞாபகப்பூச்சிகளின் சிறகடிப்பினூடே,
கீற்றுத்துண்டாய் வெட்டி மறைகிறது
கம்பிகளினூடே வெயிலில்
பிடிவாதமாய் நனையும் மருதாணிப்பூக்கள்
வாசலில் வரைந்த வாசனைக்கோலம்..
பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்
கைப்பிடித்து நலம் விசாரித்துச் செல்கின்றன
இப்போதாவது வந்தாயாவென..
தனக்கென்றதோர் கூடாயும்
அன்னியோன்னியமாயும் இருந்து வந்து,
அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்
உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)

30 comments:

வல்லிசிம்ஹன் said...

பூட்டிய வீட்டிற்குள் புதையலாக ஊடாடும் நினைவுகள் வெகு அழகு.
அருமையான சொற்குவியல். வாழ்த்துகள் சாரல்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நினைவுகளின் சங்கமம். கவிதை ரொம்ப நல்லாருக்கு சாந்தியக்கா.

கீதமஞ்சரி said...

உரித்தெரியப்பட்ட பாம்புச்சட்டை - புறக்கணிக்கப்பட்டப் பரம்பரை வீட்டுக்கு இதைவிடவும் பொருத்தமான உவமை இருக்கமுடியுமா என்று வியக்கிறேன். புலம்பெயர் நிர்ப்பந்தமோ, பொருளாதார நிமித்தமோ, நாகரிகத்தின் வளர்ச்சியோ, நகரவாழ்க்கையின் மோகமோ எதுவாகவேனும் இருக்கட்டும். ஆனால் பூட்டப்பட்ட வீடுகளின் பின்னே இருக்கும் நினைவுச்சுவடுகளின் தாக்கம் வெகு அருமை. பாராட்டுகள்.

Admin said...

தளத்திற்கு என் முதல் வருகை..அழகான கவிதை சகோ..வாழ்த்துகள்..வருகையை எதிர்பார்க்கிறேன்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

படத்தில் உள்ள வீடு ரொம்ப நல்லாருக்கு.. ஊரில் உள்ள உங்க வீடா?..

Yaathoramani.blogspot.com said...

அடுத்த தலைமுறையின் முடி சூட்டலுக்குப் பின்
உரித்தெறியப்பட்ட பாம்புச் சட்டையாய்
வீசப்பட்ட பின்னர்
அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு //.

ஒருசிறு சொற்றோடருக்குப் பின் தான்
எத்தனை ஆழமான பொருள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகான கவிதை...

ராமலக்ஷ்மி said...

/பூட்டப் பட்டிருக்கும் கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து நிற்கும் ஞாபகங்கள்/

உணர்வுப் பூர்வமான கவிதை சாரல். மிக அருமை.

ஹேமா said...

வீடென்பது....வாழ்வின் நெம்புகோல்.உயிர்நாடி...இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.எங்கள் குடிசைச் சுவர்களைத் தொலைத்து வீடற்றுத் திரியும் எங்களிடம் கேளுங்கள்.அற்புதமான கவிதை !

அன்புடன் மலிக்கா said...

அற்புதமான அழகான உணர்வுகள் கொண்ட கவிதை சாந்தி [யக்கா]

பாச மலர் / Paasa Malar said...

சட்டென்ற திருப்பமாக அந்தக் கடைசி வரிகள்....ரசித்தேன்..

சசிகலா said...

வீசப்பட்ட பின்னர்
அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.

சசிகலா said...

அருமையான வரிகள்

அம்பாளடியாள் said...

அழகான கவிதை .பகிர்வுக்கு மிக்க நன்றி
வாழ்த்துக்கள் .

கீதமஞ்சரி said...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.

ராஜி said...

அன்னியப் பட்டும் நிற்கிறது
வீடென்பது சிலருக்கு.
>>>
வீடிற்கு மனதில்லை என்ற எண்ணத்தில்....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ரொம்ப நன்றிம்மா வரவுக்கும் வாசிச்சதுக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

அது எங்க வீடில்லைப்பா.ரிட்டையர்மெண்டுக்கு அப்றம் செட்டிலாகலாமேன்னு யோசிச்சு அங்கே போய் பார்த்தோம். ரொம்பவே தூரத்துல இருக்குது. திருனேலிக்கு பக்கத்துல 'ஷிபா'கட்டுறாங்க. விவரம் இந்த சுட்டியில் இருக்கு.

http://shifahousing.com/index.php?option=com_content&task=view&id=14&Itemid=32

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கீதா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதுமதி,

முதல் வருகைக்கும் வாசிச்சதுக்கும் ரொம்ப நன்றி சகோ :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க செல்வம்,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமணி,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

வரவுக்கும் வாசிச்சதுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வாசிச்சதுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

காலம் எப்போதும் இப்படியே இருந்துடறதில்லை. கண்டிப்பா விடியும். நம்பிக்கையோடிருப்போம்.

வாசிச்சதுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மலிக்கா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

பாசத்துடன் அளித்த கருத்துக்கு ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகலா,

வாசிச்சதுக்கும் வரவுக்கும் ரொம்ப நன்றிங்க :-)

Marc said...

அருமையான கவீதை வாழ்த்துகள்