படம் எடுத்த என்னோட காமிராவுக்கு நன்றி :-)
உதிரா இலைகளுடனும் அசையா மரங்களுடனும்
தானும் சோகத்தில் கலந்து கொண்ட
முதிராப் பூக்களை
நலம் விசாரிக்க வந்த பட்டாம்பூச்சி
வண்ணங்களையெல்லாம் உதிர்த்து நின்றது
குழந்தைகள் விளையாடாதிருந்த
பூங்காவில்..
சிறு நடை போட்டு வந்த
பிஞ்சுக்கூட்டத்தின்
விரல் பிடித்து வந்த தென்றல்,
கூத்தாடிக் கூத்தாடி உதிர்த்த இலைகளில்
ஒட்டிக் கொண்ட உற்சாக வர்ணங்களில்
புரண்டெழுந்த பூக்களைத்
தூரிகையாக்கித்
தீற்றிப் போகிறது வானவில்லை
பட்டாம்பூச்சியின் இறகுகளில்.
பிரபஞ்சமெங்கும் குளித்தெழுகிறது
வானவில்லின் நறுமணத்தில்.
டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன் :-)
17 comments:
படமும் , கவிதையும் அருமை !
படமும் அழகு. படைத்த கவிதையும் அழகு.
/தீற்றிப் போகிறது வானவில்லை
பட்டாம்பூச்சியின் இறகுகளில்/
குறிப்பாக ரசித்த வரிகள்!!!
அழகிய ஓவியமாய் வண்ணப் புகைப் படமும்
அதற்கான விளக்கமாய் அமைந்த கவிதைக் காவியமும்
மிக மிக அருமை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
சிறு நடை போட்டு வந்த
பிஞ்சுக்கூட்டத்தின்
விரல் பிடித்து வந்த தென்றல்,
கூத்தாடிக் கூத்தாடி உதிர்த்த இலைகளில்
ஒட்டிக் கொண்ட உற்சாக வர்ணங்களில்
புரண்டெழுந்த பூக்களைத்
தூரிகையாக்கித்
தீற்றிப் போகிறது வானவில்லை
பட்டாம்பூச்சியின் இறகுகளில்.
ஜென் வாசம் தெரிக்கும் அழகிய கவிதை வாழ்த்துகள்
படமும் , கவிதையும் அழகு.
அருமை
அருமை
பிரபஞ்சமெங்கும் குளித்தெழுகிறது
வானவில்லின் நறுமணத்தில்../////
அடடா!!அழகு!
இயற்கையை ரசிக்கும் மனம் தெரிகிறது இக்கவிதையில். அழகுக் கவிதை. அருமை.
இயற்கையை ரசிக்கும் மனம் தெரிகிறது இக்கவிதையில். அழகுக் கவிதை. அருமை.
பூக்கள் தீட்டிப்போன வானிவில் வண்ணத்துப்பூச்சிகளிலா....அழகோ அழகு சாரல் !
குழந்தைகள் அற்ற வெற்றுப் பூங்கா, நிறம் உதிர்க்கும் வண்ணத்துப்பூச்சி, பிஞ்சுவிரல்பிடித்து வந்த தென்றல்,
பூத்தூரிகை, வானவில் சிறகுகள் என்று வரிக்கு வரி வர்ணனையின் அழகில் சொக்கிப்போனேன். புகைப்படம் அழகு. பாராட்டுகள்.
படமே கவிதையாயும்,கவிதையே படமாயும் விரிந்திக்கிறது நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
எண்ண ஓவியக் கவிதை..அழகு
கவிதையும் அதுக்குப் பொருத்தமாகப் படமும் அழகு..
தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_17.html
Post a Comment