Pages

Saturday, March 31, 2012

வேரிலும் பூக்கலாம் வசந்தங்கள்..

படம் இணையத்தில் சுட்டது :-)
பெருவெளியெங்கும் பரந்து விரிந்திருந்த
கூட்டுக்குடும்ப விழுதுகள்
அற்றும் இற்றும் போன பின்
தனிமை கொன்று கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மரத்தில்
மிச்சமிருக்கிறது பசுமை.. இன்னும்,
மனித நேயத்தைப் போலவே.

சென்றவர்களெல்லாம்
மீண்டும் வரக்கூடுமென்ற
மீதமிருந்த நம்பிக்கையுடன்
ஆகாயத்துடன் உரையாடியபடி
மேகங்களை எதிர் நோக்கும் பொழுதுகளிலும்
ஊமையாகி விடாமல் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது
பறவைகளின் தாலாட்டுக்குரல்,
இன்னும் வெட்டப்படாத கிளைகளில்.

தனிமைக்கடத்தியாய்
ஏகாந்தம் கலைத்த தென்றலோ
வனமெங்கும் பூச்சொரிகிறது
ஏக்கம் சுமந்த வேர்களில்..
கானல் நீருக்காய்க் காத்திருந்த ஏக்கத்தில்
வேரடி வசந்தத்தை மறந்ததையெண்ணி
நெகிழ்ந்து சிரிக்கிறது
ஒற்றை மரம்.




டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.

7 comments:

பாச மலர் / Paasa Malar said...

வேரின் வசந்தங்கள் மணக்கின்றன....

ராமலக்ஷ்மி said...

/பெருவெளியெங்கும் பரந்து விரிந்திருந்த
கூட்டுக்குடும்ப விழுதுகள்
அற்றும் இற்றும் போன பின்
தனிமை கொன்று கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மரத்தில்
மிச்சமிருக்கிறது பசுமை.. இன்னும்,
மனித நேயத்தைப் போலவே./

அருமையான வரிகள். நம்பிக்கைதானே வாழ்க்கை. நல்ல கவிதை சாந்தி.

ஹேமா said...

ஒற்றை மரத்தின் நினைவுகளை அசைக்கச் சொரிகிறது வசந்தங்கள்.அருமை !

ராஜி said...

தனிமைக்கடத்தியாய்
ஏகாந்தம் கலைத்த தென்றலோ
>>
வார்த்தைகள் விளையாடுது உங்க கவிதையில்.வாழ்த்துகள்.

கீதமஞ்சரி said...

காலடி வசந்தங்கள் இனியேனும் கவனம் ஈர்க்கப்படும், இக்கவிதை முடித்தக் கணத்திலிருந்து. அருமை அமைதிச்சாரல். பாராட்டுகள்.

ராஜி said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
எனது இனிய தமிழ் புதுவருட நல் வாழ்த்துக்கள் சகோ

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட,

பாசமலர்,
ராமலக்ஷ்மி,
ஹேமா,
ராஜி,
கீதமஞ்சரி,
அனைவருக்கும் நன்றியும் கால தாமதமான புது வருட வாழ்த்துகளும்..