Pages

Wednesday, May 30, 2012

அந்த இரவில்..

இணையத்தில் சுட்ட படம்..
மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன்
ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை.
‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும்.
கதகதப்பான கை தேடிப்பற்றிக்கொள்கிறேன்
நடை பழகச்சொல்லித்தந்த
அந்தச் சுட்டு விரலை.
உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த்தருகிறார்..
வாஞ்சையுடன்
ஒரு தலை கோதலை,
என் தகப்பன்..
நண்பனின் தந்தைக்கு
இறுதியாய் விடை கொடுத்து
நான் வீடேகிய அந்த இரவில்..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

13 comments:

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான கவிதை சாந்தி!

Unknown said...

பாசத்தை எடுத்தியம்பிய நெகிழ்வான கவிதை. மனதைத் தொட்டது சாரல் மேடம். பிரமாதம்.

ஹேமா said...

என் அப்பா...ஊரில் சுகயீனமுற்றிருக்கிறார் சாரல்.அந்த நினைவுதான் வருகிறது உங்கள் வரிகளில்.....!

கோவி said...

அருமையான கவிதை..

Anonymous said...

மிகவும் அற்புதமான வரிகள்
" கதகதப்பான கை தேடிப்பற்றிக்கொள்கிறேன்
நடை பழகச்சொல்லித்தந்த
அந்தச் சுட்டு விரலை.".....
நெஞ்சை தொடும் கவிதை வரிகள் அருமை அக்கா....

vimalanperali said...

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.தகப்பன்கள் எப்போழுதும் ஒரு இன்ஸ்பிரேஸனாக யாருக்காவது/

கீதமஞ்சரி said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை. எழுத்தை மறைக்கும் கண்ணீர்க்கசியலை ஒதுக்கியபடி பின்னூட்டமிடுகிறேன். கவிதை படித்து எனக்குள்ளும் எழுகிறது என் தந்தையின் ஸ்பரிசத்தேடல். மனந்தொட்டக் கவிதைக்குப் பாராட்டுகள் அமைதிச்சாரல்.

வல்லிசிம்ஹன் said...

தந்தை விடைபெற்றாலும் விடைபெறாத ஆதரவு இந்தக் கவிதை சொல்கிறது. அருமை சாரல் சாரல்.

ரிஷபன் said...

வாஞ்சையுடன்
ஒரு தலை கோதலை,
என் தகப்பன்..

அப்பா பற்றி பேசவும் ஆள் இருக்கு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசித்தமைக்கு நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நிரஞ்சனா,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேம்ஸ்,

உங்க அப்பா சீக்கிரமே நலமாகப் பிரார்த்திக்கிறேன்,

ரொம்ப நன்றிங்க வாசிச்சதுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவி,

ரொம்ப நன்றிங்க..