இணையத்தில் பிடித்து வந்த காற்று..
சிறைப்படும்ஒவ்வொரு தருணங்களிலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்..
ஊழிக்கூத்தாடியதும்
ஊரையே புரட்டிப்போட்டதும்
வேறெதுவோ என்று மறுதலித்து விட்டு
கட்டிச்சமர்த்தாய்ப்
புல்லாங்குழற்சிறுவன் பின்
ஆட்டுக்குட்டியென வந்த தென்றல்
பரிந்தூட்டும் தாயென
வியர்த்த முகங்கள் துடைத்தபின்
கலைத்து விளையாடுகிறது மேகங்களை
தீராத விளையாட்டுப்பிள்ளையாய்..
டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.
8 comments:
/கட்டிச்சமர்த்தாய்ப்
புல்லாங்குழற்சிறுவன் பின்
ஆட்டுக்குட்டியென வந்த தென்றல்/
அருமை:).
அழகான கவிதை, சாந்தி!
காற்றெனும் குறும்புக் குழந்தை, தன்னைக் கட்டிப்போட்டக் கவிதைக் கயிற்றை இழுத்துப் பார்த்துச் சிரிக்கிறது இன்னுமொருமுறை. அழகான கவிதைக்குப் பாராட்டுகள் அமைதிச்சாரல்.
arumaiyaana varikal innum neraya eluthungal thodarnthu ungal thalam varukiren
nandri
kavithai nadan
Nice.
அருமை அருமை
மனம் கவர்ந்த அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
Tha.ma 2
Very nice. I always enjoy good breeze.
வாசித்துக் கருத்துரையிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி..
Post a Comment