இணையத்தில் சுட்ட கிளி..
தலையைத்தலையைஆட்டிக்கொண்டு உட்காந்திருக்கிறது
அந்தப்பறவை
தன்முன் இறைந்து கிடக்கும்
கேள்விகளைக்கொறித்தபடி..
எதிர்காலக்கேள்விகளை இறைப்பவர்க்கு
இறந்தகாலக்கேள்விகளைச் சாமர்த்தியமாய்ப் பதிலளித்து
கேள்விக்குறிகள் நிரம்பிய
தன் நிகழ்காலச்சிறையில்
முடங்கிக்கொள்ளும் அப்பறவை
இரண்டு நிமிடச் சுதந்திரக்காற்றில்
சிறகு விரித்துப் பறக்கிறது விர்ர்ர்ரென,
புதிதாய் முளைத்திருந்த
இறகுகளிலிருந்து சிதறி மிதக்கின்றன
கேள்விகள்
காற்றுவெளியெங்கும் எண்ணிலடங்காதவையாய்..
இறுக மூடியிருக்கும் என் கைகளில்
இன்னும் மீதமிருக்கும்
கேள்விகளைக் கேலி செய்தபடி..
டிஸ்கி: ஜூன் 15-30 அன்று வெளியான இன் அண்ட் அவுட் சென்னை இதழில் வெளியானது.
7 comments:
ஆம், கேள்விகள் தீருவதேயில்லை.
/எதிர்காலக்கேள்விகளை இறைப்பவர்க்கு
இறந்தகாலக்கேள்விகளைச் சாமர்த்தியமாய்ப் பதிலளித்து/
அருமை. இன் அண்ட் அவுட் வெளியீட்டுக்கும் வாழ்த்துகள், சாந்தி!
Good one!!!
Irandu nimida suthanthira katru anthavari supper
ஜோசியக் கிளியின் நிகழ்காலச் சிறை வாழ்வு, குறித்து எளிமையான வரிகளில் தெளிவான கவிதை.
EXCELLENT...!!!!!
மிகவும் அருமையான வரிகள் கிளியைப்பற்றி....
வாசித்துக் கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி..
Post a Comment