Pages

Friday, July 6, 2012

மந்திரச்சொல்..


இணையத்தில் சுட்ட படம்..
தாள முடியாமற் போகிறது
உனதன்பைச்
சில சமயங்களில்..
மெல்லிய நீரோடையாய்ச் சலசலக்குமது
காட்டாறாய்ப் பொங்கிப் பிரவகிக்கும்போது
மூச்சுத்திணறி நிற்கும் பொழுதுகளில்
அருவியாய்ப்பொழிந்து
உருட்டிச்செல்கிறாய் என்னை..
பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து
மெல்லக் கண்பொத்தி
கன்னம் கடித்த தருணங்களில்
சீறிச்சினந்ததைப் பொருட்படுத்தாமல்
சில்லறையாய்ச் சிதற விடும் சிரிப்பால்
தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை..
சுமக்க இயலாமல்
எங்கேனும் எவரிடமேனும்
இறக்கி வைக்க முயலுந்தோறும்
பேரன்பாய்ப் பல்கிப்பெருகுவதும்
ஓராயிரம் வலிகளையும்,
சுமைகள் தந்த காயங்களையும்
துடைத்துப்போடும் மாமருந்தாய்
இருப்பதுவும்
அன்பெனும் மந்திரச்சொல்லுக்கே சாத்தியமென்று
என்றுமே நிரூபிக்கிறாய்
என் தேவதையே..
என் வானிற் பூக்கச்செய்த வானவிற்களின் மூலம்..

டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

10 comments:

ஆத்மா said...

ஆரோக்கியமான வரிகள்.....அருமையாக இருக்கிறது

ராமலக்ஷ்மி said...

அன்பால் மட்டுமே உலகம் அழகாக இருக்கிறது. கவிதை பேரழகு.

Yaathoramani.blogspot.com said...

சுமக்க இயலாமல்
எங்கேனும் எவரிடமேனும்
இறக்கி வைக்க முயலுந்தோறும்
பேரன்பாய்ப் பல்கிப்பெருகுவதும்
ஓராயிரம் வலிகளையும்,
சுமைகள் தந்த காயங்களையும்
துடைத்துப்போடும் மாமருந்தாய்
இருப்பதுவும்
அன்பெனும் மந்திரச்சொல்லுக்கே சாத்தியமென்று
என்றுமே நிரூபிக்கிறாய்

மனம் கொள்ளை கொண்ட
அருமையான வரிகள்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 3

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகு...

கோமதி அரசு said...

சுமைகள் தந்த காயங்களையும்
துடைத்துப்போடும் மாமருந்தாய்
இருப்பதுவும்
அன்பெனும் மந்திரச்சொல்லுக்கே சாத்தியமென்று
என்றுமே நிரூபிக்கிறாய்
என் தேவதையே..//

அருமையான கவிதை.
அன்பு நல்ல மருந்து தான்.

சா.கி.நடராஜன். said...

மிகவும் அருமையான கவிதை
படம் கூடுதலாக பலத்தை சேர்க்கின்றது
வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

VijiParthiban said...

அருமையான கவிதை.வாழ்த்துகள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மனதை வருடும் கவிதை

சாந்தி மாரியப்பன் said...

வாசித்துக் கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி..