Pages

Sunday, July 15, 2012

நட்ட ஈடு

படம் தந்த இணையத்திற்கு நன்றி
பொருள் வழிப்பிரிந்ததினால்
சேர்ந்து களிக்காமல்
மகன் கணக்கில்
இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம்
ஈடு செய்து கொண்டிருக்கிறார்
முதுமையில்,
பேரனுடன் விளையாடும் தாத்தா.
மேலும் கடனாய்
முத்தங்களை வாங்கியபடி.
லேசான மனங்களைப்போல்
உயரே பறக்கிறது காற்றாடி
வாலை வீசி... வீசி.

டிஸ்கி: கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சந்தோசமான பருவம் அது தானே...
நன்றி... வாழ்த்துக்கள் ! (TM 2)

கவி அழகன் said...

Valthukkal

Yaathoramani.blogspot.com said...

படம் தந்த இணையத்திற்கு நன்றி
பொருள் வழிப்பிரிந்ததினால்
சேர்ந்து களிக்காமல்
மகன் கணக்கில்
இளமையில் எழுதிய நட்டத்திற்கெல்லாம்
ஈடு செய்து கொண்டிருக்கிறார்
முதுமையில்,//

அருமை அருமை
எல்லோருடைய கதையும்
அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

பேரன் பேத்திகளுடன் இருக்கும் போது தாமும் குழந்தைகளாகி விடுகின்றனர் தாத்தா பாட்டியர். பாசப் பரிமாற்றத்தைக் காணவும் கண்கோடி வேண்டும்:). அழகான கவிதை சாந்தி.

கீதமஞ்சரி said...

சில கணக்குகள் துரதிஷ்டவசமாக என்றுமே நேர்சீர் செய்யப்படாமல் நிலைதவறிப் போய்விடுகின்றன. இந்தக் கவிதைக்கணக்கு மனம் இலகுவாக்குகிறது. பாராட்டுகள் அமைதிச்சாரல்.

VijiParthiban said...

//முதுமையில்,
பேரனுடன் விளையாடும் தாத்தா.
மேலும் கடனாய்
முத்தங்களை வாங்கியபடி.
லேசான மனங்களைப்போல்
உயரே பறக்கிறது காற்றாடி//
மிகவும் அருமை சாந்தி அக்கா...

அம்பாளடியாள் said...

பேரனுடன் விளையாடும் தாத்தா.
மேலும் கடனாய்
முத்தங்களை வாங்கியபடி.
லேசான மனங்களைப்போல்
உயரே பறக்கிறது காற்றாடி
வாலை வீசி... வீசி.

அருமையான கற்பனை வளம்
வாழ்த்துக்கள் .

ராஜி said...

அதென்னமோ எல்லா ஆன்களும் பிள்ளையைவிட பேரப்பிள்ளைகளைத்தான் கொஞ்சுறாங்க. வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாசித்துக் கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி..