சிக்கல்களை விடுவித்துக்கொண்டே
மேலும்
சிக்கலாக்கிக்கொண்ட பாதையொன்று
புதிர்களைப் புதைத்துக்கொண்டு
காத்திருக்கிறது
ஒரு திடுக்கிடலுக்காய்..
சரியானதென்று நம்பிச்சென்ற
பாதைகளெலாம் கை விட்டு விட
தயக்கத்துடன் கையிலெடுத்தவையோ
முன்னெடுத்துச்செல்கின்றன நம்பிக்கையுடன்.
சுற்றிச்சுற்றி,
ஆரம்பப்புள்ளியிலேயே மறுபடியும் குவிந்து,
இன்னும் இன்னுமென்று
மனதின் விரல்பிடித்து அடைந்த இலக்குகள்
பொக்கிஷமாய்த் தம்முள் வைத்திருந்த
உலைக்குமிழி உற்சாக நொடிகளில்
வாழ்ந்து முடித்துவிட்டு,
இலை மறைத்த வெற்றிக்கனியை
இனம்காணும் சூட்சும ருசி காண
மறுபடியும் புறப்படுகிறேன்
வேட்டைக்கு..
மேலும்
சிக்கலாக்கிக்கொண்ட பாதையொன்று
புதிர்களைப் புதைத்துக்கொண்டு
காத்திருக்கிறது
ஒரு திடுக்கிடலுக்காய்..
சரியானதென்று நம்பிச்சென்ற
பாதைகளெலாம் கை விட்டு விட
தயக்கத்துடன் கையிலெடுத்தவையோ
முன்னெடுத்துச்செல்கின்றன நம்பிக்கையுடன்.
சுற்றிச்சுற்றி,
ஆரம்பப்புள்ளியிலேயே மறுபடியும் குவிந்து,
இன்னும் இன்னுமென்று
மனதின் விரல்பிடித்து அடைந்த இலக்குகள்
பொக்கிஷமாய்த் தம்முள் வைத்திருந்த
உலைக்குமிழி உற்சாக நொடிகளில்
வாழ்ந்து முடித்துவிட்டு,
இலை மறைத்த வெற்றிக்கனியை
இனம்காணும் சூட்சும ருசி காண
மறுபடியும் புறப்படுகிறேன்
வேட்டைக்கு..
டிஸ்கி: இக்கவிதையை ஆகஸ்ட் 2012 இதழில் வெளியிட்ட கவி ஓவியா இதழுக்கு நன்றி.
10 comments:
அருமை...
கவி ஓவியா இதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...
அற்புதமான கவிதை..
வாழ்த்துக்கள்...
/தயக்கத்துடன் கையிலெடுத்தவையோ
முன்னெடுத்துச்செல்கின்றன நம்பிக்கையுடன்./
அருமை சாந்தி. நல்ல கவிதை. கவி ஓவியா வெளியீட்டுக்கும் வாழ்த்துகள்!
வாங்க தனபாலன்,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க சௌந்தர்,
வாசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.
வாங்க ராமலக்ஷ்மி,
வாசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வெற்றிக்கனியை ருசித்தீர்களா ?
புத்துணர்வுக் கவிதைக்கு வாழ்த்துகள்
நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.
கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி :-)
Post a Comment