படத்தை இரவல் தந்த இணையத்துக்கு நன்றி
வென்று விட்டதாய்ப்பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்.
வீழ்த்தி விடும் முனைப்புடன்,
கனிந்தெரியும் அகம்பாவத்தில்
கூர் தீட்டப்பட்ட
வாணங்களனைத்தும்
பசி மீறிய நொடிகளில்
படைத்தவனையும் சேர்த்தே புசித்து விட,
சன்னதம் கொண்டாடும் யுத்த குண்டத்தில்
ஆகுதியாய்ப் பெய்த வார்த்தைகளனைத்தும்
பொசுங்கிய சாம்பலினின்று
உயிர்த்தெழுகிறது ஓர் வெள்ளைப்புறா..
டிஸ்கி: ஆகஸ்ட்-2012 இதழில் இக்கவிதையை வெளியிட்ட வடக்கு வாசல் இதழுக்கு நன்றி.
13 comments:
அற்புதமான கவிதை. வடக்கு வாசலிலேயே வாசித்து விட்டிருந்தேன். வாழ்த்துகள் சாந்தி.
வென்று விட்டதாய்ப்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்.//
நிச்சயமாக
மனம் கவர்ந்த அருமையான கவிதை
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 2
அருமையான கவிதை..வாழ்த்துகள்
நல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
படம் சூப்பர்... கவிதைக்கேற்ற படம்... இணையத்திற்கு நன்றி சொல்ல வேண்டியது தான்... (இணைத்த தங்களுக்கும்)
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
உங்களின் கவிதை நூலின் தலைப்பாகவும் இக்கவிதை அமையலாம். வாழ்த்துக்கள் சாந்தி..
வாங்க ராமலக்ஷ்மி,
வாசித்தமைக்கு மிக்க நன்றி.
வாங்க ரமணி,
வாசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வாங்க பாசமலர்,
வாசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வாங்க தனபாலன்,
வாசித்தமைக்கு மிக்க நன்றி.
வாங்க மாதேவி,
வாசித்தமைக்கு மிக்க நன்றி.
வாங்க இளங்கோவன்,
வாசித்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
Post a Comment