Pages

Wednesday, October 10, 2012

கையறு நிலையில்..

இணையத்தில் சுட்ட படம்..
“எப்போதான் கண் திறந்து 
பார்க்கப்போறியோ?”
அங்கலாய்த்த பக்தனுக்குக்
கூரையைப்பிய்த்துக்கொண்டாவது
உதவிடும் துடிப்பில்
ஓடி வந்த கடவுள்
பேச்சற்று நின்றார்..
பிய்ப்பதற்குப்
பொத்தல் கூரைக்கும் வழியின்றி
வானமே கூரையாய்
உறங்கும்
நடைபாதை வாசியாய்க்கண்டு.

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கற்பனை வரிகள்...

சசிகலா said...

ஊமையாய் போன தெய்வம் உண்மை தான்.

ராமலக்ஷ்மி said...

வலிக்கும் நிதர்சனம்.

நல்ல கவிதை சாந்தி!

இராஜராஜேஸ்வரி said...

கலங்கவைக்கும் கையறு நிலை..

பால கணேஷ் said...

குறைவான வரிகளில் நிறைவான கவிதை சாரலம்மா... அருமை.

Yaathoramani.blogspot.com said...

படமும் அதற்கான அசத்தலான கவிதையும்
தலைப்பும் மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றி :-)