பிளிறலுடன் நிலையத்தினுள்
டிஸ்கி: கவிதையை வெளியிட்ட இன் அண்ட் அவுட் சென்னை இதழுக்கு நன்றி.
நுழைந்தது ரயில்
மதம் பிடித்ததுவோ
எனவஞ்சும்படி
ஆர்ப்பரித்துக்கொண்டு.
அரைகுறை உறக்கத்தில்
ஒவ்வொரு இலையாயுதிர்த்துக்கொண்டிருந்த
அரச மரமொன்று
தடதடவென அகிலமெங்கும்
கிடுகிடுத்ததில்
சரசரவென வியர்த்துக் கொட்டியது
இலைத்துளிகளை
மடியில் உறங்கிக்கொண்டிருந்த
நாய்க்குட்டியின்
மேல்..
அதிகபட்ச எதிர்ப்பாய்த்
திரும்பிப்படுத்துறங்குதலைக்
காட்டிய
நாயிடம் கோபித்துக்கொண்டு
வெளியேறிக்கொண்டிருந்தது
ரயில்
புயலென
கைகாட்டி மரத்தின்
அசைவுக்கு
மனிதர்களை
உதிர்த்து விட்டு..டிஸ்கி: கவிதையை வெளியிட்ட இன் அண்ட் அவுட் சென்னை இதழுக்கு நன்றி.
1 comment:
மிக அருமையான கவிதை, சாந்தி. ஒவ்வொரு வரியையும் ரசித்தேன். இன் அன்ட் அவுட் வெளியீட்டுக்கு வாழ்த்துகளும்.
Post a Comment