Pages

Friday, April 26, 2013

தாயம்.. (அதீதத்தில் வெளியானது)

களத்திலிறங்கிய காய்
பழமாகவில்லையாம்..
விரும்பிய எண் வரவில்லையென
சபிக்கிறார் பகடைக்காய்களை,
உருட்டியதே தான்தானென்பதை
மறந்து விட்டு.
கிடைத்த புதையல்
ஆணாக இல்லையாம்..
பிறந்தது பெண்ணென்று
வெறுக்கிறார்
பெற்றதே தான்தானென்பதை
வசதியாய் மறந்து விட்டு.
சபிக்கப்பட்டவர்களாய்
ஒதுங்கிக்கிடந்த காயும்
ஒதுக்கப்பட்ட பெண்ணும்
கிடைத்த துரும்பையூன்றி நகர,
தாயப்பகடையுருட்டி
சிம்மாசனத்தில் அமர்த்தியது காலம்..
உரிமை கொண்டாடி மார்தட்டிக்கொண்டும்
சாமரம் வீசிக்கொண்டும்
காலடியில்
விழுந்து கிடக்கும்
பச்சோந்திகளைத்தாண்டிச் செல்கின்றன
மேலும் சில காய்கள்,
காலம் மட்டும்
இன்னும் அதே நேர்ப்பார்வையில்..

டிஸ்கி: வெளியிட்ட அதீதம் மின்னிதழுக்கு நன்றி.

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// காலம் மட்டும் நேர்ப்பார்வையில்... ///

அருமை... தொடர வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

தாயக் கட்ட விளையாட்டின் ஒப்புமை கூறி நீங்கள் சொல்லிய விஷயம் அருமை! பெண்ணைப் பெற்றவர்களின் மனநிலை இப்போது சற்று மாறி வருகிறது என்றாலும் முற்றிலும் மாறவில்லை என்பதே நிஜம். மனதைக் கவர்ந்தது இந்தக் கவிதை! உங்களுக்கு என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை, சாந்தி.