காற்று வந்து சீண்டும் பொழுதிலும்
கற்கள் விழுந்து வைக்கும் போதுகளிலும்
கலங்கிக் கலைந்து அலைக்கழிப்புற்றாலும்
கோபத்தின் அடையாளமாய்
புருபுருவென்ற முணுமுணுப்போடு
அலைக்கரம் கொண்டு காயம் தடவி
தானாகவே சமாதானமாகியும் கொள்கிறது அது
அதன் பாட்டிற்கு இருந்ததைக்
கலைத்து விட்டு
“இனி அதன் பாடு” என்ற உதட்டுச்சுழிப்போடு
அடுத்த குளத்தைக் கலைக்க
போய்க்கொண்டிருக்கிறது காற்று
உடைந்த சூரியத்துணுக்குகளை அள்ளிக்கொண்டு
அலையலையாய்த் துரத்திக்கொண்டு வருகிறது குளம்.
பி.கு: கவிதையை வெளியிட்ட அதீதத்திற்கு நன்றி..
11 comments:
மிக மிக அருமை
குளத்திற்கான குறியீட்டை
சிந்திக்க சிந்திக்க பொருள்
விரிந்து கொண்டே போகிறது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
அருமை
அருமை...
அதீதத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...
அருமை.
/
உடைந்த சூரியத்துணுக்குகளை அள்ளிக்கொண்டு
அலையலையாய்த் துரத்திக்கொண்டு வருகிறது குளம்./
இரசித்த வரிகள்.
அருமையான கவிதை.
சும்மா இருந்ததன் சித்தம் கலைத்துவிட்டுப் பித்தாக்கிப் போகும் காற்றைத் தொடரும் குளத்தின் சலன நிலை கண்டு வாசக மனத்துள்ளும் சலனம். அழகான வரிகள். பாராட்டுகள் சாந்தி.
அனைவருக்கும் நன்றி..
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது, வாழ்த்துகள்.
மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும் நன்றி.
வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html
வணக்கம
இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோமுகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_14.html?showComment=1392345054173#c3645696457445373131
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காற்று குளத்தைமட்டுமல்ல மரத்தையும் சும்மா இருக்க விடாது !
குடிகாரக் கணவனின் மனைவிகளுக்காக என் பதிவு ......http://www.jokkaali.in/2014/02/blog-post_5018.html
பிங்க் நிற சோளிக்குள் இருப்பதை புரிய வைக்க வருகிறார் மாதுரி
Post a Comment