கண்ணுக்குத்தெரியாத
தளைகளால்
பிணைக்கப்பட்டிருக்கிறேன்..
பூட்டுகள் எதுவும்
இல்லைதான்...
ஆனாலும்
விடுபடவும் முடியவில்லை!!!!
உனது விருப்பங்களெல்லாம், என்றோ
எனது
விருப்பங்களாகிவிட்டன:
எனக்கென்று ஓர் மனம்,
அதை நினைத்ததேயில்லை நீ..
எனக்கான
பிறரது கேள்விகளுக்கு;
பதில் சொல்லும் குரலாக
உன் குரல் மட்டுமே ஒலிக்கின்றது.
குனிந்து கொடுத்தே குறுகிப்போன
முதுகின் மேல்,
ஏற்றப்படுகின்றன
வேண்டியமட்டும் பாரங்கள்;
சுமந்தே களைத்துப்போன
என்னைக்காட்டி
பெருமையடிக்கிறாய்:
சுதந்திரமாய் வைத்திருப்பதாக!!!!
ஆணுக்கும் பெண்ணுக்கும்
இங்கே அளவுகோல்
வேறாக இருக்கும்வரை
எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..
16 comments:
அருமை அமைதிச்சாரல்! கடைசி கேள்வி இன்னும் எனக்குள் எதிரொலிக்கிறது!
வாங்க சந்தனமுல்லை,
அதை யோசித்ததால் வந்த சிந்தனைகளைத்தான் எழுதிட்டேன்ப்பா..
வந்ததுக்கு நன்றி.
அருமை அமைதிச்சாரல்!
//சுதந்திரமாய் வைத்திருப்பதாக!!!!//
//எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..//
இதே கேள்வியைத்தான் நானும் எழுப்பியுள்ளேன் எனது இன்றைய பதிவில்!
வாங்க ராமலஷ்மி மேடம்,
படித்தேன்.சீக்கிரமே விடைகிடைக்கும்ன்னு நம்புவோம்.
வருகைக்கு நன்றிங்க.
//ஆணுக்கும் பெண்ணுக்கும்
இங்கே அளவுகோல்
வேறாக இருக்கும்வரை
எதைச்சொல்வாய் நீ??
உண்மையான சுதந்திரமென்று??!!!..//
எல்லாப்பெண்களின் மனசிலும் இருக்கிற கேள்வி...
கவிதை அருமை அமைதிச்சாரல்!
வாங்க சுந்தரா,
முதல்வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.
பதிலும் கிடைச்சுடும்ன்னு நம்புவோம்.
மிகவும் அருமை ! வாழ்த்துக்கள் !
வாங்க பனித்துளி சங்கர்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க தியாவின் பேனா,
முதல்வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
good..........
supper....supper
you come to my side
I expect.......
வாங்க விடிவெள்ளி,
முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
நீங்க சொல்லிட்டீங்க......
வாங்க கண்ணகி,
விரைவில் மத்தவங்களும் சொல்வாங்க.
நன்றிங்க.
குனிந்து கொடுத்தே குறுகிப்போன
முதுகின் மேல்,
ஏற்றப்படுகின்றன
வேண்டியமட்டும் பாரங்கள்;
கவிதை சூப்பர்!!!
வாங்க கவிதன்,
நன்றிப்பா.
Post a Comment