Pages

Thursday, April 29, 2010

எதிர்காத்து.

வரதட்சணையா
வாங்கியதெல்லாம்;
வட்டிக்கடைக்கு போயாச்சு.
ஆசைப்பட்டு கொடுத்ததெல்லாம்
ஆடம்பரமா தீர்த்தாச்சு..

மாமனார் வீட்ல
பசை கொஞ்சம் கூடுதல்.
கொஞ்சம்போல வழிச்சுக்க,
வழியென்ன இருக்கு?????...

'ஒன்னோட பொறந்த வீட்ல
பாகப்பிரிவினையாமே??.
ஒம்பங்கையும் வாங்கியா...'

கழுத்தைப்பிடித்து
வெளியே தள்ள;
கதவைத்திறந்தவன் திகைத்தான்.

'வந்தா சொத்தோட வான்னு
விரட்டீட்டாரு எம்புருசன்'
நின்றிருந்தாள் தங்கச்சிக்காரி,
கண்ணைக்கசக்கியபடி.

காற்று எப்போதும்
ஒரே திசையில் வீசுவதில்லை.

15 comments:

நசரேயன் said...

எதிர் காத்து பலமா இருக்கு

//கவிதை சொன்னவர்கள்//
கும்மி அடித்தவர்கள் !!!

பத்மா said...

மாமனார் வீட்டு சொத்தை தின்னும் ஜன்மம்லாம் என்ன ஜென்மமோ
கவிதை நல்ல இருக்கு

சந்தனமுல்லை said...

கலக்கல்! :-) நச்-னு இருக்கு!

மதுரை சரவணன் said...

//காற்று எப்போதும்
ஒரே திசையில் வீசுவதில்லை.//
s when it comes to us than only v realise it.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

ஆமாம்ப்பா.. சிலசமயம் சூறாவளியே அடிக்கும்.

//கும்மி அடித்தவர்கள் !!//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பத்மா,

சில ஜென்மங்கள் இப்படியும் இருக்கத்தான் செய்யுது.

ரசிப்புக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதுரை சரவணன்,

கரெக்ட்.. காலைல அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுத்தா, சாயந்திரமே ஆப்பு திரும்பவரும்ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காரே!! :-))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

கருத்துக்கு நன்றிங்க.

sury siva said...

// காற்று எப்போதும்
ஒரே திசையில் வீசுவதில்லை//


காசாசை பிடித்தவனெல்லாம்
ஒரே கோட்டில் நிற்பதில்லை.

சுப்பு ரத்தினம்.

vinthaimanithan said...

என்னங்க பண்றது? வரதட்சிணை கொடுத்து கல்யாணம் பண்ண மாட்டேன்னு எத்தன பொண்ணுங்க சொல்றாங்க? நேத்து ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன். அழகான, அறிவான, அற்புதமான் பொண்ணு.. ஆனா அந்த கல்யாணம் நடந்த விதத்தைப் பார்த்து எனக்குள் பல சிந்தனைகள்... இதைப் பற்றி கூடிய விரைவில் தனிப் பதிவு போடணும்னு நினைச்சிருக்கேன். நெஞ்சு பொறுக்குதில்லையே!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா,
மீனாட்சி அம்மா நலமா..

ரொம்பச்சரி நீங்க சொல்லியிருக்கிறது.எவ்வளவு கொடுத்தாலும் திருப்தியிருக்காது காசாசை பிடித்த மனிதர்களுக்கு.

முதல்வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க விந்தை மனிதன்,

ஆண்களும், அவங்களைப்பெற்ற பெண்களும் நினைச்சா நடக்கும். சீக்கிரமே தனிப்பதிவு போடுங்க... படிக்க காத்திருக்கிறோம்.

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் பஞ்ச் கவிதை

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

இப்படிப்பட்ட ஆளுங்களை பஞ்சர் பண்ணமுடியல்லைன்னுதான் பஞ்ச் கவிதை எழுதிட்டேன் :-)))

வரவுக்கு நன்றி.

cheena (சீனா) said...

இதுக்கெல்லாம் என்னிக்குத் தான் முடிவு காலமோ தெரில - ம்ம்ம் என்ன பண்றது ....