ஓடுவதற்குத்தயாராய்
வரிசையில்
பந்தயக்குதிரைகள்:
எண்களுக்குப்பதிலாக
மருத்துவம் என்றும்,
பொறியியல் என்றும்,
சட்டம் என்றும்,
பெயர்கள்
தாங்கி நிற்கின்றன.
என்னதான் கணக்கிட்டாலும்,
எந்தக்குதிரையில்
அதிக லாபம் வரும்
என்னும் விகிதம் மட்டும்;
ஒன்றைவிட ஒன்று மேலாகவே இருக்கிறது.
கொள்முதல் நிறைய விழுங்கினாலும்;
கல்யாணச்சந்தையில்
லாபம் கிடைத்துவிடாதா என்ன????
இன்ன பிறவெல்லாம்
கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை!!
ஏனெனில்;
லாபமில்லா மட்டக்குதிரைகளாம்
அவை!!,
உலகத்தின் கணக்கில்.
20 comments:
//ஓடுவதற்குத்தயாராய்
வரிசையில்
பந்தயக்குதிரைகள்:
//
ஏன் உங்க கவுஜையப் படிச்சிசோ?
//
கொள்முதல் நிறைய விழுங்கினாலும்;
கல்யாணச்சந்தையில்
லாபம் கிடைத்துவிடாதா என்ன????
//
மொய் அதிகமா வந்தா லாபம் தான்
//Labels: கவித மாதிரி..//
உங்க தைரியத்துக்கு ஒரு பாராட்டு
நல்லாருக்குங்க.
உலகின் கணக்கை உள்ளபடி சொல்லி விட்டிருக்கிறீர்கள் சாரல்.
வாங்க நசரு,
வரிவரியா ஆழ்ந்து படிச்சிருக்கீங்கன்னு தெரியுது :-))) நன்றிப்பா.
வாங்க ராஜாராம்,
நன்றி சகோதரரே.
வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க.
//கொள்முதல் நிறைய விழுங்கினாலும்;
கல்யாணச்சந்தையில்
லாபம் கிடைத்துவிடாதா என்ன????//
இயல்பான வடிவத்துல உண்மைய சொல்லியிருக்கீங்க.... கவிதை நல்லாருக்குங்க...
நல்ல கவிதைங்க... அருமை...
வாங்க பாலாசி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க அஹமது இர்ஷாத்,
நன்றிப்பா.
உண்மை தான் நண்பரே!
வாங்க ப்ரின்ஸ்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உண்மை தான்... நிதர்சனமும் அது தான்... என்ன செய்ய? காலம் மாறும் வரை காத்திருப்போம்...
வாங்க அப்பாவி,
தாமதமான பதிலுக்கு ஒரு ஸாரி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா.
LK
May 16, 2010 11:03 AM
//கொள்முதல் நிறைய விழுங்கினாலும்;
கல்யாணச்சந்தையில்
லாபம் கிடைத்துவிடாதா என்ன????
இன்ன பிறவெல்லாம்
கணக்கில் கொள்ளப்படுவதேயில்லை!!
ஏனெனில்;
லாபமில்லா மட்டக்குதிரைகளாம்
அவை!!,
உலகத்தின் கணக்கில்.//
நச்
எல்.கே,
ப்ளாக்கர் செஞ்ச சதியால் உங்க பின்னூட்டம் வெளியாக பிரச்சினை பண்ணிடுச்சு. ஸாரி.
ஊட்டத்துக்கு நன்றி.
தலைப்பின் புதுமையில் வார்த்தைகள் தலைமை . நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி !
வாங்க பனித்துளி,
ரசிப்புக்கு நன்றி.
வார்த்தைகள் உபயோகித்த விதம் அருமை சாரல்..
வாங்க மலிக்கா,
நன்றிங்க.
Post a Comment