இன்னுமொரு விடுமுறைதினம்.
திட்டம் போட்டாயிற்று,
விடிந்தபின்னரும்
இழுத்துப்போர்த்திக்கொண்டு தூங்க;
நினைத்த சீரியல் பார்க்க;
விதவிதமாய் விருந்துண்ண;
மதியத்தூக்கத்துக்கப்புறம்
காலாற நடந்துவர....
கீச் கீச் என்னும் குருவியும்,
மெல்ல வீசும் காற்றும்,
தலையாட்டும் இலையும் பூவும்,
கூவிக்கொண்டு செல்லும்
காய்க்கார அம்மாவும்,
அவரவர் உழைப்பில் கவனமாக
இருப்பதைக்காட்டி,
உழைப்பின் மதிப்பைச்சொல்லி
சுட்ட சூரியன்
மேற்கில் மறைந்தான்,
நாள்முழுதும் உழைத்த களைப்பில்.
விடுமுறை கிடைத்த ஆனந்தத்துடன்
சேர்ந்து கொண்டது,
மெல்லிய உறுத்தல்
உள்மனதில்;
வீட்டுப்பணிப்பெண்ணுக்கு
விடுமுறை அளித்திருக்கலாமே!
இன்று மட்டுமாவது.....
14 comments:
//வீட்டுப்பணிப்பெண்ணுக்கு
விடுமுறை அளித்திருக்கலாமே!//
அருமை
அதானே? ஆனால் அது வல்லிய உறுத்தல்!
:)
அழகா இருக்குங்க. உழைப்பாளர் தினத்துக்கு ஏத்தாப்ல ஒரு சூப்பர் பதிவு. வாழ்த்துக்கள்
//வீட்டுப்பணிப்பெண்ணுக்கு
விடுமுறை அளித்திருக்கலாமே!
இன்று மட்டுமாவது.....///
தேவையான உறுத்தல்தான்... கவிதை நல்லாயிருக்கு...
வாங்க எல்.கே,
நன்றிப்பா.
வாங்க ஷங்கர்,
எல்லாப்பண்டிகைக்கும் லீவு கொடுத்துவிடுவேன். நேத்திக்கும் லீவ் கொடுத்தும், எடுத்துக்கொள்ளல்லை அந்தப்பெண் :-(
நன்றிங்க.
வாங்க அப்பாவி,
நன்றிங்க.
வாங்க இர்ஷாத்,
நன்றிப்பா.
ரொம்பஅழகா இருக்குங்க...வாழ்த்துக்கள்...
தொடருங்கள்...
வாங்க கமலேஷ்,
முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.
நல்ல இளகிய மனதுங்க உங்களுக்கு
வாங்க பத்மா,
நன்றிங்க.
அமைதி சாரல் உங்க கவிதை ரொம்பா நல்லா இருக்கு...நான் எழுதினது படிச்சு அதுக்கு பதிலும் சொன்னிங்களே ரொம்ப நன்றி ...அப்புறம் நீங்க சொன்னது எனக்கு புரியலே "சகோதரி, கமெண்ட் மாடரேஷன் வெச்சிக்கிட்டு, word verification எடுத்துடுங்க,ப்ளீஸ்."
இது எப்பிடி பண்ணனம் சொல்லி தாங்க நான் மாத்திடறேன் .
வாங்க சந்தியா,
உங்க முதல்வருகைக்கு மொதல்ல நன்றி சொல்லிக்கிறேன்.
மாடரேஷன் ஈசியா செஞ்சுக்கலாம். முதல்ல உங்க ப்ளாக்கோட டேஷ்போர்டுல settings இருக்கில்லையா, அதை க்ளிக் செஞ்சுக்கோங்க. அதில் commentsன்னு ஒரு subtitle வரும். அதை க்ளிக் செய்யுங்க. அதிலுள்ள வசதிகளில் comment moderation க்கு நேரா always செலக்ட் செய்யுங்க. அதேமாதிரி show word verification for comments க்கு நேரா no செலக்ட் செய்யுங்க. இப்போ save changes ஐ க்ளிக் செய்யுங்க. அவ்வளவுதான்.
மாடரேஷன் வெச்சிக்கிட்டா, பின்னூட்டங்களை உங்க விருப்பம்போல் வெளியிடலாம்.
Post a Comment