சுயத்தை தொலைத்த
செயற்கை பூச்சுகளின் பின்னான முகம்
மறந்துதான் போகிறது.
எப்போதும் தயாராய்
சில முகமூடிகள்
மாட்டிக்கொள்ள தோதாய் .
தேர்ந்தெடுக்கும் குழப்பம்
எப்போதும் இருந்ததில்லை .
இருப்புக்கு தகுந்தாற்போல்
நொடிப்பொழுதில் மாறிவிடுகிறது,
பச்சோந்தியைவிட வேகமாக...;
எப்போதும் கிடைப்பவை
மலிவுவிலை புன்னகைகள் மட்டுமே.
சுமந்து திரியும் முகமூடிகள்
கழன்றுகொள்ளும் நேரங்கள்,
வலிமிகுந்ததாகவே இருக்கிறது
எப்போதும்!!!!
பொய்முகங்கள் தேவையில்லா
யாருமில்லா தனிவெளியில்,
கோரமாய் பல்லிளிக்கும் ;
ஒப்பனை கழுவப்பட்ட முகம்.
15 comments:
//பொய்முகங்கள் தேவையில்லா
யாருமில்லா தனிவெளியில்,
கோரமாய் பல்லிளிக்கும் ;
ஒப்பனை கழுவப்பட்ட முகம்.//
அருமை
//சுமந்து திரியும் முகமூடிகள்
கழன்றுகொள்ளும் நேரங்கள்//
ஆம் வலி மிகுந்த நேரம்தான். அத்தனை
வரிகளும் சாட்டையடி போல. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் சாரல்.
வாஸ்தவம்...நல்லா இருக்குங்க
வாங்க எல்.கே,
நன்றிப்பா.
வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க.
வாங்க அப்பாவி,
நன்றிங்க.
//எப்போதும் கிடைப்பவை
மலிவுவிலை புன்னகைகள் மட்டுமே.//
ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்.. :)
வாங்க ஆனந்தி,
வாழ்த்துக்களுக்கு நன்றிப்பா.
வாழ்கையே வலியாக கவிதை.. தொடருங்கள்..
அன்புடன்
www.narumugai.com
வாங்க நறுமுகை,
முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
இருப்புக்கு தகுந்தாற்போல்
நொடிப்பொழுதில் மாறிவிடுகிறது,
பச்சோந்தியைவிட வேகமாக...;///
கேட்டால் சூதகமா நடந்துக்கனுமாம் ....
இப்போதைய அறிவுரைகள் எல்லாம் நரியை போல் தந்திரமாக இரு என்று ...எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல்ல ...அசல் எது முலாம் பூசியது எது என்று கண்டுபிடிக்கவும் முடியல....
வாங்க ப்ரின்ஸ்,
//அசல் எது முலாம் பூசியது எது என்று கண்டுபிடிக்கவும் முடியல//
கண்டுபிடிக்க கூடாதுன்னுதானே முகமூடி போட்டுக்கிறாங்க :-(
நல்ல கவிதை...இதை படிக்கும் பொழுது நாசர் நடித்த ஒரு படம் நினைவிற்கு வருகிறது...
வாங்க ராசராசசோழன்,
எந்த படம்ன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுப்போம்.
வரவுக்கு நன்றி.
ஆம். முதன்முதலில் எப்போது தொலைத்தோம் என்பது கூட நினைவிலில்லை.
Post a Comment