அருகருகே அமர்ந்து
அலகுகள் உரசி,
அன்பைப்பரிமாறும்
அந்த மின்னல் கணங்களில்;
என்ன பேசிக்கொள்ளுமாயிருக்கும்
அந்த குருவிகளிரண்டும்?!!!
தானியம் கொத்தும்
அந்த
அவசரமான கணத்திலும்,
கீச்..கீச்.. என்ற செல்லச்சண்டைக்கிடையே
குளித்த இறகைக்கோதும்போது;
தெறித்த
ஒருதுளி சூரியனில்
பிரதிபலித்தன
ஆயிரம் வானவில்கள் !!....
எவரேனும் கவனிப்பதை,
முதுகில் உறையும் கண்களாய்
உணரும்
அந்த வெட்க தருணங்களில் ;
வால் முளைத்த காற்றாடியாய் பறந்தவை
உதிர்த்துச்சென்றன
ஒற்றை இறகை.....
அலகுகள் உரசி,
அன்பைப்பரிமாறும்
அந்த மின்னல் கணங்களில்;
என்ன பேசிக்கொள்ளுமாயிருக்கும்
அந்த குருவிகளிரண்டும்?!!!
தானியம் கொத்தும்
அந்த
அவசரமான கணத்திலும்,
கீச்..கீச்.. என்ற செல்லச்சண்டைக்கிடையே
குளித்த இறகைக்கோதும்போது;
தெறித்த
ஒருதுளி சூரியனில்
பிரதிபலித்தன
ஆயிரம் வானவில்கள் !!....
எவரேனும் கவனிப்பதை,
முதுகில் உறையும் கண்களாய்
உணரும்
அந்த வெட்க தருணங்களில் ;
வால் முளைத்த காற்றாடியாய் பறந்தவை
உதிர்த்துச்சென்றன
ஒற்றை இறகை.....
34 comments:
//ஒருதுளி சூரியனில்
பிரதிபலித்தன
ஆயிரம் வானவில்கள் !!...//
arumai saaaral
ஒற்றை இறகு மனத்தில் இசைக்கிறது.
அப்பா... என்ன ஒரு வரிகள்.... அழகா இருக்குங்க. அதுவும் அந்த //அந்த வெட்க தருணங்களில் ;// அற்புதம்
வாங்க எல்.கே,
நன்றிப்பா.
வாங்க மாதேவி,
நன்றிங்க.
வாங்க அப்பாவி,
ரசிச்சதுக்கு நன்றிங்க.
//எவரேனும் கவனிப்பதை,
முதுகில் உறையும் கண்களாய்
உணரும்
அந்த வெட்க தருணங்களில் ;
//
அழகு கவிதை
கவிதை மிகவும் அழகாக இருக்கிறது ...
வாழ்த்துக்கள்...
ஒற்றை இறகு சூப்பரா இருக்குங்க.. :)
வாழ்த்துக்கள்..
அழகான கவிதை. ரசித்து வாசித்தேன்.
//வால் முளைத்த காற்றாடியாய் பறந்தவை//
மிக அருமை அமைதிச்சாரல்.
வாங்க வேலு,
நன்றிங்க ரசிச்சதுக்கு.
வாங்க கமலேஷ்,
ரசனைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.
வாங்க ஆனந்தி,
முதல் வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிப்பா.
வாங்க ராமலஷ்மி,
ரசிச்சதுக்கு நன்றிங்க.
http://ithayathirudan.wordpress.com
வாங்க insight,
உங்க தளம் போய்ப்பார்த்தேன். அத்தனையும் அருமையா இருக்கு.
முதல்வரவுக்கு நன்றி.
ஸ்ருதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாங்க பத்மா,
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
ரசித்தேன் உங்கள் கவிதையை அப்படியே பின் தொடர்ந்து விட்டேன்,
கவிதை கலக்கலோ கலக்கல் ரசித்தேன் இனிமையாய்..
வாங்க ரியாஸ்,
நன்றிங்க.. ரசிப்புக்கும் தொடர்ந்ததுக்கும்.
வாங்க மலிக்கா,
நன்றிங்க.
கவிதை மிக அழகாய் இருக்கு அமைதி...
Lovely!
வாங்க மலிக்கா,
மீண்டும் நன்றிங்க.
வாங்க விக்னேஷ்வரி,
நன்றிங்க.
beautiful!
அப்படியே அந்த சீனுக்கு இழுத்துச் சென்று விட்டது கவிதை. வாழ்த்துக்கள்!
saaral
ungaluku oru viruthu
http://lksthoughts.blogspot.com/2010/06/blog-post_15.html
வாங்க மாதங்கி,
நன்றி.
வாங்க ஜனார்தனன்,
நன்றிங்க.
வாங்க எல்.கே,
விருதுக்கு நன்றி. வீட்டுல மாட்டியாச்சு.
அற்புதமான கவிதை..
வாங்க வைகறை நிலா,
நன்றிங்க.
Post a Comment