Pages

Saturday, June 19, 2010

வலம் வரும் நினைவுகள்...

Photobucket

புரியாத புதிரொன்றில்
மூழ்கி முத்தெடுத்து
மூச்சு முட்டி வெளியே வந்தேன்;
மறுபடியும் சிரித்து வைக்கிறாயே!!
இன்னொரு புதிராக;
திக்குமுக்காடிப்போகிறேன் நான்....

கன்னம்தொட்டு நீர் துடைத்து,
மடி தந்த அக்கணத்தில்;
மகளே,
தாயுமானாய் நீ;
கரைந்து போகிறேன்...

உயிரைப்பிய்த்துக் கொடுத்தபின்னான
வலியின் காயத்திற்கு
புன்னகை மருந்திடும்
இறக்கைகளில்லா செல்லதேவதை நீ;
லேசாகிப்போகிறேன்...

பாசமுடன் பாசாங்கும்காட்டி
பிரிந்து சென்ற
உன் இருப்பை உணர்த்திச்செல்கிறது,
வெற்றுக்கூட்டில் எதிரொலிக்கும்
நிசப்தமான கொலுசொலி;
எனது வெறுமைக்கு துணையாக..
பெருமூச்செறிகிறேன்......


(படம்: சுட்டது:-))

21 comments:

நசரேயன் said...

//(படம்: சுட்டது:-)) //

படம் மட்டுமா இல்லை கவுஜையுமா ?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

படம் மட்டும்தான் :-)))
கவுஜையை சிந்தனையில் சுட்டேன். நல்லா வ(வெ)ந்திருக்கா :-))))

ப்ரியமுடன் வசந்த் said...

பட செலக்சன் கிளாசிக்.. அந்தகுழந்தையின் உடல் முழுவதும் பொங்கி விழும் இலைகளை பார்த்து கொண்டே இருக்கிறேன் நல்ல ரசனை மேடம் உங்களுக்கு..

மகளை படிக்க ஹாஸ்டலுக்கு அனுப்பிவிட்டீர்களா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

படம் பிடிச்சிருக்கா!!..ஆஹா!! சந்தோஷம்..

கவுஜ படத்தைப்பாத்துதான் வந்தது :-))

எல் கே said...

கவிதை கவிதை


சாரல், ஏன்னா அச்சு, வர வர இரவ நேரத்தில்தான் அதிகம் இருக்கீங்க, எதாவது வெளிநாடு போயாச்சா ??

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

மழைகாரணமா வலை சிலசமயம் தகராறு செய்யுது. அதான் வலையுள்ளபோதே வீசிக்கொள்கிறேன்.இப்போதைக்கு நான் போன ஒரே வெளிநாடு கன்யாகுமரிதான்.எல்லாவிதமான நாட்டுமக்களும் இருக்கிறாங்க இல்லியா :-)))))

எல் கே said...

//மழைகாரணமா வலை சிலசமயம் தகராறு செய்யுது. அதான் வலையுள்ளபோதே வீசிக்கொள்கிறேன்.இப்போதைக்கு நான் போன ஒரே வெளிநாடு கன்யாகுமரிதான்.எல்லாவிதமான நாட்டுமக்களும் இருக்கிறாங்க இல்லியா :-))))///

sari sari.. illa only nite timethan unga commentslam varuthu athan ketten

prince said...

//கன்னம்தொட்டு நீர் துடைத்து,
மடி தந்த அக்கணத்தில்;
மகளே,
தாயுமானாய் நீ;
கரைந்து போகிறேன்...//

கரைந்தது! எங்களின் இதயமும் தான்,,

ராமலக்ஷ்மி said...

//வெற்றுக்கூட்டில் எதிரொலிக்கும்
நிசப்தமான கொலுசொலி;
எனது வெறுமைக்கு துணையாக..//

அருமையான வெளிப்பாடு. நெகிழ்வான கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ப்ரின்ஸ்

நன்றி வரவுக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

இந்த உணர்வை அனுபவிக்காதவர்களே இருக்கமுடியாது எனலாம்...இல்லியா!!

நன்றி.

அன்புடன் மலிக்கா said...

//வெற்றுக்கூட்டில் எதிரொலிக்கும்
நிசப்தமான கொலுசொலி;
எனது வெறுமைக்கு துணையாக..//

அழகிய வரிகள் சூப்பர்.
சாரல் சுகமாய் அடிக்குது..

கமலேஷ் said...

நன்றாக இருக்கிறது நண்பரே...வாழ்த்துக்கள்...

Meerapriyan said...

makalaip patriya kavithai...urukkam-meerapriyan

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மலிக்கா,

சாரலில் நனைஞ்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கமலேஷ்,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மீராப்ரியன்,

அந்த உறவே உருக்கமும் நெகிழ்வும் கலந்ததுதானே.

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

ஹேமா said...

முதல் வணக்கம் சாரல்

திக்குமுக்காடித் திணறலோடு தொடங்கிய கவிதை ஏன் நிசப்தமாகியது !
கவிதை நெகிழ்வு.

வைகறை நிலா said...

பாச உணர்வை மென்மையாக சொல்லும் அழகான கவிதை..

//வலியின் காயத்திற்கு
புன்னகை மருந்திடும்
இறக்கைகளில்லா செல்லதேவதை நீ; //
மிக அழகான வரிகள்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வெற்றுக்கூட்டில் நிசப்தம் மட்டும்தானே இருக்கும்...

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வைகறை நிலா,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.