Pages

Wednesday, August 18, 2010

முடிவற்ற போராட்டம்...


தூக்கம் தொலைத்த நள்ளிரவின்
நிசப்தமான பின்னணியில்..
அடங்கியெழும் மனஅலைகளில்
மிதந்து சென்றன;
நட்சத்திரங்களின் கிசுகிசுப்புகள்.

இரவின் மௌனங்களுடன்
போட்டி போட்டுக்கொண்டு,
இரைச்சலிட்ட மனதிலிருந்து
வழிந்தோடிய நதி
சங்கமமான கடலின் இடத்தில்,
ஒரு மடியை
நினைத்துப்பார்க்கிறேன்.

கிசுகிசுப்புகள்
இரைச்சலாக கூடியிருக்கும்போது
வெளுத்துக்கொண்டிருக்கிறது வானம்;
ஜன்னலுக்கு வெளியே...



17 comments:

VELU.G said...

//நிசப்தமான பின்னணியில்..
அடங்கியெழும் மனஅலைகளில்
மிதந்து சென்றன;
நட்சத்திரங்களின் கிசுகிசுப்புகள்.
//

கவித்துமான வரிகள் ரசித்தேன்

ராமலக்ஷ்மி said...

//நிசப்தமான பின்னணியில்..
அடங்கியெழும் மனஅலைகளில்
மிதந்து சென்றன;
நட்சத்திரங்களின் கிசுகிசுப்புகள்.//

நானும் இவ்வரிகளை மிக ரசித்தேன்.

//கிசுகிசுப்புகள்
இரைச்சலாக கூடியிருக்கும்போது
வெளுத்துக்கொண்டிருக்கிறது வானம்;
ஜன்னலுக்கு வெளியே...//

அழகு.

Anonymous said...

//நட்சத்திரங்களின் கிசுகிசுப்புகள்.//
செம சூப்பர்!
//கிசுகிசுப்புகள்
இரைச்சலாக கூடியிருக்கும்போது
வெளுத்துக்கொண்டிருக்கிறது வானம்;
ஜன்னலுக்கு வெளியே...//
ரொம்ப அழகா இருக்கு அமைதிச் சாரல்..

சந்தனமுல்லை said...

அழகா எழுதியிருக்கீங்க..அமைதிச்சாரல்! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்கு சாரல்.

தேவன் மாயம் said...

அழகான கவிதை!

Anonymous said...

அழகான கவிதை ரசித்தேன் தோழி நன்றி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேலு.ஜி.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முல்லை,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி சரவணா,

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேவன்மாயம்,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தியா,

நன்றிங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை அழகு..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்டார்ஜன்,

நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

கிசுகிசுப்புகள்
இரைச்சலாக கூடியிருக்கும்போது
வெளுத்துக்கொண்டிருக்கிறது வானம்;
ஜன்னலுக்கு வெளியே...//

யப்பா கற்பனையை விட்டு வெளியில வரவே பல நிமிடங்கள் ஆகிறது...!