Pages

Thursday, September 9, 2010

நகரமென்னும்...

அனுமதி கிடைத்ததும்
புற்றீசலாய் கிளம்பும் வாகனங்களினூடே
ஒரு கணம் தடுமாறி,
பின், தாமுமொரு ஈசலாய் பறந்ததுண்டா!!!

வழிப்பாதையில்,
அரை மில்லிமீட்டர் புன்னகையை..
தினம் பரிசளிக்கும் வேற்றுமுகத்தை;
அண்டை வீட்டினராய்
கண்டுபிடித்ததுண்டா!!!

துளசியும் மல்லிகையும்
தம் குணம் மாறி,
ஏதோவொரு மணத்தில்
தம்மிருப்பை தெரிவித்ததுண்டா!!!

விட்டு வந்த
வயலும் வீடும்;
குளமும்,...குயில் கூவும் தோப்பும்,
கனவுகளாய் இம்சிப்பதுவும்;
உதயங்களைக்காணும் ஆவல்
விடிந்து.. மறைவதுவும்,
செக்கிட்ட எள்ளாய் உள்ளம்,
திணறித்தெளிவதுவும்;
களிக்கவும், கழிக்கவுமான
பண்டிகைப்பொழுதுகளை
வரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...

ஏதேனும் ஒன்றை அனுபவித்திருந்தால்
உரக்கச்சொல்லுங்கள்;
நகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.


16 comments:

மதுரை சரவணன் said...

//ஏதேனும் ஒன்றை அனுபவித்திருந்தால்
உரக்கச்சொல்லுங்கள்;
நகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.//
கவிதை அருமை. வாழ்த்துக்கள்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

களிக்கவும், கழிக்கவுமான
பண்டிகைப்பொழுதுகளை
வரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான..///

yammadi கைகுலுக்கிறது என்ன வாழ்க்கையே நகரத்ததக்குத்தான் பட்டிருக்கோம். :)

ராமலக்ஷ்மி said...

//விட்டு வந்த
வயலும் வீடும்;
குளமும்,...குயில் கூவும் தோப்பும்,
கனவுகளாய் இம்சிப்பதுவும்;
உதயங்களைக்காணும் ஆவல்
விடிந்து.. மறைவதுவும்,
செக்கிட்ட எள்ளாய் உள்ளம்,
திணறித்தெளிவதுவும்;
களிக்கவும், கழிக்கவுமான
பண்டிகைப்பொழுதுகளை
வரவேற்பறை அரக்கன் கொண்டு செல்வதுவுமான...

ஏதேனும் ஒன்றை அனுபவித்திருந்தால்
உரக்கச்சொல்லுங்கள்;
நகரம், உங்களோடும் கை குலுக்கியிருக்கிறது.//

ஆமாங்க ஒன்றுக்கு மேலாகவே அனுபவித்துக் கொண்டிருப்பதை உரக்கச் சொல்லுகிறேன். மிக அருமையான கவிதை.

எல் கே said...

உங்கள் வார்த்தைகள் மெருகேறி உள்ளன சகோதரி.. வாழ்த்துக்கள். அருமை

ஹேமா said...

சாரல்...அனுபவித்து எழுதிய கவிதை.சொன்ன அத்தனையுமே உண்மை !

அன்புடன் மலிக்கா said...

சாரல் சரம் சரமாய் தூவுகிறது அழகாய் கவிதையை.

அருமையான கவிதை சாரல் அனுபவித்து உணர்வதுபோல்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மதுரை சரவணன்,

வருகைக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

'வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டா' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருது :-)))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

ஆமாம்ப்பா.. நகர வாழ்க்கையின் ஒரு பகுதிதானே இது :-))))))

நன்றி.

சாமக்கோடங்கி said...

நீங்கள் சொன்னது சரிதான்..

ப்ரியமுடன் வசந்த் said...

:))

நகரம் நிறையவே...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரகாஷ்(எ)சாமக்கோடாங்கி,

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

வருகைக்கு நன்றி.

நானானி said...

//களிக்கவும் கழிக்கவுமான பொழுதுகளை...//

யப்பா! உண்மையை அப்படியே புட்டு புட்டு வெச்சிட்டீங்ககளே!!

உண்மைதான் அதுக்குத்தான் கழுத்தை நீட்டியிருக்கிறோம்.
நல்லாருக்கு கவித.