Pages

Monday, September 20, 2010

உனக்கென்ன பிடிக்கும்??

மணாளனுக்கும், மக்கட்க்கும்
மதிப்பிற்குரிய மூத்தோருக்கும்
அவரவர் விருப்பத்தை
பரிமாறிய அன்னபூரணிக்கு
தன்விருப்பம் மறந்ததே நினைவில்லை..


திருப்தியான முகங்களிலேயே
சாபல்யமடைந்துவிடும் அவளிடம்;
யாரேனும் கேட்டிருக்கக்கூடுமோ
அவள் எதிர்பார்ப்பு என்னவென்று?


விசாரிப்புகளுக்கப்பாற்பட்டாலும்
ஏங்கியிருக்கக்கூடுமோ
மனத்தின்மூலையில் தவித்துக்கொண்டிருக்கும்
அந்தச்சிறுகுழந்தை..!!


கொள்ளாமல் நிரம்பிவழிந்தபோதிலும்,
என்றென்றும்
பாத்திரம் அறிந்ததில்லை
பதார்த்தத்தின் ருசி!!








31 comments:

எல் கே said...

annayin manam???

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதை.

//கொள்ளாமல் நிரம்பிவழிந்தபோதிலும்,
என்றென்றும்
பாத்திரம் அறிந்ததில்லை
பதார்த்தத்தின் ருசி!!//

அருமையாக உணர்த்தி விட்டீர்கள்.

சுந்தரா said...

//கொள்ளாமல் நிரம்பிவழிந்தபோதிலும்,
என்றென்றும்
பாத்திரம் அறிந்ததில்லை
பதார்த்தத்தின் ருசி!!//

:( நிஜமான நிஜம்...

கவிதை சூப்பர்ங்க.

ஆனந்தி.. said...

அமைதிசாரல்..எல்லா அம்மாக்களும் இதே தான்..நாமளும் கூட குழந்தையா இருக்கும்போது அம்மாக்கு இது பிடிக்குமான்னு யோசிச்சு பார்த்திருக்க மாட்டோம் இல்லையா?? அம்மா always இனிமை...உங்க கவிதை நல்லா இருந்தது...

Anonymous said...

//பாத்திரம் அறிந்ததில்லை
பதார்த்தத்தின் ருசி!!//
ரொம்ப நல்லாருக்கு சாரல் :)

Ahamed irshad said...

Super Lines..

thiyaa said...

நல்ல கவிதை

அதிரை என்.ஷஃபாத் said...

/***
பாத்திரம் அறிந்ததில்லை
பதார்த்தத்தின் ருசி!!
**/

எதார்த்தம்..

கவிதை அருமை..

www.aaraamnilam.blogspot.com

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Lovely post... reminds me of my amma

ப்ரியமுடன் வசந்த் said...

அருமை அன்னபூரணி :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

அதேதான் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

சின்னப்புள்ளையில நமக்கு, செஞ்சுவெச்சா முழுங்கறதைத்தவிர வேறென்ன தெரியும் :-)))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜிசரவணன்,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அஹமது இர்ஷாத்,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தியாவின் பேனா,

முதல்வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அருட்புதல்வன்,

உங்க தளத்துக்கும் போய்ப்பார்த்தேன்.. அத்தனையும் அருமை.

நன்றி.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க அமைதி சாரல்.

thiyaa said...

அருமை

வல்லிசிம்ஹன் said...

அம்மா எனறால் அன்பும் அன்னமும். மறக்க முடியாது. நல்லதொரு பெண்ணாய் இருந்து நல்லதொரு பெண்ணை வளர்த்தாலே போதும்.

ஹேமா said...

சாரல்...பெண்களுக்கே உண்டான சாபம் அல்லது கொடுத்துவைப்பில் இதுவும் ஒன்று !

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கமலேஷ்,

ரசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தியாவின் பேனா,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ரொம்ப சரியா சொன்னீங்க..ஹி..ஹி.

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

அப்படித்தான் போலிருக்கு :-)))

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

ஸ்வேதாக்கா,

வருகை தந்ததுக்கு நன்றி.

சிந்தையின் சிதறல்கள் said...

அருமையான வரிகள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

தொலைதூரத்தில் இருக்கும்போதுதான் நமக்கு உண்மையிலேயே அம்மாவின் அருமை புரியுது..:-))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

ரொம்ப நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நேசமுடன் ஹாசிம்,

முதல்வருகைக்கும் ரசிச்சதுக்கும் நன்றி.