Pages

Wednesday, October 6, 2010

அய்யோ..அய்யோ..அய்யோ....

கமலி வளர்த்த ஞமலி
ஓடிப்போயிற்றன்றொருகாலை;
சோறூட்டிப்பாராட்டினேனே
பிள்ளையைப்போல்
என்றவளரற்ற...
'சோறுதான் வெச்சியா??' என்றதற்கு
பாலும்சோறும் பதமாய்
வைத்தேன் தினமுமென்றாள்..

'வாலைப்போலவே நாவும் நீளமாயிற்றேயதற்கு!!
அமிர்தமேயாயினும்
அனுதினமும் உண்ணக்கூடுமோ??'
என்றதற்கு;..
'ஹி..ஹி..ஹி..' என்றவள்வழிய,
என் பதில் என்னவென்று,.. சொல்லவும் வேண்டுமோ!!!!!



28 comments:

எல் கே said...

mokkaiiii

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

என் கவுஜயை, மொக்கை என்று சொன்னதை கண்டிக்கிறேன். லேபிளில் நல்லாப்பாருங்க,.. மரணமொக்கைன்னு போட்டிருக்கேன் :-))))

நன்றி.

பவள சங்கரி said...

அய்ய.......மொக்கை....

Anonymous said...

//ஓடிப்போயிற்றன்றொருகாலை//
இதுக்குப் பேரு தான் டங் டிவிஸ்டர் ஆஆஆஆ!
முடியல :)

ஹேமா said...

சாரல்...மொக்கைக்குப் பிறகு மரணமொக்கைன்னு ஒண்ணு இருக்குன்னு இண்ணைக்குத்தான் தெரிஞ்சுகிட்டேன் தோழி.நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

வார்த்தைகளை கூட்டி எழுதிப்பார்த்தீங்களா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நித்திலம்- சிப்பிக்குள் முத்து,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாலாஜி சரவணா,

என்னாச்சு.. நாக்கு சுளுக்கிக்கிச்சா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

வெறும் மொக்கையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் ஒரு சிறிய முயற்சி :-))

பயந்துடாதீங்க,.. இது இனிமேல் தொடராது ;-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வசந்த்,

அதுவும்தான்,.. :-))

நன்றி.

சுந்தரா said...

:) கமலி,ஞமலி...நல்லாருக்கு.

கமலிகிட்ட காட்டினாலும் பரவால்ல, ஞமலிகிட்டமட்டும் கவிதையக் காட்டிராதீங்க :)

அன்புடன் மலிக்கா said...

என் கவுஜயை, மொக்கை என்று சொன்னதை கண்டிக்கிறேன். லேபிளில் நல்லாப்பாருங்க,.. மரணமொக்கைன்னு போட்டிருக்கேன் :-))))
//

அது.உண்மையை ஒத்துக்கிட்டதால
ஒரு சபாஷ் அமைதிச்சாரல்..

நல்ல மரணமொக்கையப்பா..

thiyaa said...

super

சந்திர வம்சம் said...

நல்லாத்தான் எழுதினீ க கவிதையை!!!!!!!!!

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஓடிப்போனவுக வந்தாச்சாங்க...??
:-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

ஹா..ஹா.. வேணாங்க. அது மறுபடியும் ஓடிப்போயிடும்..

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மலிக்கா,

புதுமுயற்சிக்கு சபாஷ் சொன்னதுக்கு நன்றி :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தியாவின் பேனா,

நன்றிங்க :-)))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்திரவம்சம்,

உங்களுக்கு பிடிச்சிருக்கா?? அப்ப, ஒண்ணும் பண்ணமுடியாது :-))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

பால்சோறு கசந்ததடின்னு ஓடிப்போனவங்க சிக்கன்,மீன்ன்னு எங்கே மொக்கிக்கிட்டிருக்காங்களோ.. அவங்க திரும்பி வர்றமாதிரி தெரியலை :-))))

அக்கறையா விசாரிச்சதுக்கு நன்றி :-))

Thanglish Payan said...

Its ok.

தமிழ்க்காதலன் said...

உங்கள் கவிதைகள் அருமை. உனக்கென்னப் பிடிக்கும், நிலவும் அவனும் அவளும், ஐய்யோ.... எல்லாமே நன்றாக இருக்கின்றன. உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கிறது. மிக்க நன்றி. வருகைத் தாருங்கள் ( ithayasaaral.blogspot.com )

நசரேயன் said...

விளக்கம் போட்டு ஒரு இடுகை போட்டா இன்னும் நல்லா இருக்கும்

Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

ஏங்க... ஓடிப்போனவுக இன்னுமா... வரலை...?? ஹ்ம்ம்..
போன இடத்துல நல்ல கவனிப்புத் தான் போல இருக்கு.. :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தங்க்லீஷ் பையன்,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ்க்காதலன்,

மிக்க நன்றி சகோதரரே..
கண்டிப்பா உங்க தளத்துக்கு வரேன்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசரேயன்,

உங்க மன உறுதியை பாராட்ட வார்த்தைகளே இல்லை :-))))))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

நல்லாவே செட்டில் ஆகிட்டாங்க போலிருக்கு. திரும்பி வர்ற வழியைக்காணோம் :-))))))))