Pages

Friday, November 19, 2010

ஒளிமழையில்...

மழையாய்ப்பொழியும்
நட்சத்திரங்கள்...
இருகரம் நீட்டி ஏந்தணும்;
ஊற்றுக்கண் திறந்த நெருப்பூற்றின்..
ஆரவாரத்தில் மகிழணும்..
காதுவலிக்க வெடிக்கவில்லை,
கந்தகப்புகை உண்டென்றாலும்;..
கவனமாய்க்கொஞ்சம் இருக்கணும்.

மூணாம் மாடியில் பாய்ந்ததினால்
மறுக்கப்பட்டது
ராக்கெட்டேயன்றி,..
எங்கள் மகிழ்ச்சியல்ல;
சிறுபொறியில்தான் ஆரம்பிக்கிறது
எந்தவொரு ஆர்ப்பரிப்பும்..

சூழலைமட்டும் கவனித்து
பட்டாசாய் வெடிக்கும் கனவான்களே..
எங்களையும்
ஒரு நிமிடம் நினையுங்களேன்.
காணாமற்போய்க்கொண்டிருக்கின்றன,
ஒவ்வொரு சந்தோஷமாய்;
எங்களுக்கான உலகத்திலிருந்து
பாம்புமாத்திரையாய்..

நாளைய கவலையில்
இன்றை மறந்திடாமல்,..
ஒளிமழையில் நனைந்திடவே,
நானும்தான் வாரேன்..
ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக்கோ...





17 comments:

ராமலக்ஷ்மி said...

//சிறுபொறியில்தான் ஆரம்பிக்கிறது
எந்தவொரு ஆர்ப்பரிப்பும்..//

அருமை.

நல்ல கவிதை சாரல்.

ஆனந்தி.. said...

நல்லா இருக்கு சாரல் சகோதரி...:))

எல் கே said...

arumai

ஸ்ரீராம். said...

சிறு பொறியில்தான்....பாம்பு மாத்திரை வரிகளை ரசித்தேன். அருமை.

சங்கரியின் செய்திகள்.. said...

நல்ல கவிதைங்க.......வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

ரசித்ததுக்கு நன்றி :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பத்மா,

நன்றிங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நி.சி.முத்து,

நன்றிங்க :-))

சுந்தரா said...

அழகான கவிதை சாரல், ரசித்தேன்.

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.

ரிஷபன் said...

சிறுபொறியில்தான் ஆரம்பிக்கிறது
எந்தவொரு ஆர்ப்பரிப்பும்..
கவிதையும் கூட!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

ரசித்ததுக்கு நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

சரியா சொன்னீங்க..

நன்றி.