Pages

Wednesday, January 12, 2011

ரயில் பெட்டியும், சில சில்லறைகளும்..

(படம் உதவி: கூகிள்)

பிளாஸ்டிக் பெட்டிகளுடன்
இரும்புப்பெட்டிக்குள்
கடைவிரிக்கும்
எதிர்கால தொழிலதிபர்கள்,
வழக்கமான வாடிக்கையாளருக்கென்று
திறந்துவைக்கும் சிறிய சாம்ராஜ்யத்தில்;
தொண்டை கிழிய
கத்தியபின்னும், மிஞ்சுகின்றன..
இன்னும் நிரம்பியிருக்கும் பெட்டிகளும்
ஒரு தேனீருக்கான
சில சில்லறைகளும்..

டிஸ்கி: இந்தக்கவிதையை வெளியிட்ட திண்ணைக்கு நன்றி..




24 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

அருமையாகவுள்ளது!!

Asiya Omar said...

அருமை சாரல்,திண்ணையில் வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள்.

dheva said...

எதார்த்தத்தின் வெளிப்பாடு.............! நம்பிக்கைதானே அவர்களை மட்டுமல்ல எல்லோரையும் நகர்த்துகிறது....

சமூக அவலங்களை மெல்லிய உணர்வை பரவவிடும் வகையில் சொல்றது கொஞ்சம் கஷ்டம் .....ஆன நீங்க செஞ்சு இருக்கீங்க...!

வாழ்த்துக்கள்!

ஆமினா said...

அருமையான வரிகள்

Unknown said...

சுருக்கமான பளீர் வரிகள்,
கவிதைக்கான களம் அருமை.
திண்ணையில் வெளியாமைக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

பொங்கல் மகிழ்ச்சி எப்போதும் நீடித்திருக்க வாழ்த்துக்கள்.
லேடிஸ் ஸ்பெஷலில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குணசீலன்,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேவா,

நிச்சயமா, நம்பிக்கைதான் அவங்களை நகர்த்துது.. ஓடற ரயில்ல, அதுவும் மும்பைக்கூட்டத்துல அவங்க ஏறுறதும், இறங்குறதும் துணிகரச்செயல்கள்..

வரவுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

நன்றிங்க..

ராமலக்ஷ்மி said...

இதுதான் வலிக்கின்ற உண்மையாக உள்ளது. நல்ல கவிதை.

திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்!

ரிஷபன் said...

மிக மிக அருமை..

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

அன்றாட வயிற்றுப் பிழைப்பிற்காக.. ஓடுற ரயிலில்..
இந்த மாதிரி ஏறி இறங்கி வியாபாரம் செய்றவங்களை பார்க்கும் போது,
கஷ்டமாத்தான் இருக்குங்க.. :(

அழகா.. எளிமையா.. சொல்லி இருக்கீங்க.. நன்றி..

ஹேமா said...

வாசிச்சேன் திண்ணையில் சாரல்.வாழ்வியலை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் தோழி !

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமையான வரிகள்...

நானானி said...

நல்ல பகிர்வு.
உண்மையில் இம்மாதிரி ‘தொழிலதிபர்களிடம்’தான் பெரிய கடைகளில் கூட கிடைக்காதவைகள் கிடைக்கும். இவர்களையும் நான் விட மாட்டேன். அவர்களின் சில்லறைகளில் நான் கொடுத்ததும் இருக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாரத் பாரதி,

மிக்க நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரிஷபன்,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ்திரை,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

இதுக்கிடையில் இவங்களுக்கிடையே இருக்கிற எல்லைப்பிரச்சினைகளையும் அழகா கையாளறாங்கப்பா..

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பிரஷா,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நானானிம்மா,

இங்கயும், நறுக்கிவெச்ச காய்கறிகள், பாப்பட், பழங்கள்ன்னு அழகா பாக்கெட் போட்டு கொண்டுவரச்சே, வேலைக்கு போற பெண்கள் அப்படியே அள்ளிட்டு வந்துடுவாங்க. வீட்டுக்கு வந்ததும், ஜஸ்ட்.. சமைக்கிற வேலைதான்..

மும்பை ரயில்களில் அஞ்சுரூபா சாதனங்கள் நிறையவே கிடைக்கும் :-))))

நன்றி.