Pages

Saturday, January 15, 2011

கீற்றென..


ஆதவனே நீ வாழி!!
கட்டிளம் காளை உனை
சுற்றும்.. எண்ணிலடங்கா கன்னியருள்,
நீ மாலைசூட்டியது
பூமிப்பெண்ணுக்கு மட்டுமே..
சோதரிக்கு துணைவந்த
சந்திரனையும்
அன்பளித்து வசப்படுத்தும் தந்திரம்,
உன்னிடம் மட்டுமேயுள்ளது..
எனினும்,
உன் முன்னால், அவன் வருவதேயில்லை,
உங்களுக்குள்ளும் வரப்புத்தகராறோ!!

பூமியின் வியர்வையை
திரவத்தங்கமாய்ப்பொழியவைக்கும்
செப்பிடு வித்தைக்காரனே!!
உக்கிரம் தாங்காமல்
சலித்திட்ட போதிலும்,..
உன்னை,
விரும்பியழைக்கின்றோமொரு,  மார்கழிக்குளிரில்;
அபகரணம் செய்யப்படுகிறாய்
சில பொழுதுகளிலெனினும்,
மீண்டு வந்து புன்னகைக்கிறாய்
கீற்றென..
பச்சையக்கூட்டணியுடன்
நீ நடத்தும் ஆட்சியில்,
இலவசங்களுக்கும் கணக்கில்லை..
உலகுக்கே படியளக்கும் ஆதாரசக்தியுன்னை
தெண்டனிட்டு வணங்குகின்றோம்..
வாழ்த்துகின்றோம்;
உனக்கென்றோர் பண்டிகையில்..


4 comments:

ஆமினா said...

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

படமும் தலைப்பும் வரிகளும் நன்று சாரல்! பொங்கல் வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் said...

சூரிய கவிதை நல்லாயிருக்குங்க...

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

ராமலஷ்மி,

கருணாகரசு..

வரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.